ஹிட்ச்காக் – புரிதல்

தீங்கற்ற கடற்காக்கைகளை நாசகார சக்திகளாக ஹிட்ச்காக் தன் ‘பறவைகள்’ படத்தில் சித்தரித்ததாகப் படித்தேன். Birds அப்படியான படம் இல்லை.

அமைதியான பறவைகளின் சாது மிரண்டால் – what if scenario- தான் படத்தின் முக்கியக் கூறு. Open ending ஆக, அந்தப் பறவைகள் திரும்ப சாதுவாகக் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருக்க கதாநாயகனும், நாயகியும் கதாநாயகனின் சகோதரியும் நகரத்தை விட்டுப் புறப்படுவதில் கதையை முடிக்கிற ஹிட்ச்காக், ஏன் பறவைகள் திடீரென்று தன்மை மாறின, எப்படி மறுபடி சமநிலை அடைந்தன என்பதைக் கூறாமல் பார்வையாளர் கற்பனைக்கே விட்டதுதான் படத்தின் சிறப்பு.

ப்றவைகளைக் கொடுமைப் படுத்தினாரோ என்னவோ, ஹிட்ச்காக் பேர்ட்ஸ் படத்தின் கதாநாயகியாக நடித்த டிப்பி ஹெட்ரனை மிகுந்த மனச் சித்திரவதைக்கு ஆளாக்கியதை அந்த அம்மையார் படம் வெளியாகி ஐம்பது வருடம் கழித்து தற்போது (அவருக்கு இன்று எண்பது வயதுக்கு மேல்) சொல்லியிருக்கிறார்.

அவருடைய அனுபவங்களின் அடிப்படையில் ‘பெண்’ (The girl) என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன