Random jottings

 

படியேறி மூச்சிறைக்கப் பால்பாக்கெட் வைத்துத்
தடுமாறிப் போகின்றாள் தாயி – நொடியில்
அறையெங்கும் பாலாறு அக்கிழவி பாவம்
குறையொன்றும் இல்லைகண் ணா
(நடந்தபடி நகர்வெண்பா)**************************

பூங்கா நடையில் புதிதாக ஓர்குரல்
ஏங்கி அழுமோர் குழந்தையை -ஓங்கிச்
சிரசில் குட்டி மிரட்டுரார் தந்தை
‘சிரிடா’. தெரபி சிரிப்பு.

…(Laugh therapy-ல் பங்கு பெற மகனோடு வந்த அப்பா, சும்மா நிற்கிற மகனை சிரிக்கச் சொல்லி மிரட்டுவதைக் கேட்டு – நடந்தபடி நகர்வெண்பா)

*******************************

பூங்கா சுவர் பற்றிப் பிடித்து
ஓங்கி உயர்ந்து தொப்பை வைத்தவர்
ஒரு மணி நேரமாய்க் காலை உயர்த்தறார்
உயர்த்தி மடக்கி மீண்டும் உயர்த்தறார்
இன்னும் நனையவில்லை சுவர்.

…(ஹைக்கூ இல்லை பொய்க்கூ)

***************************

பாமா இதயம் பறிமுதல் ஆனது
ஆமை புகுந்திட்ட வீடு

…கிருஷ்ணாவதாரம் + கூர்மாவதாரம்+’ஆமை புகுந்த வீடு – அமீனா புகுந்தவீடு ஜப்தி’ கலந்து பிறப்பித்த குறள்பா

**************************

கொண்டலப்பக் கோனின் உடன்பிறந்த பெட்டையாம்
அண்டங்காக் கைக்கானை குஞ்சு

(திருமாலின் தங்கை அண்டங் காக்கும் அகிலாண்ட நாயகிக்கு ஆனைமுகன் குழந்தை எனக் குறள்பா)

**********************

‘மொட்டைமாடியில் நின்று முறுவலிக்காதே.
முல்லா பிறை பார்க்கிறார்’

The Qazi is about to sight Id-ka-chand. Don’t stand on the terrace smiling

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன