Archive For அக்டோபர் 12, 2015

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 50 – இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்   அத்தியாயம் 50   – இரா.முருகன்

சின்னக் குளிரோடு விடியும் இன்னொரு பொழுது. திலீப் நேரம் பார்த்தான். ராத்திரியும் இல்லாத, அதிகாலையும் வந்து சேராத மூன்று மணி. பம்பாயை நோக்கி குட்ஸ் வண்டிகளில் லோனாவாலாவில் இருந்து எருமைகளும் பசுக்களும் பயணம் செய்யத் தொடங்கும் நேரம் இது. தாதர் யார்டு பக்கம் நிற்கும் பெட்டிகளுக்குள் கட்டி வைத்தபடி அவற்றைக் கறந்து பால்காரர்கள் சைக்கிளில் தாதர் தெருக்களில் வலம் வருவதும், எலக்ட்ரிக் ரயிலில் கூட்டம் ஆரம்பிப்பதும் கிட்டத்தட்ட ஒரே நேரமாக இருக்கும். இந்த ஊர் இன்னும் உறங்கிக்…




Read more »

New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 22 இரா.முருகன்

By |

New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 22      இரா.முருகன்

செயிண்ட் லாரன் தெருவில் நுழைந்தபோது யாரோ மணி கேட்டார்கள். ‘ஒன்பது மணி முப்பது நிமிடம்’. இலங்கை வானொலிக் குரலில், இதைச் சொல்வதை விட இஷ்டமான காரியம் வேறெதுவும் இல்லை என்ற சிரத்தையோடு சைக்கிளை நிறுத்திச் சொன்னேன். அவர் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு அப்பால் போனார். ஒன்பது மணி முப்பது நிமிடம் ஆகும் போது சிகரெட் பற்ற வைக்க வேண்டுமென்று ஏற்கனவே முடிவு செய்திருக்கலாம். நொளினிகாந்த் மொஷாய் வீட்டு வாசல் தூரத்தில் இருந்தே அழகாகத் தெரிந்தது….




Read more »

New Poem பூங்காக் காவல் இரா.முருகன்

By |

New Poem   பூங்காக் காவல்          இரா.முருகன்

பூங்காக் காவலராக இருத்தல் அன்று எளிது. புகார் நகரச் சதுக்கத்தில் தீயோரை அடித்துத் தின்ற பிறகு உத்தியா வனத்தில் உலவும் பூதமாய் கற்புடைப் பெண்டிரை மிரட்டிப் பொழிந்து கலாசாரமும் காவல் காத்து பீடம் ஏறி ஓய்வு எடுக்கலாம். பூங்காக் காவலனாக இருத்தல் இன்று கடினம். செடிக்கும் கொடிக்கும் பொழிய வைத்திருக்கும் சன்னக் குழாயைக் கவிழ்த்து வளைத்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் பிடித்து ஒக்கலில் குழந்தையொடு நடக்கும் பெண்ணைப் பார்க்கவில்லை என நடிப்பது கடினம். கைவிரல் பிடித்து அப்பா…




Read more »

new bio-fiction தியூப்ளே வீதி – 21 இரா.முருகன்

By |

new bio-fiction தியூப்ளே வீதி   – 21                 இரா.முருகன்

தியூப்ளே வீதி உறங்கத் தொடங்கியிருந்தது. நேரு கஃபேயில் இந்த ராத்திரிக்குக் கடைசி கடைசியாகச் சாப்பிட்ட நாலு பேர், வாசலில் பாதி இறக்கி வைத்திருந்த ஷட்டருக்குக் கீழே குனிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். மாதா பழச்சாறு நிலையத்தில் பயபத்திரமாக மிக்சியைக் கழுவி, பட்டுத் துணியால் துடைத்து ஈரம் போக்குவது கண்ணில் பட்டது. தெருமுனை குப்பைத் தொட்டியில் கதம்பமாக வாசனை வீசும் பழத் தோலை அம்பாரமாகக் கொட்டிய கடைப் பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான் ’வருகிறான் உலகம் சுற்றும் வாலிபன்’….




Read more »