யாத்ரா மொழி

 

மலையாள மூலம் : கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழ் மொழியாக்கம் (transcreation) : இரா.முருகன் ·

புலருவான் ஏழர ராவேயுள்ளு,
பூங்கோழி கூவிக் கழிஞ்ஞேயுள்ளு
கண்ணீரில் முங்ஙிக் குளிகழிஞ்ஞு,
வெண்ணீரு கொண்டு குறிவரச்சு,
துரிதம் கொண்டொரு நிறபற நிறச்சு,
கூளக் குடுக்க எறிஞ்ஞுடச்சு,
தாளத்தில் மூன்னு வலத்து வெச்சு,
இலவாட்டித் துக்கம் பொதிஞ்ஞு கெட்டி,
மாறாப்பில் ஸ்வப்னம் நிறச்சு கெட்டி,ஏழரக் கம்புள்ள வடியெடுத்து,
ஏழரக் கம்புள்ள குடயெடுத்து, வ்யத
வெச்சுண்ணான் சிற்றுருளி ஒண்ணெடுத்து,
இடக்காலு வச்சுப் படி கடன்னே,
இடநெஞ்சு பொட்டித் திரிஞ்ஞு நின்னே.

(விடியப் போகிறது.
சேவல் கூவிவிட்டது.
கண்ணீரில் முங்கிக் குளித்தேன்.
சாம்பலை நெற்றியில் பூசினேன்.
துயரம் கொண்டு நெல்லளக்கும் படி நிறைத்தேன்
கூளச் சிரட்டையை எறிந்து உடைத்தேன்
பழைய தாளவாத்தியம் எடுத்து வைத்தேன்
இலை வாட்டித் துக்கம் அடைத்துக் கட்டினேன்
மூட்டையில் கனவுகள் நிறைத்துக் கட்டினேன்
நீளமாயரு கோலெடுத்தேன், குடையெடுத்தேன்.
துக்கத்தை வைத்து உண்ணச் சிறியதொரு
பாத்திரமும் எடுத்துக் கொண்டேன்.
இடது கால் வைத்து வாயிற்படி கடந்து
இதயம் உடையத் திரும்பி நின்றேன்.)

அம்மே,
பின்விளி விளிக்காதெ,
முடிநாரு கொண்டென்றெ காலுகெட்டாதெ,
படிபாதிசாரித் திரிச்சுபோக
தெளியுன்னதில்ல நிற
மிழியிலொரு வழியும்.
ஒழியுன்னதில்லீ இழஞ்ஞி ராகுகாலம்
பாபசாபங்கள் கடுமஞ்ஞள்களம் வரச்சாடி
இருள் ஆண்டொரென் கர்ம்ம பதங்ஙளில்,
தாலம் பொலிக்க ம்ருதிநாதங்ஙளே, திரிகள்
நீளெத்தெளிக்க சிவபூதங்ஙளே,
காண்க,

(அம்மா, பார்,
பின்னாலிருந்து அழைக்காமல்,
உன் தலைமுடி இழைகளால் என் காலைக் கட்டாமல்
பாதிப் படிகள் கடந்து திரும்பிப் போகக்
கண்ணீர் நிறைந்த விழிகளில்
வழியெதுவும் தெரியவில்லை.
முடியாமல் தொடர்ந்து வரும் ராகுகாலம்
பாவங்களும் சாபங்களும் அழுத்தமாய் மஞ்சள் கோலமிட்ட
இருளடர்ந்த என் விதியின் வழியே
தட்டில் வைத்த விளக்கேந்தி வரும் இறப்பின் ஒலிகள்,
விளக்குத் திரிகள் நீண்டு சுடர்விடச் செய்யும் சிவபூதங்கள்).

என்றெ தளர்ன்ன வலங்கையிலெ க்லாவு
மொந்தயில் கண்ணுநீரிற்றுபோல் ஜீவிதவும்,
எந்தினதில் அலியுமொரு நக்ஷத்ர ரச்மிதன்
புஞ்ஞரிப்பாடும் கழிஞ்ஞு கழிஞ்ஞு
பண்டேதோ துலாவரிஷ ராவின்றெ மச்சறயில்
ஏகாந்த மாத்ரயிலொராக்யேனய நிர்வ்ருதி
நுணஞ்ஞதினு சிக்ஷயாய்ப் பெங்ஙளே, அன்னு நீ,
உள்ளில் முளகொள்ளும் துடிப்பும் ஞரம்புகளில்
உண்ணித்ரமாளுன்ன நோவுமாய் ஆறின்ற
நெஞ்சகம் கீறிப் பிளர்ன்னு மறகொண்டதும்,
ஒரீரன் நிலாவு மிழிபொத்திக் கரஞ்ஞதும்
ஆரோர்க்குவான் இனி?

(என் தளர்ந்த வலக்கையில் களிம்பு படர்ந்த கோப்பையில்
கண்ணீர்த்துளி போல் வாழ்க்கையும்
எதற்கோ அதில் அசையுமொரு நட்சத்திர ஒளிக்கற்றையின்
புன்சிரிப்பும் முடிந்தே போனது.
முன்பு ஏதோ மழைக்காலக் காலையின் மாடியறையில்
தனித்திருந்த கணத்தில் ஒரு பொன்னான நிம்மதி
தேடியதற்குத் தண்டனையாய், சகோதரியே, அன்று நீ
மனதில் துளிர்க்கும் துடிப்பும் நரம்புகளில்
உறங்காத நோவுமாய்
நெஞ்சு கீறிப் பிளந்து அதை மறந்ததும்
ஒரு ஈர நிலா கண்மூடி அழுததும் பற்றி
யார் இனி நினைப்பார்கள்?)

அம்மே, இது காண்க,
என்னே களிவிளக்கின் ஒளிகெட்டுப்போயி ஈ அரங்ஙத்த
என்னே ருதுக்கள்தன் கால்சிலம்பொச்சகள்
ஒழிஞ்š போய் ஈ அரங்கத்து?

(அம்மா, இதைப் பார்.
இந்த நாடக அரங்கின் விளக்கு அணைந்து போனது ஏன்?
பருவங்களின் கால் சிலம்பொலி
இந்த அரங்கில் இல்லாமல் போனது ஏன்?)

பாதிராதோறும்
பகலறுதி தோறும்
நாகசுக காகளி கழிஞ்ஞு
வாயில்த்தெறுத்தே,
ஸீதா துக்கமுள்ளில்க்கடஞ்ஞே
இமகளில் உறக்கம் கடிச்சே காணிகள் பிரிஞ்ஞு
ஆளுமாளும் வெளிச்சவுமணஞ்ஞ கூத்தம்பலம்.
மூன்னாம் பதம் பாடியாடுன்னு மூகத மாத்ரம்.

(நடு இரவில்
நாடகம் முடிந்து
சீதையின் துக்கம் மனதில் அழுந்தி நிற்க
இமைகளில் உறக்கம் அழுத்த
மவுனமாய்ப் பார்வையாளர்கள் போனார்கள்.
ஆளரவமற்ற, விளக்கணைந்த
அரங்கம் இது
மௌனம் மட்டும் பாடியாடும்).

மனஸ்ஸின்ரே
தட்டின்புறங்ஙளில் இருட்டில் சவச்செண்ட
கொட்டியுறயுன்னு, பலிச்சோறினாய் வரள்கொக்கு
பிளருன்னு; விலங்ஙிட்டு கய்யுகள்
கிலுக்கி அலறுன்னு பித்ருக்கள்
இத்தட்டகம்
நில்க்குவான் வய்யாதெ பொள்ளுன்னு பொள்ளுன்னு

(மனதின் மேல்தளத்து இருளில் பிணமேளம்
ஒலியுயர்த்தி முழங்குகிறது
தானமாக வரும் பிண்டத்துக்காக
காகம் கரைகிறது.
விலங்கிட்ட கைகள் குலுக்கி
முன்னோர் ஓலமிடுகிறார்கள்
இந்த நிலம்
நிற்க முடியாமல் சூடாகிக் கொண்டே இருக்கிறது).

கத்துன்ன பட்டடயில் அச்சன்றெ சங்கிலிடி
வெட்டுன்ன பொட்டலில் உடல் கொட்டு பொட்டி, மிழி
ரக்தம் சுரத்தி நிலகொள்ளுன்னொரம்மே,
கழுத்தில் கைகள்
சுற்றிப் பிடிச்சே விதும்புன்ன தாலியில்
அமர்த்திப் பிடிச்சுத் துடிகொட்டுன்ன ஹ்ருத்தில்
மிழிநீர்க்குடம் கொத்தி நில்க்குன்னொரென்னம்மே,
இனி
ஞானே தொழுத்திலொரு வைக்கோல் துரும்பினு
கரஞ்ஞே விளிக்குமீ பைக்கள்க்குக் காவல்
என்னாகிலும் போகான் வய்ய.

(எரியும் இடுகாட்டில் தகப்பனின் கழுத்தில்
இடி வெட்டும் பொட்டலில்
உடல் நடுங்க விம்மி,
விழிகளில் குருதி பொங்க நிற்கும் என் அம்மா,
கழுத்தில் கைகள் சுற்றிப் பிடித்து
விம்மும் தாலியில்,
மெல்லப் பறைகொட்டும் இதயத்தில்
விழிநீர்க்குடம் எடுத்து நிற்கும் என் அம்மா,
இனி
நானே தொழுவத்தில் ஒரு வைக்கோல் துரும்புக்காக
அரற்றி அழைக்கும் இந்தக் கன்றுகளுக்குக் காவல்
என்றாலும் போகாமல் முடியாது)

பதினாலு சம்வல்ஸரம் நகர காந்தார ஸீமகளில்
வாழாதெ வய்ய.
திரிச்செத்தும்பொழென்றெ ப்ரிய வைதேஹியெக்
காட்டில் எறியாதெ வய்ய.
ஸஹஜ ஸௌமித்ரியெப் பிரிஞ்ஞிடாதெ வய்ய.
ஒடுவிலொரு காஞ்சனப் பிரதிமதன் முன்னிலென்
கரளில் எரியுன்னொரீ ஹோமாக்னி சாக்ஷ¢யாய்
அச்வமேதம் நடத்தாதெயும், யாக
ஹயத்தில் குளம்படியச்ச தன்னுத்தாள
பக்ஷங்ஙள் கொண்டென்றெ அஸ்திகள் நூறாய்த்
தெறிக்காதெயும் வய்ய.

(பதினான்கு வருடம் வெளிநகரங்களில்
வனவாசம் செய்யாமல் முடியாது.
திரும்பி வரும்போது என் அன்பான சீதையைக்
காட்டில் எறியாமல் முடியாது.
நட்புள்ளவளைப் பிரியாமல் முடியாது.
இறுதியில் ஒரு பொற்சிலை முன்னால்
என் இதயத்தில் எரியும் அக்னி சாட்சியாக
அச்வமேத யாகம் நடத்தாமலும்
யாகசாலையில் குளம்புகள் ஒலிக்க
என் அஸ்தி நூறு துணுக்குகளாகச்
சிதறாமலும் இருக்க முடியாது).

வய்ய, ஞானம்மே, கடம் கொண்ட நந்துணியில்
ஓணத்தினல்ல, விஷ¤ வேலய்க்குமல்ல உருகும்
ஓர்ம்மயில் ஓரோட்டுருளி பொட்டும் பித்ருக்களுடெ
ச்ரார்த்ததினொரு புலச்சிந்து பாடான் வராம்.

(முடியாது என்னால் அம்மா,
பிணத்திடம் கடன் வாங்கிய உடுதுணியோடு
ஓணத்திற்கில்லை, விஷ¤வுக்கும் இல்லை
நினைவில் மண்சட்டி உடைக்கும் முன்னோரின்
திவசத்தில் ஒப்பாரி வைக்க வருவேன்).

இன்னேயிடம் காலுவெச்சு இறங்ஙட்டெ ஞான்
ஒன்னேவரம் தரிகெனிக்கு மூர்த்தாவில்,
ஒரு வீடாக்கடம் போல்
ஒடுக்கத்தெ அத்தாழமென்னபோல்
பொரியுன்ன நாவில்
பவித்ரத்தில் நின்னிற்று
வீழும் ஜலம் போலொரந்த்ய யாத்ராமொழி
பின்னெ,
வடிகுத்தி ஞான் நட கொள்ளும்போழம்மே,
பின்விளி விளிக்காதெ,
மிழிநாரு கொண்டென்றெ கழலு கெட்டாதெ,
படிபாதி சாரித் திரிஞ்ஞு பொய்க்கோளூ
கரள்பாதி சாரித் திரிச்சு பொய்க்கோளு.

(இப்போது நான் போகிறேன்
ஒரு வரம் தா எனக்கு
தீராத கடன் போல்
இறுதி ராத்திரி உணவாக
நடுங்கும் நாவில்
புனிதத்திலிருந்து உதிர்ந்து விழும் நீர்போல்
போய்வா என விடை கொடு.
பிறகு,
நான் கைக்கோல் ஊன்றி நடப்பேன்
பின்னிலிருந்து கூப்பிடாமல்
இமை முடி கொண்டு என் கால்களைக் கட்டாமல்
படிகள் பாதி கடந்து நீ போ
இதயம் பாதி திரும்பி நீ போ.).

Balachandran Chullikadu narrating (singing) his ‘Yaatramozhi’
http://www.youtube.com/watch?v=RFQR9ue7hwc&feature=related

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன