பெரு நாவல் ‘மிளகு’ – முதல் கருத்துகள்

நண்பர் திரு காளிபிரசாத் ரங்கமணி

ஆரம்பித்த வேகத்தில் கடகடவென நூறுபக்கங்கள் கடந்தன. பழைய காலக் கதையில் திடீரென முன்னோக்கி வந்து ஏற்கனவே நன்கு பரிச்சயமான திலீப், அகல்யா, கொச்சு தெரசா பரமேஸ்வரனின் நினைவுகள்… அது ஒரு சர்ப்ரைஸ்.. போகிற வேகத்தில் மூன்று நாட்களில் படித்து விடுவேன் என நினைக்கிறேன். ..
மிளகோடு துவங்கியுள்ளது இவ்வருட புத்தக கண்காட்சி புது வரவுகளின் வாசிப்பு
நண்பர் மீனாட்சிசுந்தரம் முரளி
நானும் வாங்கி வாசிக்க ஆரம்பித்து உள்ளேன். மனதிற்கு உகந்த எழுத்தாளர். இனிய நண்பர்.
மர்மம் கலந்த நாவல். வாசகனாக மகிழும் எழுத்து நடை. களம்.. புதிது. ஆனாலும் பழையது.. எனக்கும் பிடித்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன