Archive For அக்டோபர் 9, 2009

சிதறல்கள் 9.10.2009

By |

  ‘உன்னைப் போல் ஒருவன்’ மகத்தான வெற்றி பெற்ற பிறகு, எழுத்தாளன் என்ற பிம்பம் திடீரென்று (தற்காலிகமாக இருக்கட்டும்) காணாமல் போய், திரைக்கதை-வசனகர்த்தா அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம். பத்திரிகைகளில் இருந்து தொலைபேசும் உதவியாசிரியர்கள் கதையோ கட்டுரையோ கேட்காமல் சினிமா பற்றித்தான் வேண்டுகோள் விடுக்கிறார்கள், ‘கமல் சாரோடு உங்க நட்பு’, ‘உன்னைப் போல் ஒருவன் ரசமான அனுபவங்கள்’ இன்னோரன்ன தலைப்புகளில் 450 வார்த்தகளுக்கு மிகாமல் எழுத வேண்டியிருக்கிறது. ‘கிளைமாக்ஸ் வசனத்தை கொஞ்சம் அனுப்புங்க’ – பி.ஆர்.ஓ நிகில்…




Read more »

கிறுக்கல்கள்

By |

  விடுமுறை நாள் குறிப்புகள் இன்னிக்கு எங்கேயும் சுத்தக் கிளம்பிட வேண்டாம். ஏற்கனவே கொல்கத்தா ப்ளைட் இறங்கத் தெரியாமல் காலைச் சுளுக்கிண்டு வந்து சேர்ந்திருக்கீங்க. எனக்கு ஆபீஸ் லீவு. நான் ஒரு துரும்பையும் நகரத்தப் போறதில்லை. உங்களுக்கும் லீவு தானே? சும்மா விவித்பாரதி கேட்டுட்டு இருங்க. இல்லே லாப்டாப்பை மடியிலே வச்சுக் கொஞ்சிண்டு கிடங்க. சரஸ்வதி பூஜை. அதையும் இதையும் படிக்கறதை எல்லாம் சாவகாசமாக நாளைக்கு வச்சுக்கலாம். சரி, சாப்பாடு? அதது தானே வந்துடும். உங்களுக்கு என்ன…




Read more »

சுஜாதா சார்

By |

  ஒரு வாசகனின் வந்தனங்கள் சுஜாதா சார் மறைந்து இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. அவர் இல்லை என்று சொல்ல, நினைக்க மனமும் சொல்லும் இன்னும் ஒத்துழைக்க மறுக்கின்றன. வாழ்நாள் முழுக்க சாதனை செய்த அந்த மாபெரும் மனிதருக்கு அரசு அங்கீகாரம் தான் கிடையாது. நம் போன்ற லட்சக் கணக்கான தமிழ் வாசகர்கள் ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ என்பதை சுருக்கமாக சுஜாதா என்றே அழைக்கப் பழகி இருக்கிறோம். அழைப்போம் இனியும். இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்…




Read more »

என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

By |

  திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’ கதை வசனம் எழுதும் பணி பூர்த்தியாகிப் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. கமல் அவர்களோடு அவருடைய caravan-ல் நடத்திய படம் குறித்த நீண்ட உரையாடல்கள், கதையமைப்பு குறித்த விவாதங்கள், இயக்குனர் நண்பர் சக்ரியோடு நட்போடு புரிந்த வாக்குவாதங்கள் பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot. என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இன்னொரு மகத்தான கலைஞரான திரு மோகன்லால் அவர்களோடு பழகிய அனுபவம் குறித்து…




Read more »

நானும் புத்தகங்களும்

By |

  நண்பர் எஸ்.ரா ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார் http://www.sramakrishnan.com/?p=2233 இது தொடர்பான என் சிந்தனைகள் எஸ்.ரா நன்றாக எழுதியிருக்கிறார். வெளிநாடு போய் வருடக் கணக்கில் தங்கியிருக்கும்போது என் வாசிப்பு அதிகமாவதை உணர்கிறேன். புத்தகக் கடைகள் அங்கே ஹாலிபாக்ஸ் போன்ற சிறு ந்கரில் கூட ஈர்ப்போடு காட்சி அளிக்கின்றன. வருடம் முழுக்க தள்ளுபடி விற்பனை, எழுத்தாளர் சந்திப்பு. எடின்பரோ புத்தகக்கடை Pebbles (கூழாங்கற்கள் – என்ன அழகான பெயர்) யில் நான் ஹெரால்ட் பைண்டர் மற்றும் ம்யூரல்…




Read more »

வாரம் – 13 செப்டம்பர் 2009 ஞாயிறு

By |

  வாரக் கடைசி நாட்கள் எழுதவும் படிக்கவுமானவை என்ற வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுப் போய்க் கொண்டிருப்பது மனதை அலைக்கழிக்கிறது. நாவல் பகாசுரனாக வளர்ந்து இன்னும் முப்பது அத்தியாயம் கேட்கிறது. எழுத அதைவிட விஷயகனமும் உண்டு. நேரம் தான் பிரச்சனை. பத்திரிகை பத்தி, கேட்டு நினைவு படுத்தும் சிறுகதை இப்படி எத்தனையோ முடித்துத்தர முடியாமல் பின்வாங்கும்போது வருத்தத்தோடு நினைத்துக் கொள்வது – இந்த சினிமாவைக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறோம்? எனக்குச் சட்டென்று தோன்றுகிற முதல் (பாசிட்டிவ்?)…




Read more »