Archive For நவம்பர் 11, 2022

Here comes The Crown Season 5

By |

Here comes The Crown Season 5

ஆவலோடு எதிர்பார்த்த The Crown Season 5 – நெட்ஃப்ளிக்ஸில் பத்து எபிஸோட்களில் கிட்டத்தட்ட ஐந்து இரண்டு நாளில் பார்த்தாகி விட்டது. sort of binge watching. பழைய ப்ரிட்டீஷ் பிரதமர் ஜான் மேஜர், காதலுக்காக முடிதுறந்த மன்னர் எட்வர்டின் நெருங்கிய நண்பன் போன்ற சேவகன் சிட்னி, ஹாரட்ஸ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அல் ஃபயத், அவர் தந்தை என்று எலிசபெத் மகாராணி கதாபாத்திரத்தை விட மற்றவர்களைச் சுற்றிச் சுழலும் கதைப் போக்கு…. நாவல் தினை ஒரு…




Read more »

விரல் – புதிய சிறுகதை

By |

விரல் – புதிய சிறுகதை

விரல் – சிறுகதை                                 இரா.முருகன் சந்தன் என்ற சந்தான கோபாலன் அரங்கத்துக்குள் நுழைந்த போது,  ’மாதே மலயத்வ பாண்டிய சம்ஜாதே’ கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.  கமாஸ் வர்ணம். மத்ய ஸ்தாயியில் ஜலஜலவென்று ஒன்றுக்கு இரண்டு சிட்டை ஸ்வரமாகப் பாடும்போது நர்மதை நதிப் பாலத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் முன்னேறிக் கொண்டிருப்பது போல் பிரவாகம்.  அதுவும் ராஜாராமன் பாடினால். பாடிக் கொண்டிருக்கிறார்.   முதலிலிருந்து கேட்கக் கொடுத்து வைக்கவில்லை சந்தனுக்கு. வர்ணத்தில் கச்சேரி ஆரம்பித்திருப்பாரா அல்லது வாதாபி கணபதியிலா?…




Read more »

புது நாவல் ‘தினை’

By |

புது நாவல் ‘தினை’

‘தினை’ நாவல் கிட்டத்தட்டப் பாதி எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரியில் நிறைவடையும். எடிட்டிங்க் நிறையத் தேவைப்படும் புதினம் இது.




Read more »

(நிறைவு பெறாத) தமிழ்ப் படம் -முத்தம்மா டீச்சர் பார்க்க முயன்றது – குறுநாவல் பகுதி

By |

(நிறைவு பெறாத) தமிழ்ப் படம் -முத்தம்மா டீச்சர் பார்க்க முயன்றது – குறுநாவல் பகுதி

கடற்கரை.   சென்னை கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய, அழகிய கடற்கரை. நாங்கள் சென்னைக்கு இன்பச் சுற்றுலா சென்றபோது, கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சமாதி என்று பல இடங்களுக்குப் போனோம். கலங்கரை விளக்கம் என்பது கப்பல்களை வழிப்படுத்தும் விளக்கு அமைந்த, கடற்கரையில் உயர்ந்து நிற்கும் கட்டிடமாகும். அங்கே யாரும் குடியிருக்க முடியாது. வாசலில் எருமை மாடு கட்டிப் பால் கறக்க முடியாது.   முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டை மூடி வைத்துவிட்டுக் கடற்கரை மணலில் நடக்கிறாள். கையில்…




Read more »

தமிழ்ப் படம் பார்த்து முடிக்காத முத்தம்மா டீச்சர் பகுதி 7அ

By |

தமிழ்ப் படம் பார்த்து முடிக்காத முத்தம்மா டீச்சர்  பகுதி 7அ

ராவுத்தர் பேக்கரி ஸ்லைட்.   தம்பிக்கு ராவுத்தர் பேக்கரி பன்ரொட்டி ரொம்பப் பிடிக்கும்.   முத்தம்மா டீச்சர் முதல் மாதச் சம்பளத்தில் அவனுக்குப் பன்னும் கேக்கும் வாங்கிப் போனாள். எடுத்துச் சாப்பிடச் சாப்பிடப் பரிவோடு பார்த்துக் கொண்டு..   ‘அக்கா.. பன்னு சாப்பிடறியா?’   பின் வரிசையிலிருந்து தம்பி குரல்.   ‘சும்மா இருக்க மாட்டீங்களா.. பிள்ளைக்குன்னு வாங்கியாந்திருக்கேன்.. அக்கா அக்கான்னு உசிரை விடறீங்களே.. எங்கே…நம்ம புள்ளைக்கு அரை பவுன்லே மோந்திரம் பண்ணிப் போடச் சொல்லுங்க பார்ப்போம்…




Read more »

Appa Ramesh’s Morning Marvels கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

By |

Appa Ramesh’s Morning Marvels கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

லண்டன் மாநகரில் இருக்கும் போது பணிக்குப் போக வேண்டாத ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியான நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வேன். அதன் கண்ணிகள் ட்யூப் என்ற பாதாள ரயில் சேவை சார்ந்தவை.   கார்டியன் தினசரிப் பத்திரிகை வராத தினம் என்பதால், சண்டே அப்சர்வரை மேய்ந்து விட்டு கென்சிங்க்டன் கார்டனில் காலாற நடந்து,  எர்ல்ஸ் கோர்ட்டில் வண்டி ஏறி, ஸ்ட்ராண்டிலும் கோவண்ட் கார்டனிலும் சுற்றி அலைந்து, ஈஸ்ட் ஹாம்  சரவண பவனில் தென்னிந்திய உணவு உண்டு, பிக்கடலி வீதி வந்து…




Read more »