Indra Parthasarathy sir on ‘Viswaroopam’ novelவிஸ்வரூபம் நாவல் – திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கடிதம்

’விஸ்வரூபம்’ நாவல் பற்றி இந்திரா பார்த்தசாரதி சார் பகிர்ந்து கொண்டது –

I immensely liked the novel. I have sent my views by attachment.
EPaa

Apr 3 2013

மேலைய நாட்டுக் கோட்பாட்டின்படி,சரித்திரம் நேர்க் கோட்டில் செல்லும். நேர்க்கோடு என்பதே கற்பனை. அதனால்தான், BCE, ACE என்று வரையறுத்துக் கொண்டு மேல்நாடுகளில் வரலாறு எழுதப்படுகின்றது இன்றுவரை.(அதாவது ACE 2013 வரை).

ஆனால் நம் நாட்டில் சரித்திரம் நேர்க்கோட்டில் முடிவெ இல்லாமல் போய்க்கொண்டே இருக்காது. யுகங்கள் நான்குதாம்.. வருடங்கள் அறுபதுதாம். அவை திரும்பத் திரும்ப வரும். இது ஒரு cyclic order.அதனால்தான் நாம் அந்தக் காலத்தில் நிகழ்வுகளைச் சரித்திரமாகப் பார்க்கவில்லை. புராணங்களாகப் பார்த்தோம்.

வரலாற்று தர்க்கதுக்குக் கட்டுப்பாடாமல நிகழும் நாலு குடும்பங்களைப் பற்றிய இரா.முருகனின் நாவல்,, நேர்க்கோட்டில் செல்லவில்லை என்பதோடுமட்டுமல்லாமல், வெவ்வேறு காலங்களில் முன்னும் பின்னும் செல்கின்றது. ஆனால் கதையைப் படிக்கும்போது எந்த விதமான குழப்பமுமில்லை என்பதுதான் இந்நாவலின் கலா பூர்வமான வெற்றி.

ஐம்பதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள் (ஆவிகள் உட்பட) நம் மனத்தை அலைகழிக்கவில்லை. காரணம், அவர்கள் பேச்சு நடையினின்றும் அவர்கள் யார் யாரென்று நமக்கு எளிதாகப் புரிந்து விடுகின்றது. டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானத்திலும்’ 135 கதாபாத்திரங்கள். முருகன், நல்ல வேளை, டால்ஸ்டாயை முறியடிக்க விரும்பவில்லை!

மூன்று நாடுகளில் நடந்தாலும், நிகழ்வுகளின் சாத்தியப்பாடுகள் எந்தவிதமான செயற்கைத் தன்மை இல்லாமல் படிப்பதற்கு மிகச் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இப்படித்தான் நடந்திருக்க முடியும் என்ற சிந்தனையை நம் மனத்தில் தோற்றுவித்து விடுகின்றது. இப்படித்தான் அந்தந்தக் காலக் கட்டங்களில் பேசியிருப்பார்கள் என்ற
நம்பகத்தன்மைதான் நாவலின் கொடுமுடி.

ஆரம்பித்த இடத்திலேயே நாவல் முடிகின்றது. இதுதான் cyclic order.

———————————-

நன்றி இ.பா சார் – இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன