காந்தியை வரையப் போகிறவள்

ஓவியக்காரி, சுவரில் சார்த்தி வைத்திருந்த, பாதி வரைந்த இரண்டு கான்வாஸ்களை எடுத்து வரைபலகையில் பிணைத்தாள். வலிய அப்பூப்பன் கேட்டார் : “யூ சூச்சி? யூ பரங்கிச்சி?”

“வாட்?”

“யூ ஆங்க்லோ இண்டியன்? யூ மிக்சர்?”

“”எஸ், ஐ ஆம் சார்ட் ஆஃப் ஆங்க்லோ இண்டியன்”, ஓவியக்காரி சிரித்தபடி சொன்னாள்.

“யூ ப்ரகான்ஸ்? டிஸுஸா, வில்லிமஸ், டிகுஞ்ச்?”

“நோ, ஐ ஷெர்கில்”

“யூ ஹாலண்ட்? போர்துகல்? இங்க்லாண்ட்?” லூயி வலிய அப்பூப்பன் கேட்டார்.

“நாட் ஹாலண்ட், போர்ட்டுகல் ஆர் இங்லாண்ட். மை ஃபாதர் பஞ்சாபி அண்ட் மதர் ஹங்கரி”

“ஒய்? யுவர் மதர் பூவர்?” கரிசனத்தோடு கேட்டார் வலிய அப்பூப்பன்.”நோ ரைஸ்”?

“நாட் தட். நாட் ஹங்க்ரி. எ கண்ட்ரி. ஹங்கரி. லைக் ஹாலண்ட், போர்ட்டுகல்”

”தென் யு ஆர் ஒரிஜினல் பரங்கிச்சி”

ஓவியக்காரி லூயி அப்பூப்பன் அருகில் வந்து நின்றாள். சட்டென்று லூயி அப்பூப்பனுக்கு முதலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி நினைவு வந்தது. “வாட்டீஸுவர் நேம்?”

“அம்ருதா. ஐ ஆம் எ பெயிண்டர். ஐ ஆம் ஹென்ரி அண்ட் பாப்லோ ஆஃப் இந்தியா. தட் இஸ் மட்டீஸ் அண்ட் பிகாஸோ”

அம்ருதாவில் குறும்பான விரல்கள் லூயி அப்பூப்பனின் நெற்றியில் விழுந்த அவருடைய முடியைப் பற்றிக் கலைத்துக் கொண்டிருந்தன. அவள் தன் ஆள்காட்டி விரலால் அவருடைய பக்கவாட்டு முகத் தோற்றத்தைக் தீற்றிக் கொண்டிருந்தாள். தலையில் தொட்டு வலிய அப்பூப்பனின் விசாலமான நெற்றிக்கு இறங்கிய அந்த விரல் அவர் கூர்மையான நாசியை ஸ்பரிசித்து அவருடைய உதடுகளுக்கு இறங்கியபோது வலிய அப்பூப்பன் அவளுடைய கையை இறுகப் பற்றினார். அவருடைய வலிமையான கரங்களுக்குள், பாக்கு மரப் பூக்குலை போல அவள் உள்ளங்கை தளர்ந்து கிடந்தது. லூயி அப்பூப்பன் சொன்னார் : “சின்னப் பொண்ணே, இந்த வயசான காலத்திலேயும் லூயிக்கு விளையாடலாம்னு தோணிச்சுன்னா விளையாட முடியும். ஆனா லூயி விவஸ்தை கெட்டவன் இல்லே”.

“வாட்?”

“ஐ டோண்ட் ப்ளே யூ”

“ப்ளே மீ”. அம்ருதா சொன்னாள்.

“பொண்ணே, போஞ்ஞிக்கரை கல்லறையிலே ஒருத்தி எனக்குன்னு காத்துக்கிட்டு அந்திம உறக்கத்திலே படுத்திருக்கா. அவ என் பிரியமான பெண்ஜாதி திரேசா. நான் வேறே யாரோடேயும் விளையாடினா அவள் சங்கடப்படுவா. அதனாலே, நோ ப்ளே”.

“ப்ளே மீ ப்ளீஸ்”

“நோ ப்ளே. டெட் ஒய்ப் தெரிசா வெயிட்ட்ங்க் பார் மி அட் போஞ்ஞிக்கர சிமெடெரி”.

அம்ருதா வலிய அப்பூப்பனின் கையில் முத்தமிட்டு உள்ளரைக்குப் போனாள். சிறிது நேரத்தில் கருப்பு கால்சராயும் மேல்சட்டையும் அணிந்து திரும்பினாள். படம் தாங்கு பலகைகளைச் சுட்டிக்காடி அவள் சொன்னாள் : “தீஸ் பாலெட்ஸ் ஆர் தி மோஸ்ட் ப்யூட்டிஃபுல்”. லூயி வலிய அப்பூப்பனின் கையில் ஒரு கட்டு கரன்சி நோட்டுக்களைக் கொடுத்த அம்ருதா அவர் கழுத்தில் ஒரு சிவப்புக் கம்பளி மஃப்ளரை அணிவித்தாள். “மை ப்ரசெண்ட்”.

“வென் யூ கோ?” வலிய அப்பூப்பன் கேட்டார்.

“ஆஃப்டர் ஐ ஃபினிஷ் திஸ் பெயிண்டிங்க்ஸ். ஐ கோ டு கேப் காமரின் டு ஸ்கெச் அ ஹாஃப் நேகட் மாடல்”, அம்ருதா சொன்னாள்.

“ஹாஃப் நேகட் மாடல்? லைக் திஸ்?” மார்பில் கை சுண்டிக்காட்டியபடி கேட்டார் வலிய அப்பூப்பன். “ஒய்? யு கெட் மெனி ஹியர்”.

“நோ, திஸ் ஒன் இஸ் ஸ்பெஷல்”, அம்ருதா சொன்னாள். “ஹி இஸ் மிஸ்டர் காந்தி”.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன