Archive For ஜூலை 17, 2016

New: மிளகு – வாழ்ந்து போதீரே நாவலுக்கு அடுத்து வரும் புதினம் இரா.முருகன்

By |

New: மிளகு – வாழ்ந்து போதீரே நாவலுக்கு அடுத்து வரும் புதினம்  இரா.முருகன்

மிளகு என்ற ‘செயல் தலைப்பு’ (working title) சூட்டி அடுத்த நாவலுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறேன். பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி குட்டநாடு, வயநாடு, கொங்கண் கடலோர நிலப்பரப்பில் நிலவிய, வர்த்தகச் சூழலில் சொல்லப்படும் கதையாக இது இருக்கும் தமிழ் உரைநடை பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி இந்நாள் வரை போய்க் கொண்டிருக்கும் சுவடுகளை அடியொற்றிச் செல்லும் இந்த நாவலின் கதையாடல். விஸ்வரூபம் நாவலில் இரண்டு அத்தியாயங்களில் ஸ்காட்லாந்து செய்திப் பத்திரிகை ரிபோர்டிங் மொழிநடையில் கதை நகரும். அது போல்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 33 இரா.முருகன்

By |

New Novel :  வாழ்ந்து போதீரே          அத்தியாயம் 33    இரா.முருகன்

அண்மையில் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான டாக்டர் நந்தினி, மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்தார். பாலம் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி. வைத்தாஸ் ரேடியோவை அணைத்தான். நந்தினி தொலைபேசியில் சத்தம் கூடுதலாகவே பேசிக் கொண்டிருந்தாள். பெரிய மூன்று தேசங்களுக்கு நடுவே தென்கிழக்காகக் குறுக்கி கிழக்கே நீண்டு வடக்கில் சற்றே விரியும் சுடுமணல் பரந்த நாட்டின் மக்கள் தலைவரிடம், அங்கே ஆட்சிக்கும் ராணுவத்திற்கும் தலைமை வகிக்கும்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 32 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே                     அத்தியாயம் 32            இரா.முருகன்

எமிலி ஆந்த்ரோசா அழ ஆரம்பித்தாள். குளிர்ச்சியான அறை. நடுவிலே, மிக உயரமான கட்டில். அதில் தான் அவள் படுத்திருக்கிறாள். பழைய கட்டிலை அகற்றி விட்டு இந்தக் கட்டிலை அறையில் சேர்த்தார்கள். இரவு சிறு ஏணியைக் கட்டிலில் சார்த்தி வைத்துத்தான் அவளைக் கட்டிலில் ஏறிப் படுக்கச் செய்தார்கள். இவ்வளவு உயரமாக இருந்தால் நடுராத்திரி நான் மூத்திரம் போக எப்படி இறங்குவது? குளிர் அதிகம் என்பதால் அடிக்கடி போக வேண்டியிருக்கு. என்ன செய்யணும் நான்? எமிலி கேட்டபோது ராணுவ அதிகாரிகள்…




Read more »

New: பாண்டி பஜார் பாலாஜி பவன் காப்பி மகிமை – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இரா.முருகன்

By |

New:  பாண்டி பஜார் பாலாஜி பவன் காப்பி மகிமை  – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   இரா.முருகன்

சென்னை தி.நகர் சௌந்தரபாண்டியனார் அங்காடி (பாண்டி பஜார்) பாலாஜி பவன் காப்பியும் குறுங்காப்பியும் (மினி காப்பி) பருகாதார் சன்மமெடுத்தென்! இக்குழம்பியின் மாண்பு பாராட்டி யானின்றியற்றிய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இஃது மாலும் ஆழி விட்டிறங்கி மாசில் பாண்டி கடைத்தெருவில் காலை பனகல் பார்க்கருகே கருடன் ஒயிலாய் நிறுத்திடுவான் ஆலா லவிடம் ஒத்திவைத்து ஆறு மணிக்குக் கடைவாசல் நீல கண்டன் காத்திருப்பான் பாலா ஜிபவன் காப்பிக்கே.. (மா மா காய் மா மா காய் இது என்…




Read more »