ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

ரெட்டை நாயனம் வெண்பாக்கள் : உயரம்
——————————————————————-
காலுயர்த்தி வைத்திருக்கக் கம்பூட்ஸ் அணியாமல்
மேலேறிப் பெட்டியிட்டு நிற்காமல் போலியின்றி
வள்ளுவர் வாசுகியை வார்த்தையில் தீட்டினால்
கொள்ளுமடி ரெண்டு குறள்

இரா.முருகன்

அண்ணலவர் நோக்க, அடுத்தவீட்டு ஜன்னலில்
பெண்ணவள் பார்த்துப் புதிர்போட -வெண்நிலவில்,
சார்லெஸ் டயானாவை சந்தித்தார் ஸ்டாம்புக்காய்
ஸார்லெஸ்இஞ்ச்(SIR LESS INCH) ஆகநின்றார் பெஞ்ச்(BENCH)….கிரேசி மோகன்….!

அன்பு இராமு சார் கீழே தந்த ‘’குறும் பாவை’’ வெண்பாவாய் ஆக்கினேன்…..!

அண்ணலவன் நோக்க எதிர்வீட்டு
ஜன்னலவள் நோக்க, புதிர் போட்டு
காதலாகிக் கசிந்த ஜோரில்
காணவந்த போது நேரில்
குள்ளனிவன் கொக்காமவள் ஜூட்டு….கிரேசி மோகன்….!


*****************************************************

1950-காட்சிகள்

முன்னே இரண்டுபேர் முக்கிப் பிடித்திழுக்கப்
பின்னே படுத்துப் பலர்தள்ள நன்னுதல்
செக்ரெட்ரி சீரெட்டுப் பற்றவைத்து நன்றிசொல்ல
தக்கவிடம் சேர்கணினி பார்.

(இரா.முருகன்)

”நான்பார்த்த கம்ப்யூட்டர் நீபார்க்க வில்லையே!
வான்பார்த்(து) உயர்ந்தே வுலகளக்கும்,-மீன்பார்
செகரட்டரி கண்ணில் சிகரெட்டை ஊதி
புகவைத்த பின்னரவள் பார்(BAR)”….கிரேசி மோகன்….!


pictures : Delivery of computer at office 1950s
Office Secretary 1950s
************************************************
ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – பழைய காசு கோடி பெறும்

”நாட்பட்ட நாணயம் நல்லதில்லை தூக்கியெறி”
ஆட்பட்ட ஆல்பர்ட் அழுதிருக்கக் கூப்பிட்டார்
“மிஞ்சியது நாலுகாசு அந்தநாலில் இந்தவொரு
அஞ்சுடாலர் கோடி பெறும்”.

இரா.முருகன்

’’ஃப்ராடென்று(FRAUD) கூறினார் பாபுவின் நாணயத்தை
ராடுடன்(ROD) பாபுவை ரேங்கிட, -போர்டு(NGC)
கையிலுள்ள நாலில் ’’கண்டோம் திருமகளை’’
மெய்யாலும் மாசில்லா காசு’’….கிரேசி மோகன்….!

ஓடியாடி பாடுபட்டு ஊரை விலைபேசும்
கோடியாய் டாலர் குவிந்தாலும் -மாடிலேறி
கல்லறைக்குக் கூப்பிடும் காலன் மனம்மாறி
சில்லறைக்குச் செல்வானா சொல்…. ….கிரேசி மோகன்….!

A man who was told a gold coin in his possession was a fake is set to become a millionaire after experts realised it was the real deal.

The collector, who wished to remain anonymous, was convinced his coin was a fraudulent replica of a special $5 coin produced by the San Francisco Mint at the height of the California Gold Rush in 1854.

Coin dealers agreed with him, since only three out of the 268 Liberty Head Half Eagles made were known to have survived into modern times.

But it was soon to be four after the man took it to the Numismatic Guaranty Corporation (NGC), a coin authentication company, whose experts confirmed it was an original.

(The Independent USA – 27 April 2018)
********************************************8
மூடிய நூற்கள் முழுசாய்க் கிரகித்துத்
தேடிய ஞானமுன் புத்தியில் – ஓடிநீ
பாடிட ஆடப் படுக்கை பகிர்ந்திடக்
கூடுதல் மூளையே கொள்.

