Archive For மார்ச் 15, 2021

தாவரங்கள் இனியவை ஆகுக. தண்ணீர் இனியதாகுக. ஆகாயம் இனியதாகுக. வெளி இனியதாகுக.

By |

‘வாழ்ந்து போதீரே’ நாவலின் இறுதி அத்தியாயத்தில் இருந்து – ஹோமம் ஆரம்பமாறது. கலந்துக்க வேணும். திராவிடப் பண்டிதர் வேண்டுகோள் விட, எல்லோரும் அங்கே தான். எந்தக் கடவுளின் கருணையினால் நாமனைவரும் நலமாகவும் எந்தக் குறையுமின்றியும் உயிர்த்திருக்கிறோமோ அந்த க்‌ஷேத்ரபதியை வழிபடுகிறோம். நம்முடைய பசுக்களும் குதிரைகளும் நலம் பெற்று இருக்க, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வர, அவரைத் துதிக்கிறோம். இயற்கை அன்னையின் கருணை எம் பசுக்கள் சுரக்கும் பால் போல் பெருகி ஓட அருள்க. நான்கு வட இந்திய…




Read more »

வாழ்த்தத் தெரியாத வழக்கு முத்தச்சி

By |

என் அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலான ‘வாழ்ந்து போதீரே’- நூலில் இருந்து வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். ஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான். பஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே….




Read more »

காலம் கடந்து வந்தவர்கள்

By |

என் ’வாழ்ந்து போதீரே’ நாவல் -சில பகுதிகள் உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி,…




Read more »

திகில் கனவொன்று கண்டேன்

By |

(ஆர்.கே.நாராயண் ஆங்கிலக் கட்டுரை – மொழியாக்கம் இரா.முருகன்) சமீபத்தில் நான் ஒரு பயங்கரக் கனவு கண்டேன். ஸனாடு என்ற பெயரில் வினோதமான ஒரு நாடு வந்த கனவு அது. நான் அந்த தேசத்தின் குடிமகனாகி இருந்தேன். அந்த நாட்டு அரசாங்கம் திடுதிப்பென்று கதைகள் கண்காணிப்பாளார் என்று ஒரு அதிகாரியை நியமித்து விட்டதாக அறிவித்தது. நாடாளுமன்றத்தில் எழுத்தாளர்களுடைய பிரதிநிதியும் இடம் பெற்றிருக்கும் தேசம் ஸனாடு. எழுத்தாளர்கள் தங்கள் பிரதிநிதியை இது பற்றிக் கேட்க, அவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வினா…




Read more »

லண்டன் டயரி – நூலில் இருந்து

By |

லண்டன் டயரி – நூலில் இருந்து

என் ‘லண்டன் டயரி’ பயண நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம், Stall F 7, Chennai Book Fair 2021 ) வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லா கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில். கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஒரு இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய…




Read more »

நாவல் ‘1975’ – மதிப்புரை – வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி ஆர்.வி.எஸ்

By |

நாவல் ‘1975’ – மதிப்புரை – வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி ஆர்.வி.எஸ்

நண்பர் ஆர்.வி.எஸ் எழுதிய 1975 நூல் மதிப்புரை. அவருக்கு என் நன்றி சங்கரன் போத்தி ஒரு வங்கி பணியாளர். எமர்ஜென்ஸி காலத்தில் மெட்ராஸ், அரசூர் மற்றும் புதுதில்லியில் பணியாற்றுகிறார். இருபது அம்சத் திட்டத்தில் ஊரெல்லாம் கடன் வழங்குகிறார்கள். வங்கிகள் எப்படி அப்போது இருந்தன என்பதை ஒரு வசனமாக இரா. மு எழுதுகிறார். >>>>>>>>>>>> ”வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்கூடாது, வழங்கிகளாக இருக்க வேண்டும்” >>> ”25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு…




Read more »