Archive For செப்டம்பர் 1, 2008

பாம்பு மொழி

By |

  Kungumam Column அற்ப விஷயம் -13 அரச கட்டளை பிறப்பித்துக் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக் கட்டாயப்படுத்தாமல் இருந்தால், எந்த மொழியையும் கொஞ்சம்போல தெரிந்து கொள்ளலாம் தான். அதில் ஒரு சுவாரசியம் உண்டு. இந்தக் ‘கொஞ்சம் போல்’ விருப்பத்தை நிறைவேற்ற எத்தனை வழிகள். க்ராஷ் கோர்ஸ் என்ற அவசர வகுப்பு இதில் ஒன்று. உலகத்தில் பேசப்படும் முக்காலே மூணுவீசம் மொழிகளைப் படிக்க நல்ல மனசுக்காரர்களால் இந்த வகுப்புகள் அங்கங்கே நடத்தப்பட்டு, அவர்கள் மாதாந்திர வருமானத்தைக் கணிசமாகக்…




Read more »

24 * 7(இருபத்துநாலு பெருக்கல் ஏழு )

By |

  விகடன் சிறுகதைத் தொகுப்பு சிறுகதை இருபத்துநாலு பெருக்கல் ஏழு *********************** ரெட்டி எனக்கு ஈ-மெயில் அனுப்பியிருந்தான். ‘நடுராத்திரியில் டெலிவிஷன் பெட்டிக்குள் இருந்து நாலைந்து பேர் இறங்கி வருகிறார்கள். உடனே அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறாவிட்டால் நாளைக்கு என் சாவு தலைப்புச் செய்தியாகப் படிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். ‘ நான் என் கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே பார்த்தேன். அடுக்கடுக்காக விரிந்த புரோகிராமர்களின் கம்ப்யூட்டர் வரிசைக்கு ரொம்பவும் பின்னால் நாலாவது சுற்றில் ரெட்டியின் தலை தெரிந்தது. மேல் கூரையை…




Read more »

ஆறு மடிப்பு அம்சா

By |

  Kungumam Column – அற்ப விஷயம் 16 பழைய கருப்பு வெளுப்பு சினிமாக்களை, அதுவும் தென்னிந்திய மொழித் திரைப்படங்களை டி.வியில் பார்க்கும்போது இதயம் கனக்கிறது. கனக்காமல் என்ன செய்யும்? வஞ்சனையில்லாத வாளிப்பும் பூரிப்புமாக, இடுப்பில் டயர் வைத்த மாதிரி சதை போட்ட அந்தக் காலக் கதாநாயகியர் சிரமத்தைப் பார்க்காமல் ஓடுகிறார்கள். மேட்டூர், கல்லணை என்று ஒரு அணைக்கட்டு விடாமல் ஏறி இறங்குகிறார்கள். ஆடுகிறார்கள். இடைவேளைக்கு முன் அழ ஆரம்பிக்கிறார்கள். கதாநாயகர்கள் பற்றிச் சொல்வது தற்போதைக்கு ஒத்தி…




Read more »

கல்லறைக்காரர்

By |

யுகமாயினி பத்தி ஏதோ ஒரு பக்கம் கல்லறைக் காரர் இரா.முருகன் தோப்புத் தெரு வீடு பழையது. அதற்கு வயது கிட்டத்தட்ட நூற்றி இருபது. அழுக்குக் கறுப்புக் கல் சுவர் வைத்த வாசல். எடின்பரோ நகரத்தில் எல்லாக் கட்டிடங்களும் இதே கறுப்புக் கல் அலங்காரத்தோடு தான். ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கவே கூடாது. பார்த்தால் அநாதையாகக் கிடக்கிற தெரு நெடுக ஈரக் கறுப்பில் துக்கம் கொண்டாடுகிற இந்தக் கட்டிடங்களைப் பார்க்க எனக்கும் அழுகை…




Read more »

சாக்லெட் கிருஷ்ணா

By |

  On stage and back stage கத்தரி வெய்யில் பிற்பகலில் ராணி சீதை அரங்கம் நிரம்பி வழிகிறது. கிட்டத்தட்டக் குடை சாய்ந்த நாற்காலியில் சமாளித்து உட்கார்ந்த பெரியவர் திருப்தியாகச் சிரிக்கிறார். ஹிந்துவுக்கு லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதி வீட்டில், வெளியே சமாளிக்க வேண்டியிருக்கும் சகலமான சின்ன பெரிய இடைஞ்சல்கள் பற்றியும் புகார் செய்யக் கூடியவர் என்று பார்த்தாலே தெரிகிறது. ஆனாலும் இன்றைக்கு செய்ய மாட்டார். ஒண்ணு, ரெண்டு, மூணு என்று நாற்காலிகளை எண்ணிக் கொண்டு…




Read more »

அரையர் தேசம்

By |

  குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி தினசரி டிராபிக் சிக்னலில் திரும்பி வண்டி இடது புறத் தெருவில் நுழையும்போது இது தட்டுப்படத் தவறுவதே இல்லை. ஏழெட்டு பேர். வற்புறுத்தி எழுப்பி டிரஸ் செய்துவிட்டு நர்சரி பள்ளிக்கு இழுத்துப் போகப்படும் பெரிய சைஸ் குழந்தைகள் போல் அரை நிஜார். காலில் கான்வாஸ் ஷூ. வஞ்சனையில்லாத தொப்பையை மறைக்கும் டீ ஷர்ட், அறுபது சொச்சம் வயசுப் பெரிசுகள் எல்லோரும். இதில் ரெண்டு பேர் தரையில் விழுந்து விழுந்து கும்பிட்டு எழுந்து…




Read more »