Archive For மார்ச் 24, 2020

தலைநகரம் 1944 – எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

By |

ப்ளாஸ்க் எங்கே? இங்கே என்று ரயிலில் எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்த நாலு சிப்பாய்களில் தமிழ் பேசும் ராணுவக்காரன் என் ப்ளாஸ்கை நீட்டினான். “நாங்க கடைசியா இறங்கறபோது பார்த்தோம்… சீட் ஓரமா கிடந்துது.. சரி எப்படியாவது பார்த்து கொடுத்திடலாம்னு எடுத்து வந்தேன்” நான் சொன்ன நன்றியை அப்புறம் ஒருநாள் சாவகாசமாக வாங்கிக்கறேன் என்பது போல் சிரித்தபடி கையசைத்துப் போனான் அவன். அவர். “போகலாமா பீமா. ட்ரைவர் எங்கே போனாரு?” கெத்தாக கார் உள்ளே உட்கார்ந்தேன். “நான் தான் ட்ரைவர்”…




Read more »

டெல்லி 1944 – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து

By |

”இந்தத் தெரு திரும்பி நேரே ஒரு மைல் போனா நம்ம வீடுதான்.. கரோல்பாக் வந்துடும்” என்றான் பீமாராவ். ”தமிழ்நாட்டிலே இருந்து யார் ஷார்ட் ஹாண்ட், டைப் ரைட்டிங் ஹையர் இல்லே லோயர் சர்டிபிகேட்டோட வந்தாலும் இங்கே ஏதாவது மினிஸ்ட்ரியிலே வேலை கிடைச்சிடும்.. என்னை மாதிரி வாய் வார்த்தை, டைப் ரைட்டிங் மட்டும் தெரிஞ்சிருந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி மினிஸ்ட்ரி வேலை இல்லாட்ட ப்ரைவேட் கம்பெனி உத்தியோகம்னு டெல்லியிலே வேலைக்கு பஞ்சமே இல்லை .. டைப் ரைட்டிங் எந்த…




Read more »

கரோல்பாக் 1944 – எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

By |

கரோல்பாக் மார்க்கெட்டில் சுமங்கலி ஸ்டோர்ஸ் என்று கோணல் மாணலாகத் தமிழிலும், அச்சடித்தது போல் இந்தி, இங்க்லீஷிலும் பெயர்ப் பலகை வைத்த கடை வாசலில் நின்றோம். சுமங்கலி ஸ்டோர்ஸில் முதல் பார்வைக்கு வரிசையாக பிள்ளையார் கோவிலில் நேர்ந்து கொண்டு சூரைத் தேங்காய் போடக் கொண்டு வந்து குவித்தமாதிரி தேங்காய்கள் பெரும் குவியலாகக் கண்ணில் பட்டன. தண்ணீர் வைத்த கும்பாக்களில் வெற்றிலை முழுக்க அமிழ்ந்திருந்தது. தமிழ்ப் பத்திரிகைகள் மெட்றாஸில் இருந்து சுடச்சுட அனுப்பப்பட்டு தூசி உதிரும் ஷெல்ப்களில் ஓரமாக வெண்சாமரம்…




Read more »

1944 – ஒரு ரயில் பயணம் : எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

By |

ஒரு ரயில் உத்யோகஸ்தன் ஒவ்வொரு தடுப்பாக நின்று, ராத்திரி சாப்பாடு வேணுமா என்று பிரியமாக விசாரித்துக் கொண்டிருக்க, எனக்கு ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. ரயில்வேக்காரர்கள் ரயிலில் ஏற வந்தால் தான் பிரயாணம் செய்யாதே என்று பயமுறுத்தித் துரத்தி விடுவார்கள். எப்படியாவது அடித்துப் பிடித்து வண்டியேறி விட்டால், என்ன கரிசனம். சாப்பாடு வேணுமா? வேணும் என்று சொல்ல வாயைத் திறந்தேன். காலில் பலமாக மிதித்து ரத்னா என்னைப் பேசவொட்டாமல் செய்தாள். பாட்டியம்மா மகன், ”சாப்பாடு பற்றி கேட்கிறீங்களே, என்ன…




Read more »

மதறாஸ் – புதுடெல்லி 1944 – கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ்

By |

மதறாஸ் – புதுடெல்லி 1944 – கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ்

பாட்டிக்கு கண்ணீர் வராவிட்டாலும் தலையில் கை வைத்து மடியில் தண்ணீர்ச் செம்போடு உட்கார்ந்திருந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் மகன் குழந்தையைத் தோளில் சுமந்து எங்கள் பக்கம் வந்தான். “அம்மா இப்படித்தான் தத்து பித்துன்னு ஏதாவது சொல்லி ரசாபாசம் ஆயிடும். ராமேசுவரத்திலே கோவில் வாசல்லே பூக்காரி ஜவ்வந்திப் பூமாலை கட்டித் தந்தபோது, ஏண்டியம்மா தீண்டலுக்கு ஒதுங்கினியோன்னு கேட்டு தெருவையே ஸ்தம்பிக்க வச்சுட்டா” என்றான். அவன் வீட்டுக்காரி, “ஐயோ, இதை விஸ்தரிச்சு வேறே சொல்லணுமா?” என்று பாதி புகார்…




Read more »

கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 1944 – வாராங்கல் ஸ்டேஷனில் (எழுதி வரும் ராமோஜி நாவலில் இருந்து)

By |

நார்மடிப் புடவை என்று மதறாஸ் ராஜ்யத்தில் சொல்லப்படும், பிராமண விதவைகளுக்கான புடவையை மடிசார் போல் அணிந்து, மொட்டைத் தலையைப் புடவைத் தலைப்பால் மூடியிருந்தாள் அந்த முதியவள். ரத்னா கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக, கையில் எடுத்துக் கடித்த வடையை இலையில் வைத்து விண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவள் கம்பார்ட்மெண்டில் ஏறியதும், “இங்கேயா போகணும்? யாரோ மீன் மாம்சாதிகள் போஜனம் பண்றாளே” என்றபடி ரத்னாவைப் பார்த்தாள். அவள் கையில் ஒரு சிறு ஸ்தாலி செம்பில் தண்ணீர். மருமகள், பட்டுத்துணி வாய்ப்புறத்தில்…




Read more »