வீட்டுக்கு மின்சாரம் வந்தபோது

மின்சார ஒயரிங் வேலை முடிந்த பிறகு எங்கள் வீட்டுக்கு வெளியே நின்ற மின்கம்பத்தில் ஏறி லைன்மேன் ப்யூஸைச் செருகினார். வீட்டுக்குள் எலக்ட்ரீஷியன்கள் மெயின் சுவிட்சை ஆன் செய்தார்கள். எல்லா விளக்குகளும் ஒளிவிட்டு எரிந்தன. திரு இதயப் படத்தின் முன், திரி போல் ஒளிர்ந்த சிவந்த ஸீரோ வாட் பல்ப் எரிய, நாங்கள் மண்டியிட்டிருந்தோம்.

மூன்று முறை, இரண்டு முறை.. போஞ்ஞிக்கரை மாதாகோவிலில் மணி முழங்கியது. மூன்று – இரண்டு இந்தத் தாளம் அப்பனைத் துள்ளி எழ வைத்தது. அப்பன் சொன்னார் : “யாரோ செத்துப் போயிட்டாங்க. மரண மணி இது”. துண்டைத் தோளில் இட்டு அப்பன் தெருவில் இறங்கினார். வழியில் யாரும் தட்டுப்படாததால் அப்பன் அரண்மனை படகுத்துறைக்கு நடந்தார். அங்கே பெரிய ஜனக்கூட்டத்துக்கு நடுவே சிவந்த பீடி சுற்றும் நூல்களால் ஆன மாலைகளை அணிந்துகொண்டு ஷெனாய் நின்றிருந்தார். கோமஸ்சேட்டன் அப்பன் அருகில் வந்து சொன்னார் : “தோழர் ஷெனாய் திரும்பிப் போறார். தில்லியில் கட்சி காங்கிரஸில் ஊழியம் செய்யப் போய்க்கிட்டிருக்கார்”.

“எதுக்கு சாவு மணி அடிச்சாங்க, கோம்ஸே? போப்பாண்டவர் இறந்துட்டாரா?”

“ஏய், அதொண்ணுமில்லே.. கவர்னர் ராமகிருஷ்ண ராவ் சகா ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டுக்கு முதலமைச்சராக வாக்குறுதியும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வச்சிருக்கார்”.

(மலையாளத்தில் இருந்து லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள் நாவலை மொழிபெயர்த்தபடி இருக்கிறேன். அதிலிருந்து ஒரு சிறு துணுக்கு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன