Archive For பிப்ரவரி 7, 2013

Janakan to Dharumiஜனகனில் இருந்து தருமிக்கு

By |

சீதைக்கு ஜனகன் வளர்த்த தந்தை. ஊர்மிளாவுக்கு ஜனகன் பெற்ற தந்தை. சீதைக்கு ராமன் கணவன். ஊர்மிளாவுக்கு இலக்குவன் கணவன். ஜனகனுக்கு ராமனும் இலக்குவனும் மாப்பிள்ளைகள். ஆழி சூழ் உலகெலாம் பரதனே ஆள, தசரதன் கட்டளைப்படி ராமனும், கூடவே இலக்குவனும் ஏழிரண்டாண்டு கானகம் போக விதித்தபோது ஜனகன் என்ன செய்து கொண்டிருந்தான்? தசரதன் அயோத்திப் பேரரசன் என்றால் ஜனகன் மிதிலையரசன். சம்பந்தி, நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரியில்லே.. என் ரெண்டு மாப்பிள்ளைகளுக்கும் நீங்க செஞ்சது பச்சைத் துரோகம்னு…




Read more »

Thai kizhaviதாய்க் கிழவி

By |

<!--:en-->Thai kizhavi<!--:--><!--:ta-->தாய்க் கிழவி<!--:-->

பழந்தமிழ் இலக்கியத்தில் எனக்குப் புரியாதவள் ‘தாய்க் கிழவி’. பிரபந்தங்களில் கணிகை ஆடல் அழகியாக இளவயதினளாகச் சித்தரிக்கப்படுவாள். அவளுடைய தாய், கிழவியாக, க்ரூபியாக இருப்பாள். பாட்டுடைத் தலைவனுடைய மனத்தைக் கவர்ந்து கைப் பொருளை இழக்க வைக்க அவள் தான் கணிகைக்கு வழி சொல்லித் தருவாள். பொருள் எல்லாம் போனபிறகு அவனை வீட்டை விட்டு இறக்கிவிட முன்முயற்சி எடுப்பவளும் இந்தத் ‘தாய்க் கிழவி’யே. வர்ணனைகளை வைத்துப் பார்த்தால் கணிகைக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும். அவளுக்கு அம்மா ‘தாய்க் கிழவி’….




Read more »

Benegal and Balaகருப்பு – வெள்ளை : பெனகலும் பாலாவும்

By |

<!--:en-->Benegal and Bala<!--:--><!--:ta-->கருப்பு – வெள்ளை : பெனகலும் பாலாவும்<!--:-->

அன்பு நண்பர் கல்யாண்ஜி வண்ணதாசன் எழுதுகிறார் – //நீங்கள் ‘ஹிந்து’ தினசரி வாசிப்பவர் என்றால், நீங்கள் இதற்குள் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். ‘சினிமா ப்ளஸ்’ இணைப்பின் முதல் பக்கத்தில் உங்களைச் சிதற அடிக்கிற முகங்களுடன் ‘குத்தவைத்து’ உட்கார்ந்திருக்கிற அந்த நூறு முகங்களை. பாலாவின் ‘பரதேசி’ திரைப்பட ‘ஸ்டில்’களுள் ஒன்றான அது, தன்னிடம் நாற்பதுகளின் காலத்தில் எடுக்கப்பட்ட ஆல்பத்தில் இருந்து ஒரு இலையை உருவி நமக்கு முன் வைத்திருக்கிறது. பாலா திரைமொழியிலும் அது சார்ந்த உடல்மொழியிலும் எவ்வளவு அக்கறை…




Read more »