FIFA 2018 – Final – France Vs Croatia பிரான்ஸ் வெற்றி வெண்பா மூன்று

FIFA2018 Finals – France Vs Croatia – France Wins World Cup (Fra 4 : Cro 2)

ஓர்கோல் எதிராளி மாண்ட்ச்கிக் தலைதானம்
வார்-அளித்த பென்னால்டி க்ரீஸ்மேனும் சேரிரண்டு
தெம்பாக பாக்பா இடங்காலால் மூன்றாக்க
எம்பாப் உதைத்தோர்நான் கு

இரா.முருகன் 1/3

குரோஷ்யா கொடுத்த கொடைக்கேது ஈடு
பரோபகாரி மாண்ட்ச்கிக் தலைதந்தார் ஓராமல்.
கோல்போஸ்டில் கூட்டமின்றி க்ரோஷியா கோல்போட
லாரிஸ்தீர் நன்றிக் கடன்

இரா.முருகன் 2/3

வந்ததுமே கைகொண்டு வாகாய் எறியாமல்
பந்தைத் தவறவிட்டுக் கால்தடவ அந்தோகோல்
ஆட்ட முடிவிலே லாரிஸ்கை கப்தரலை
போட்டாலும் போடுவார் கீழ்
இரா.முருகன் 3/3

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன