Archive For பிப்ரவரி 13, 2023

புது நாவல் ‘தினை’ – அத்தியாயம் இரண்டு – பூக்களின் நண்பன் -திண்ணை இணைய இலக்கிய இதழில்

By |

புது நாவல் ‘தினை’ – அத்தியாயம் இரண்டு – பூக்களின் நண்பன் -திண்ணை இணைய இலக்கிய இதழில்

மாடத்தி சொன்னாள் – ”இன்னிக்கும் தேனும் தினைமாவும் தான் காலை ஆகாரமாக கழிக்க வேண்டியிருக்கு. இந்த மாதம் நாலு விருந்தாளி வந்தாச்சு. யவனன், சீனன் என்று அவங்க எல்லோரும் நாம் தினம் சாப்பிடறது இதுதான், எது, தேன், தினைமாவு. இதைத் தான் வாழ்க்கை முழுக்க தின்னுட்டிருக்கோம்னு நினைக்கறவங்க”. ”அதை உறுதிப்படுத்த குரங்கு வாழைப்பழம் திங்கற மாதிரி அவங்க வந்து பார்க்கறபோது எல்லாம் இதை நாமும் சாப்பிட்டு அவங்களுக்கும் தரணும். ”போன மாதம் நீ வரலே அப்போ வந்த…




Read more »

தேளம்மை வந்த முதல் அத்தியாயம் – என் புது நாவல் – தினை

By |

தேளம்மை வந்த முதல் அத்தியாயம் – என் புது நாவல்  – தினை

திண்ணை இணைய இதழில் தொடங்கியிருக்கிறது என் அடுத்த நாவல் ‘தினை’ அத்தியாயம் ஒன்று // அழகான மனுஷித் தலையும் உடல் இறுதிப் பகுதியில் இன உறுப்பு படர்ந்திருக்க, பெருந் தொடைகள் உடையின்றி மின்ன, அங்கே கீழே தொடங்கிய வளைந்து நிமிர்ந்த கொடுக்கு உள்ளே கருநீல நிறத்தில் மின்னும் விஷத்தோடு ததும்ப பாதி தேளான தேளம்மை ஏமப் பெருந்துயில்-முன் அரங்கில் Pre-Cryostasis Bay கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தப்பட்டாள். ஏமப் பெருந்துயிலில் அமிழ இங்கே சிலர் காத்திருப்பில் – தொந்தரவு…




Read more »

என் புது நாவல் ‘தினை’ – பூர்வாங்கம், அத்தியாயம் ஒன்று

By |

என் புது நாவல் ‘தினை’ – பூர்வாங்கம், அத்தியாயம் ஒன்று

என் புது நாவல் தினை பூர்வாங்கம், முதல் அத்தியாயம் தமிழில் முதல் இணைய இதழ் திண்ணையில் பிரசுரமாகி உள்ளன. தொடர்ந்து வாராவாரம் நாவல் திண்ணையில் பிரசுரமாகும். வாசித்து இன்புறுவீர், கருத்துச் சொல்வீர் தினை – பூர்வாங்கம், அத்தியாயம் ஒன்று




Read more »

என் புதிய நாவல் தினை

By |

என் புதிய நாவல் தினை

புது நாவல் – தினை என் அடுத்த நாவல் ‘தினை’ வரும் வாரத்தில் இருந்து திண்ணை – முதல் தமிழ் இணையப் பத்திரிகையில் பிரசுரமாகிறது. சில குறிப்புகள் 1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் 2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது. நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது…




Read more »

மிளகு நாவல் வாசிப்பு அனுபவம் பற்றி நண்பர் ஜெயமோகன் இணைய தளத்தில் இருந்து

By |

மிளகு நாவல் வாசிப்பு அனுபவம் பற்றி நண்பர் ஜெயமோகன் இணைய தளத்தில் இருந்து

நண்பர் ஜெயமோகனின் இணைய தளத்தில் இன்று மின்பதிப்பிக்கப்பட்ட ‘மிளகு’ நாவல் மதிப்பீடு. நண்பர் ஷங்கர் பிரசாத் எழுதிய ‘மிளகு நாவல் வாசிப்பு’ . நன்றி ஜெயமோகன். நன்றி ஷங்கர் பிரசாத் //மிளகு நாவல் வாசிக்கையில் கலங்கலான பழைய மாயத்தன்மை கொண்ட காணொலியின் அன்றாடப் படுத்தப்பட்ட வடிவத்தை காணும் அனுபவமே ஏற்பட்டது, நாவலின் விவரணைகள் சமகாலத்தியவை ,கதை சொல்லும் காலத்துக்காக எந்த சமரசமும் இல்லாமல், கதை மனிதர்களையும் சூழல்களையும் சமகால நோக்கிலேயே அணுகுகின்றன, கிட்டத்தட்ட கணிப்பொறியின் செயற்கை அறிவுக்கு…




Read more »