திறமையான புலமை எனில்

 

இரவு 10:30-க்கு தொலைபேசி அழைப்பு. ‘தெரியாத எண்’ என்று அழைத்த எண் மின்னுகிறது. அது மிகவும் தெரிந்த நண்பரின் அழைப்பு. திரு கமல்.

ஒரு சிறு குழந்தை போல் உற்சாகத்துடன் மறுமுனையில் குரல் – ‘அமெரிக்கா போறேன்’.

அமெரிக்கா போவதில் அவருக்கு பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை. அடிக்கடி போய் வருகிறவர் தான். ஆனாலும் இந்தப் பயணம் தனியானது.

‘ஏர்போர்ட்லே இருந்தா பேசறீங்க சார்??’
‘இனிமேல் தான் கிளம்பணும்’.

விஸ்வரூபம் திரைப்படம் சிறப்பு திரையீட்டாக ஹாலிவுட் பிரமுகர்களுக்குத் திரையிடப் படுகிறது. லாஸ் ஏஞ்சலிஸ் பயணம்.

மகிழ்ச்சி பகிரப்படும் போது அதிகரிக்கிறது.

‘நம்ம மோகன் சாக்லெட் கிருஷ்ணா 500 நிகழ்ச்சி நெருங்கிட்டார். அங்கே தான் இப்போ பிளாரிடாவிலே இருக்கார். நீங்க யு.எஸ்லே இருக்கும்போது, உங்க தலைமையிலே 500-வது நிகழ்ச்சி நடக்கணும்னு எல்லார் விருப்பமும்’.

‘மோகன் கிட்டே பேசினேன். He will at Cal during the last leg of his tour. அது வரைக்கும் நான் அங்கே இருக்க மாட்டேனே’.

விஸ்வரூபம் விளம்பரம் – அமைப்பு, எழுத்து அலங்காரம் பற்றிக் குறிப்பிட்டேன்.

‘அந்த hood-ஐ அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்னு அங்கங்கே சில குரல்கள்’ பற்றிப் பேச்சு நகர்ந்தது.

‘Fatherhood, motherhood, Robin Hood.’ அவர் சிரித்தார்.

‘Hood போட்டவங்க எல்லாரும் கமல் இல்லியே . எந்த ஹூட் விட்டு வச்சிருக்கீங்க? கிருஷ்ணவேணிப் பாட்டியையும் சேர்த்து’

‘அது grandmother-hood’.

திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.

என்றார் பாரதியார். செய்கிறார்கள்.

பாரதி வரிகளில் இன்னொரு முறை பாராட்டலாம்.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு(ம்).

நண்பர்கள் அனைவர் சார்பிலும் வாழ்த்துகள் எம் அன்பு நண்பரே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன