ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – கிரேசி மோகன், இரா.முருகன்

நாசி குறைந்தவர் நாடி அணிந்திட்டு
வாசிக்கக் கீழே நழுவுமே யோசியாது
ஆப்டிக்ஸில் வாங்கியணி அல்டிமேட் கண்ணாடி
சேஃப்டிபின் மூக்கில் நுழைத்து

இரா.முருகன் https://t.co/cxnUMDc3xV

சைனாவின் ஸ்பெக்ஸை சரிபார்க் கபோட்டயென்
நைனாவின் நாசிஎகிப்து நாசர்போல்- ஒய்நாட்(WHY NOT)யென்(று)
ஆயா கொடுத்த அரணா கயிறுபின்(PIN)னால்
சாயாது(கண்ணாடி) வாசம் சகித்து’’….கிரேசி மோகன்….!

ஏழுபெண் வீட்டிலே ஏதோ பரபரப்பு
பாழும்பேன் நீள்கூந்தல் பற்றியுள் வாழுதாம்
சோப்பிட் டொழிக்கலாம் வாரிச் சிடுக்கெடுக்க
சீப்பெங்கே போனது சொல்

இரா.முருகன் https://t.co/qPpFp7bihc

அஞ்சுபெண் பெத்தவர் ஆண்டியாம் ,ஆதலால்
அஞ்சுகமாய் ஏழுபெண் அடைந்தாராம் -பாழும்பேன்
கூப்பிட வாராது வாராத கூந்தலோபாழ்
காப்பிதற்கு சோப்பல்ல சீப்பு’’….கிரேசி மோகன்….!


வேறேதோ கோள்விட்டு வந்ததாம் வானவழி
பேரேதும் இன்றிப் பெருஞ்சிலந்தி ஓர்கேள்வி
வீடதனை விட்டுநாம் விண்ணகம் ஏகும்நாள்
கூட வருமோ கரப்பு
(இரா.முருகன்)
https://t.co/6KnY9JRoxj

‘’அடசையிது பேகான் அடித்திடப் போகும்
கடைசையது(சலாம் ஸ்டோர்ஸ்) சொல்வதைக் கேட்டால்! -கடைசி
வரைகரப்பு!, கல்லா வளருமாம் குந்த
கரைந்தார் செளகார்சேட்(செளகார்பேட்டை சேட்) காசு’’….கிரேசி மோகன்….!

மாப்பிள்ளை தாத்தாவை மைடியர் என்றழைத்துக்
காப்பியென ரம்கொடுத்து கட்டாயம் சாப்பிடென்ற
பெண்ணெழுந்து ஓடினாள் பெய்யும் மழைதனில்
கண்ணாடி வாங்க மறந்து
(இரா.முருகன்)

“மாட்டவில்லை கண்ணாடி மூக்கில் மணமகள்
பாட்டனாய்ப் பார்த்தாள் பொடியனை -காட்டமாய்ரம்
காப்பியென்று தந்தவர்க்கோ டீயே மதுரமாம்(மது ரம் மாம்-டீ டோட்டலர்)
மாப்பிள்ளைப் பையர் முறுக்கு’’….கிரேசி மோகன்….!

ஆண்டிரு நூறுஜப்பான் ஆலந்து நாடுமட்டும்
பூண்டதோர் கேண்மையே போதுமென்று கூண்டிருந்தார்
பட்டனைத் தட்டினாற்போல் பார்பொழியும் ஆங்கிலத்தில்
சட்டெனக் கைவிட்ட டச்சு.

இரா.முருகன்

டச்சு – Dutch language https://t.co/BB6YbdasW4

’’ஆங்கில மோகமின்றி, அஞ்ஞாத வாசத்தில்
தேங்கியதாம் ஜப்பான் தனிமையில்(இருநூறு வருடங்கள்); -ஈங்குள
அம்பாசிடர் டச்சை அவர்கள் மறுத்திட
சம்ஸாரிப் பீர்இங்லீஷ்(ENGLISH) சார்’’….கிரேசி மோகன்….!

வேக்குவம் க்ளீனரிட்டு வேகம் தரைமெழுகி
நோக்கிச் சுவரில்நூ லாம்படையே நீக்கிடினும்
நம்புவீர் சுத்தத்தில் நம்வீட்டை மிஞ்சிவிடும்
சிம்பன்ஸி வாழும் இடம்

இரா.முருகன்

https://t.co/LT6OUpv9Ja …

“சங்கத் தமிழ்பேசும் ,சங்கீதம் தாரகம்,
வங்கக் கடல்தாண்டும் வானரம் , -சிங்கநண்பன் ,
சிம்பன்ஸி கட்டிலில்அ சுத்தம் கிடையாது
கம்பனின் வீட்டுக் கவி”….!கிரேசி மோகன்….!

ஆரிஸிள மன்னரின் அன்பு மனையாட்டி
பேரிட் டழைத்தேதான் பேசியதென் நேராய்வா
சேலை உடுத்திய சேல்விழியைப் பார்த்தபடி
காலை மிதிக்கிறாய் நீ.

இரா.முருகன்

———————————————-

’மேகனிடம் ஹாரிஸவர், மோகனமாய் ஹிஸ்ஸி(HISS)யது,
மேகன் பதிலாய் முனகியதென்(என்) -ஊகமது,
‘’சீர்வரிஸை கண்டு சிலாகிக்கும் சீப்(CHEAP)மன்னா
போர்வா ரிசுப்பற்றிப் பேசு’’….!கிரேசி மோகன்….!

————————————————

1)Press is trying to figure out through lip reading what Harry hissed to the bride Meghan at the Alter and what she replied

2) No Wedding Gifts, Donate To Mumbai Charity who distribute low cast sanitary napkin to poor women in Mumbai. A few sari clad ladies on behalf of the charity participated in the wedding

*************************************************************************************
வெஞ்சம ரில்பொருதும் வீரர்க்கு வேகவைத்த
வெஞ்சனமாய்க் கொண்டுதர வெள்ளரிப் பிஞ்சு
அகரமிட்டார் ஆங்கிலேயர் அப்புறம் ஃப்ரஞ்சு
தகரடப்பா கண்டு பிடிப்பு. 1/2

இரா.முருகன் https://t.co/I9ovLgIkh2

டப்பா பிறந்தாலும் தட்டித் திறந்திட
தப்பாகக் கத்தி சிறுகல்லேன் குப்பாநீ
கேணயனாய்க் கைநசுக்கி வாயிலிட்டு நிற்காதே
கேனோப்ப னர்கொள் எடுத்து. 2/2

இரா.முருகன்
——————————————————————————-
”அகர முதல்எழுத்தாம் ஆதி பகவன்
தகரம் கிழிக்கும்சைத் தானாம் -அகர
உகர மகரமான ஓங்காரி அம்பாள்
சிகர பிரகிருதி ஸ்ரீ’’….கிரேசி மோகன்….!

’ஓப்பனர் இல்லாமல் ஓருளி கொண்டடித்து
சாப்பிட ஃப்ரெஞ்ச்டீம் சிரமப்பட்(டு) -ஆப்பில்
அகப்பட்ட மந்தியாய் ஆன(து) இதுவே
தகரம் பிறந்தக தை’’….கிரேசி மோகன்….!

’நிக்காது போனதால் நெப்போலி யன்சண்டை
திக்கற்ற பார்வதி(வெள்ளையன்) சர்க்காரோ -உக்கர்ந்து
அஞ்ஞானத் தில்முழ்க அற்புத ஃப்ரெஞ்ச்டீமின்
விஞ்ஞான மேடின்(தகரம்)சா வி(ஓப்பனர்)’’….கிரேசி மோகன்….!

காலைமுன் வாசல் கடந்து விழுந்திருக்கு
வேலைக்குப் போகுமுன் வேகமெடு தாளை
பகையிலை பூமியில் பார்த்துக் கிழித்துப்
புகையிலை சுற்றிப் புகை.

(இரா.முருகன்) https://t.co/Vi9uGqwfL8

சீக்ரெட்டாய் THEFTதம(திருட்டு தம்) சிகரெட்டை காம்ரேடும்-
பாக்காது பற்றவைக்க பேப்பரில்தீ! -ஜாக்கிரதை!
சோவியத் கேன்சரால் சோதனை, ஆன்சராய்(ANSWER )
யாவிலுமி லைபுகையி லை”….கிரேசி மோகன்….!

கூறுகெட்ட மன்னனிட்ட சட்டம் அதிகவரி
ஆறுஜன்னல் மேலிருந்தால் கட்டணுமாம் நூறுதினம்
போகுமுன்பு ஜன்னல் கதவடைத்துக் கட்டினார்
ஏகவழி போய்வரவே தாம்பு

இரா.முருகன் https://t.co/3qdpoP3C5F

கிரேசி கிரியேஷன் நாடகத்தில் வாஸ்து ஜோசியராக வந்து கலக்கிய நீலு அண்ணா (திரு நீலகண்டன்) அவர்களுக்கு சமர்ப்பணம் – வீட்டு வாசல்படியை உபயோகிக்காமல் தாம்புக் கயறு கொண்டு தாண்டிக் குதித்துப் போகச் சொல்லும் ஜோசியர் கதாபாத்திரம்
———————————————————————-

”விண்டோ(WINDOW) வரியில், விடோ(WIDOW)வின் வரியிங்கு
உண்டோசார் வில்லியென்றார்(வில்லியம்ஸ்-செல்லம் கொண்டாடலாம்) பண்டாரகர்(கஜானா இன்சார்ஜ்) -முண்டமே(இது வில்லி 3)-
விண்டோஎன்(WINDOW N) ஸைலண்ட்(SILENT) விடோ(WIDOW)வாய் அருத்தம்கொள்
லண்ட(ன்)(LONDON)அக ராதி லவுட்டு”…கிரேசி மோகன்….!