இரா.முருகன்

கூடுதல் மூளையே கொள் -Go for extended IC memory to use for other pleasurable pursuits like singing,dancing, loving

’’படிக்காத புத்தகத்தை பார்த்தென்ன லாபம்
நடிக்காத நாடகத்தில் நானேன் -துடிக்கின்ற
டெர்ராஹெர்ட்ஸ் வேவ்(TERA-HERTZ-WAVE)விருந்தால், தர்மு(தர்மு மாமா-சுஜாதா பிரயோகம்) விடுவாரோ!
வர்ரான்சாவ்(சாவு) மாட்டில்(எருமையில்) விரைந்து’’….கிரேசி மோகன்….!

’’பாடிடும் மூளையில் பாதி வளர்புத்தி
கூடிட ஆகுமாம் கூடுதலாய் -மூடிய
புத்தகத்தில் உள்ளதை பார்க்காமல் சொல்லிடலாம்
வித்தகம் டெர்ராஹெர்ட்ஸ் வேவ்(TERA-HERTZ-WAVE)”….கிரேசி மோகன்….!

MIT scientists use terahertz waves to read closed books
*******************************************************
மன்றோ வனப்பதனை மாநாடு தான்கூட்டி
சென்றோத ஓர்யுகம் போதாதே என்றைக்கும்
யாக்கை நிலைக்காது யாண்டும் நினைவாகும்
சாக்கை உடுத்த அழகு.
இரா.முருகன்

”டெர்லின் உடுப்பில், தறிகாட்டன் ஆடையில்,
மர்லின்மன் றோசினி மாமயக்கம் -பெர்லினின்
ஹிட்லரே தோற்றிடுவார், HER-SELFஃபின்(மர்லின் மன்றோ) பேரழகு
கட்லட் உருளைக் கிழங்கு’’….கிரேசி மோகன்….!

**************************************8
மாமிச வேடம் மரக்கறி போட்டாலும்
தாமிசைந் துண்ணத் தகாதுகாண் – சாமீ
வெஜிடபில் புல்லாவ் பிரியாணி குர்மா
புஜிக்கத் தடையாம் அறி.

இரா.முருகன் 22-04-2018

க்ரிஸ் கெய்ல் – ப்ரவோ – ராயுடு மோகன் சாத்துசாத்தென்று சாத்தும் ’இன்றைய இரட்டை நாயனம்’ வெண்பாக்கள்

’கூறும்உம் பேரென்ன! காஷ்மீர் புலவனென்று
சோறென்ன சாயரட்சை சாப்பிடுவீர் -ஊரன்னம்(ஊர் அன்னம்)
ரைத்தா வுடன்புலவ் ரைஸ்ILOVE RAWVEGநான்
சைத்தானே சொன்னாலும் சார்’’…கிரேசி மோகன்

பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
சாத்தமுது சாதம் சுவையா ணநீர்மோர்
ஆத்தமுதே(வீட்டுணவே) என்ஸ்பெஷல் ஆம்….

நேற்றோடிப் போனதும் நாளை வருவதும்
மாற்றான்தன் தோட்டத்து மல்லிகை -தூற்றாது
இன்று மலர்ந்ததே ஈசன் பிரசாதம்
உண்டேற்பே உண்மை உணவு….

சுடச்சுட இட்லி சுவையான சட்னி
குடம்குடமாய் சாம்பாரைக் கொட்டி -வடைபொங்கல்
காப்பி அருந்திவிட்டு காலைக் கடனுக்காய்
தோப்பில் அமர்தல் ஜெயிப்பு….

மாமிசப் பெட்டி, மலமூத் திரச்சட்டி
தாமஸமாம் மேனி தரித்திரம்காண் -ஆமா(ம்)சார்
ஸோமரஸம் உண்டே சுகித்திடும் விண்ணோர்போல்
நாமரஸம் சாம்பார்,மோர் நிறைவு….

படிக்காத புத்தகத்தை பார்த்தென்ன லாபம்
நடிக்காத நாடகத்தில் நானேன் -துடிக்கின்ற
நெஞ்சில் தளும்பிடும் நஞ்சக் குழம்பது
பஞ்சா மிருதம் பருகு….

ருசியொன்றில் கொண்டந்த ஒன்றிலே ஞானப்
பசிகொண்ட யோக ரமணா -நசிகேதன்
போலந்தக் கூற்றோடு போராடி வென்றவுன்
காலில் தலைவைத்தேன் கா….கிரேசி மோகன்….!

Food producers in France will be forced to think of new ways to describe some of their vegetarian and vegan foods when they are banned from using terms such as “vegetarian sausages”, “vegetarian mince” and “vegan bacon”.

தி இண்டிபெண்டண்ட் (இங்கிலாந்து) இன்றைய பதிப்பில்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன