காறல்மான் சவிட்டுநாடகம் பார்த்திருக்கீங்களா நீங்க?

A snippet of the translation from Malayalam

“சம்மதமில்லை”, கில்பர்ட் சொன்னார். வைப்பின் கடற்கரையில் மாதம் ஒரு தடவையாவது கிறிஸ்துவங்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அடிதடி நடக்கும்போது இந்த எருசலேம் பிடிக்கற நாடகம் வேணுமா? கதையை மாத்தி அல்லேசு நாடகமாக்குங்க. அப்படி நடந்தா, பின்பாட்டு பாட எங்க குந்தன் மியூசிக் கிளப் இலவச சேவை”.

சந்தியாகு சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. அவன் கில்பர்ட்டைப் பார்த்துச் சொன்னான் : “பிலாத்தோஸ் பாதிரியாருக்கு இந்த நாடகம்தான் வேணும். கில்பர்ட்சேட்டா. காறல்மான் நாடகம் பார்த்திருக்கீங்களா நீங்க? காறல்மான் நாடகத்திலே வில்லன் கலலோன் கிறிஸ்துவன் தான். பிறகு ஏன் கில்பர்ட்சேட்டன் வைப்பின் விவகாரத்தை இங்கே கொண்டு வரணும்?”

“எனக்கு சம்மதமில்லே”, கில்பர்ட் சொன்னார்.

“அப்போ போய் வேலையைப் பாருங்க.. இவரும் இவரோட மை.. நான் அதை என் வாயாலே சொல்ல மாட்டேன்.. கம்யூனிஸமா பேசறே.. அடுத்த ரூம்லே தான் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆபீஸ் இருக்கு. அங்கே போய்ப் பேசு”.

#Lanthan_Bathery #பீரங்கி_பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன