Archive For ஜனவரி 4, 2009

வார்த்தை தவறி விட்டாய்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -25 இரா.முருகன் புத்தாண்டு பிறப்பது எந்தக் காலத்திலும் பரபரப்பான விஷயம். கால் நூற்றாண்டு முன்புவரை இந்தப் பரபரப்பு ஊரெல்லாம் திரிந்து ஓசி காலண்டர் சேகரித்து சுவர் முழுக்க ஆணியடித்து மாட்டுவதில் ஆரம்பமாகும். அது தொடர்வது வார்னிஷ் வாடை தூக்கலாக அடிக்கும் வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக அலைவதில் இருக்கும். வாழ்த்து அட்டை ஓசியாக யாரும் தரமாட்டார்கள் என்பதால் இது தவிர்க்க முடியாத செலவு இனத்தில் மனசில்லாமல் சேர்க்கப்படும். இருபத்தைந்து வருடத்தில்…




Read more »

ஒரு செண்டிமீட்டர் வட்டி

By |

  Kungumam column – அற்ப விஷயம் -19 முப்பது வருடம் முன்பு, வங்கிகள் வாங்கிகளாக இருந்தன. பணம் இருந்தால் படியேறலாம். மரக் கூண்டுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் கேஷியர் வாங்கி வைத்துக் கொண்டு ரசீது தருவார். போட்ட தொகை கணிசமான வட்டியோடு ஒரு வருடம் கழித்துத் திருப்பிக் கிடைக்கும். ஆத்திர அவசரத்துக்கு நகை நட்டை அடகு பிடித்துக் கடன் கொடுப்பதும் உண்டு அது பெரும்பாலும் வங்கியில் கணக்கு வைத்து பணம் சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்காக மட்டும் இருக்கும். அப்புறம்…




Read more »

இன்று போய் நாளை வர வேண்டாம்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -21 இது கார்ப்பரேட் சிக்கனங்களின் காலம். இதுகாறும் பணத்தைத் தண்ணீர் போல் அல்லது அரபு நாட்டில் பெட்ரோல் போல் கைக்கு வந்தபடி செலவழித்த பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்கள் பைசா சுத்தமாகக் கணக்குப் பார்த்து வெட்டிச் செலவுக்குக் கத்தரிக்கோல் போடுவதில் மும்முரமாகி இருக்கின்றன. உலகமே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும்போது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள கஞ்சத்தனம் அவசியம் தேவை என்கிறார்கள் கோடி அசுரத் தொழிலதிபர்கள். முன்பெல்லாம், அதாவது நாலைந்து…




Read more »