சாக்லேட் கிஷ்ணா வெண்பா ….!
———————————————–

“தாம்பிலேறி ஆடி தலைவாசல் தாண்டிட,
காம்பிலேறி பூதனை கள்ளுண்ட :-பாம்பிலேறித்
தூங்கும் பெருமாளின் தில்லில்லா, மாதுபின்
வாங்கினான், நீலுவின் வாக்கு”….கிரேசி மோகன்….!

மேல்வீழும் பூண்டவுறை* முப்பதிஞ்சு பள்ளத்தில்
காலிடறித் தான்சரியப் பல்லுடையும் மேல்காயம்
பைக்குள் பணமிருந்தால் பஸ்ஸில்போ ப்ரிட்டனில்
சைக்கிளோட் டாதே நட

இரா.முருகன் 1/2

*பூண்டவுறை – used condom

பாதிவழி தான்மறைத்துப் போட்டகுப்பை கூளங்கள்
மோதி உயிரெடுக்கும் மோட்டார்கார் வாதனைகள்
எங்கும் பறித்திருக்கும் பள்ளத்தில் நீர்நிறையும்
இங்கில்லை லண்டன் தெரு

இரா.முருகன் 2/2
———————————————————————————-
ப்ரிட்டன் ஸகவாஸி(சுகவாஸி) உவாச….!
– ———————–
’’என்ஸைக்கி ளைப்பிடிய்யா வெண்ப்ரிடானி காவெள்ளை
உன்ரோடில் ஊழல் உபத்திரவம் -பின்ஸீட்டில்
டோண்ட்-பைஸைக் கிள்சொல்லும் டார்லிங் குளிக்காமல்
பேண்ட்ஷர்ட்டில் ஸெண்டடித்தாள் பார்’’….கிரேசி மோகன்….!
———————————————————-
என்ஸைக்கி ளைப்பிடிய்யா வெண்ப்ரிடானி கா(EN CYCLO PEDIA BRITANNICA)வெள்ளை(WHITE COP….!)
உன்ரோடில் ஊழல் உபத்திரவம் -பின்ஸீட்டில்
டோண்ட்-பைஸைக்(DONT BUY CYCLE) கிள்சொல்லும் டார்லிங் குளிக்காமல்
பேண்ட்ஷர்ட்டில்(PANT SHIRT) ஸெண்டடித்தாள்(SCENT) பார்’’….கிரேசி மோகன்..

உயரக் குறைவென்று ஊர்கூடி எள்ளித்
துயரம் தருசொல் மொழியும் அயராதே
அள்ளிய ணைத்திட ஆசையாய் யாருண்டு
குள்ளப்போ டாடுபூ சை

இரா.முருகன் https://t.co/rKBcHa2T9d
——————————————————-

கருப்புநிறப் பூனை விருப்பு வெறுப்பை
அறுத்த மணிவண்ணன் ஆகும் -பொருப்பாய்
கமிங்ஷார்ட்லி(coming shortly) குள்ளமணி கட்டு மணியை:
திமிங்கலமால் நெக்கைத்(neck) திருப்பு “…..கிரேசி மோகன்….!

செத்தவன் பாட்டிசைத்து சேர்த்ததோர் கூடாக
நித்தம் துயிலெழுப்பும் நேரம்கேள் சத்தம்
ஒருநாள் உனக்குவரும் வேளை உறங்கத்
திருநாள்தான் இன்று எழு.

(இரா.முருகன்)

சொப்பனத்தில் கண்ட சொகுசான தூக்கமது
அப்படியே போச்சு அடரமணா ! -அப்புறம்
எப்படியோ என்னை எவனோ எழுப்பினான்
இப்படித் தானா இறப்பு!…. கிரேசி மோகன்

குப்பன்தன் சொப்பனத்தில் சுப்பனாய் மாறுகிறான்
குப்பென வேர்த்து விழிக்கின்றான் -தப்பிதில்
குப்பனாய் சுப்பனாய் கோலங்கொள் நானைநீ
துப்புர வாக்கத் தெளிவு….கிரேசி மோகன்….!

Skeleton Mechanical Alarm Clock (late 1800s) (credits: Science Museum, London)

பேசாதே வாய்திறந்து பேப்பர் இரைக்காதே
தூசியெழத் தும்மாதே தின்னாதே ஓசையெழ
தப்பாம் அடுத்தவர் தோள்சாய்ந் துறங்குவது
ஜப்பானில் மெட்ரோ ரயில் .

இரா.முருகன்
——————————————–
’’துப்பாதே VSP*, தூங்காதே தோள்கண்டால்,
சப்பாணி உந்தன் சகபயணி -அப்பாலே
ஓடும்போ(து) ஏறாதே, உங்கஊர் மெட்றாஸ்
ரோடல்ல மெட்ரோ ரெயில்’’….கிரேசி மோகன்….!

http://www.thehindu.com/…/japans-art-of…/article24068281.ece

*VSP – வெற்றிலை சீவல் புகையிலை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன