Scribbler notesScribbler notes

 

Outraged Kiran Bedi asked Delhiites to take to the streets on Tuesday and said it was time for people to show their anger.// 

காவல்துறையில் மிக உயர்ந்த பதவி வகித்து பணி ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி பேசும் முறையல்ல இது.

‘take to the streets’ மொழிபெயர்ப்பில் ‘தெருவுக்கு வாருங்கள்’ என்று கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட வன்முறையைத் தூண்டும் குரல் இது. மண்ட்சார் மாருதி வன்முறையாளர்களுக்கும் கிர்ண் பேடி அம்மையாருக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

From a fabulous model cop to a rabble-rouser… what a fall!

http://www.thehindu.com/news/national/article3704713.ece

888888888888888888888888888888888888888

மனதைக் கலங்க வைக்கிறது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து. ஒயரிங் செக் பண்ணாமலா அந்த எஸ்-11 ஐ வண்டியில் இணைத்தார்கள்? மின்சாரக் கோளாறாகவே இருக்கலாம். ஆனாலும் நான் விடிகாலை நேரங்களில் ரயில் பயணங்களின் போது தவறாமல் காணும் காட்சி நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தூங்கி எழுந்து கம்பார்ட்மெண்ட் வெளியே, அதாவது கழிப்பறை பக்கமாக நின்று ஏதோ கடமையாற்றுவது போல் காலை நேர முதல் சிகரெட்டைப் புகைக்க, நாலைந்து பேராவது ஏசி, நான் ஏசி எல்லா கம்பார்ட்மெண்ட் வாசலிலும் நிற்பார்கள். இவர்கள் அணைக்க மறந்த சிகரெட் ஏதாவது இத்தனை உயிர்களையும் புகையோடு கொண்டு போயிருக்கலாம்.

ரயில் பயணத்தின் போது சிகரெட் பிடிப்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரெட்டை ஆயுள் தண்டனையாவது வழங்க வேண்டும்.

8888888888888888888888888888888888888

அண்ணா ஹசாரேவுக்கு முன்னூறு பேர். ராமதேவர் கூட்டி வந்ததோ மூவாயிரம். தில்லிக்காரர்கள் மூங்ஃபிலி கொறித்துக் கொண்டு, பனாரசி பான் மென்று துப்பியபடி ‘பே(ஹ)ன்..த்’ என்று நொடிக்கொரு தடவை சொல்லிக் கொண்டு தவுலா க்வாவுக்கு பஸ் பிடிக்க நிற்கிறார்கள் / தில்லி நண்பர் செய்தி அறிக்கை.

******************************

இந்த வருட இசைவிழா முடிவில் நிச்சயம் சர்மிஷ்டா முகர்ஜியின் கதக் நாட்டியக் கச்சேரியை சென்னை சபாக்கள் எல்லாவற்றிலும் அடித்துப் பிடித்துக் கொண்டு நடத்துவார்கள்.

போன ஆண்டு அமைதியாக வந்து ஆர்ப்பாட்டமில்லாமல் ஆடி விட்டுப் போனார். அவையை நிறைக்க சத்தியமூர்த்தி பவனில் இருந்து நிறைய கதர் வேட்டி-சட்டைக்காரர்கள் வந்திருந்தார்கள் – அடித்துப் பிடித்துக் கொள்ளாமல் சமர்த்தாக உட்கார்ந்து பார்த்தார்கள். அதில் ஒருத்தர் “லேடீஸ் ஆடினா கதக்.. ஜெண்ட்ஸ் ஆடினா கதகளி’ என்று நல்ல விளக்கமும் மற்றவர்களுக்கு அளித்தருளினார்.

இனி அந்தக் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஸ்நோபரியை ஒரு கலையாகப் பயின்றவர்களின் பெருங்கூட்டம் சர்மிஷ்டாவைச் சூழ்ந்து கொள்ளும். ஜனாதிபதி மகளாச்சே.

***************************8888

காலையில் வாக்கிங் வந்த ஒருத்தர் நம்ப முடியாத ஆச்சரியத்தோடு சொன்னார் -வெங்கட்நாராயணா வீதி திருப்பதி கிளைக் கோவில் அர்ச்சகருக்கு மாதம் ஒரு லட்சமும், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறவருக்கு சன்மானம் மாதம் ஐம்பதாயிரமும் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்படுகிறது.

எல்லோரும் கேட்ட் ஒரே கேள்வி – திருப்பதியில் எவ்வளவு கிடைக்கும்?

எனக்கென்னமோ அது பரம்பரை உரிமையாக அளிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன