Kala Goda poems and Pagal Paththu – raappaththuகாலா கோடா காலைப் பொழுதுகளும், பகல் பத்து ராப்பத்தும்


மும்பையின் நியூ மெரின் லைன்ஸ் போன்ற பகுதிகளில் விடிகாலை நேரம் என்று ஒன்று இருப்பதை கவனித்திருக்க மாட்டோம். அவை காலை ஒன்பது மணி சுமாருக்கு அலுவலகங்க இயங்கத் தொடங்கும் போது உயிர் பெறும். சாயந்திரம் ஏழு மணிக்கு இயக்கம் ஓய்ந்து கான்விடும். கொலட்கரின் சில கவிதைகள் இந்தக் கவனிக்கப்படாத பொழுதுகளில் இயங்கும். கவனிக்கப்படாத மனிதர்களைப் பற்றியவை.

என் ‘பகல் பத்து ராப்பத்து’ குறுநாவலில் மாநகரின் குறிப்பிட்ட பகுதிகளில் காலை பத்து மணி முதல் ராத்திரி பத்து வரை கதை நடக்கும். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (விக்டோரியா டெர்மினஸ்) பகுதியில் ராத்திரி பத்து மணிக்கு நானும் கதையும் நடந்தது அதிகம். …

அவர் காலா கோடா கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த அதே நேரத்தில் நானும் சப் அர்பன் ரயிலில் உட்கார்ந்து மனதில் கதை எழுதியபடி அதே நகரில் சுவாசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். feeling elated.

——————————————–

பழைய திரைப்படத்தில்
உருக்கமாகப் பாடிக்கொண்டு
ஸ்டூடியோ தெருவில்
நாயகன் போகிறான்.

ஒரு முண்டாசுக்காரரும்
நடுவயது ஜோடி ஒன்றும்
தொப்பி வைத்த உயரமானவரும்
சைக்கிளில் வேறு ஒருத்தரும்
அவரைக் கடந்து தெருவில்
அகன்று போகிறார்கள்.

போனவர்கள் பாட்டு முடிவதற்குள்
திரும்பத் தெருவில் வரவேண்டுமென
தவிப்போடு பார்த்திருக்கிறேன்.

வராவிட்டால் அரைவயிறு சாப்பாடு தானா?
காமிரா சுருட்டிய தெருவில்
நடக்காத போது?

(இரா.மு 2013)

——————————————–

நண்பர் ஒருவர் நாளை மறுநாள் ஞாயிறன்று அரபு நாடுகளுக்குப் பயணம் வைத்திருந்தார். நேற்றுக் கையில் வந்த விசாவை வழக்கம்போல் படித்துப் பார்க்க, சட்டென்று ஓர் அதிர்ச்சி. ஆண் என்பதற்கு பதிலாக அவரைப் பெண்ணாகக் குறித்திருந்தது விசாவில். பாஸ்போர்ட்டில் இருந்து படித்துப் பதிந்ததில் அந்நிய நாட்டு விசா வழங்குவதில் ஏற்பட்ட தவறு. இன்று வளைகுடா நாடுகளில் வாராந்திர விடுமுறை (வெள்ளிக்கிழமை) என்பதால், விசாவைத் திருத்தி வாங்கவும் சிரமம்.. ஞாயிறு பயணத்தைத் தள்ளி வைக்க வேண்டியது தான் ஒரே வழி.. வேலை நிமித்தம் பயணம் போகின்ற போது இப்படியான பிழைகள் பாதிப்பு தனிப்பட்ட முறையில் பாதிப்பதை விட அதிகமாகவே.

இந்திய விசா வழங்கும் அலுவலகங்களும், அந்நிய நாட்டு விசா வழங்கும் அந்தந்த நாட்டு அலுவலகங்களும் பாஸ்போர்ட்டைப் படித்து ஒ.சி.ஆர் மூலம் முக்கிய தகவல்களை எடுத்துப் பெயர்த்து விசாவில் பதிந்தால் இப்படியான பிழை நேர வாய்ப்பில்லை.

can’t we have international standards for passports? Or do they already exist but we don’t adhere to these?

———————————————-

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன