Archive For செப்டம்பர் 1, 2008

தமிழ் சினிமா Meme (Me2)

By |

  Meme on Tamil cinema நாகார்ஜுனனும் நண்பர் ராஜநாயகமும் ஆரம்பித்து வைத்த மெமே. நண்பர் ஜெ.ராம்கி அழைத்ததால் கலந்து கொண்டு, இதோ பதில்கள் 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? ஆறு வயதில். சிவகங்கையில் அப்பா வங்கி நிர்வாகியாக (ஏஜெண்ட் என்பார்கள் அப்போ எல்லாம்) இருந்தபோது பேங்க் வாட்ச்மேன் கருப்பையாவோடு ஸ்ரீராம் தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்க அனுப்பப்பட்டேன் (அவர் வாட்ச்மேன் என்பதால் மாட்னி தான்…




Read more »

ஏ.ஜெ, ஈழத் தமிழர்கள், இந்து ராம்

By |

  AJ Canagaratna Festschrift முன்னிலைப்படுத்தி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுத் தமிழியல் வெளியீடாக வந்திருக்கும் ‘AJ: The Rooted Cosmopolitan’ படித்துக் கொண்டிருக்கிறேன். என் அன்புக்குரிய நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் முயற்சியில் வெளியாகி இருக்கும் அஞ்சலித் தொகுப்பு – festschrift. அன்புச் சகோதரி மதி கந்தசாமி போன்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்று அறிய மகிழ்ச்சி. ஏ.ஜெ பற்றி தமிழவன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், எஸ்.வி.ராஜதுரை, நுஃமான் போன்ற ஆய்வியல் அறிஞர்களின் கட்டுரைகளோடு, ஏ.ஜெ எழுதிய கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலைத் தொகுத்தவர்…




Read more »

செல், சத்தமாகச் சொல்

By |

  குங்குமம் பத்தி – அற்ப விஷயம்-9 ‘ஏதாச்சும் ப்ராப்ளம்னா உடனே கூப்பிடுங்க சார். என் செல்ஃபோன் நம்பரை நோட் பண்ணிக்குங்க’ இப்படிச் சொன்னவர் மத்திய அரசு தொலைபேசித் துறை ஊழியர். நீண்ட காலமாகப் பரிச்சயமானவர். தீபாவளி, பொங்கல், கையிருப்பு, பையிருப்பு குறைகிற நேரங்களில் அவருக்கு என் நினைவு வரும். டெலிபோன் இல்லாமல் ரிசீவரை மாத்திரம் பிய்த்து எடுத்துத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு சர்ரியலிச ஓவியத்திலிருந்து இறங்கி வந்த மாதிரி வீட்டுப் படியேறுவார். அறைக் கோடியில் சின்ன…




Read more »