Archive For ஏப்ரல் 8, 2022

ஆலப்பாடு சுவதேசி வயசன் பறந்து போன வர்த்தமானம் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

By |

அப்போ நானும் சிநேகாம்பா தோப்பனார் போலப் பறக்கட்டுமா ? விசாலாட்சி திரும்பச் சிரித்தாள். அந்த வயசன், குப்புசாமி அய்யன் ஊருக்குப் போய்த் திரும்பி வந்த இந்த நாலு வாரத்தில் ஒரு தொந்தரவாக மாறியிருக்கிறான். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தது. நேற்றைக்கு மதியம் வீட்டில் நுழைந்தபோதே குப்புசாமி அய்யன் பார்த்தது தான் அது. என்ன கிரகசாரமோ என்று யோசித்தபடி செம்பில் தண்ணீர் சேந்தி உடம்பு கழுவிக் கொண்டிருந்தபோது, வயசன் தோட்டக் கோடியில் மிதந்தபடி சுற்றி மூத்திரம் ஒழித்துக் கொண்டிருந்தான்….




Read more »

பெரிய சங்கரனுக்குப் பெண் பார்க்க அம்பலப்புழை போனது 1860கள்- அரசூர் வம்சம் நாவலில் இருந்து

By |

நாவல் இரா.முருகனின் அரசூர் வம்சம் (அரசூர் நான்கு நாவல் வரிசையில் முதல் நூல்) ஏகக் கோலாகலமாகக் கிளம்பினார்கள் சங்கரனுக்குப் பெண் பார்க்க. மொத்தம் இரண்டு கோஷ்டி. கல்யாணி அம்மாளின் ஒன்று விட்ட சகோதரன் கச்சேரி ராமநாதய்யர், ஜோசியர் நாணாவய்யங்கார், சுப்பிரமணிய அய்யரின் அம்மான்சேயான அறுபது வயது கரம்பக்காடு கிருஷ்ணய்யர் (உத்தியோகம் சுகஜீவனம்), அய்யரின் அத்தான் பிரம்மஸ்ரீ சுந்தர கனபாடிகள், இவர்கள் எல்லோருடைய அகத்துக்காரிகள், அப்புறம் நித்திய சுமங்கலி சுப்பம்மாள் என்று ஒரு குழு. இது ஊர் எல்லாம்…




Read more »

அரசூர் வம்சம் நாவலில் சென்னை துறைமுகம் 1860கள்

By |

கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும். கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை…




Read more »

நகுலம் என்றொரு நீள்கவிதை 04/04/2022

By |

மூத்த எழுத்தாளர் நகுலன் அவர்களுக்கு அவருடைய நண்பரும் எழுத்தாளருமான நீல.பத்மநாபன் அவர்கள் செலுத்தும் நீண்ட கவிதாஞ்சலி இது. நகுலம் என்று பெயர் இந்நீள் கவிதைக்கு, நகுலம் நூல் அறிமுகக் கட்டுரையாக நான் எழுதியது ஏப்ரல் 2022 அந்திமழை மாத இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரை இது ——————————————————————————————————-                                                    நகுலம் பற்றி    (இரா.முருகன்) எழுத்தாளர் நகுலனோடு பழகிய தன் அனுபவங்களை நகுலம் என்ற பெயரில் நீள்கவிதையாக எழுதியிருக்கிறார், இன்னொரு மூத்த எழுத்தாளரான நீல.பத்மநாபன்.  பத்மநாபனுக்குக் கல்லூரியில்…




Read more »

அரசூர் வம்சம் நாவலில் வைகை நதி (அரசூர் நான்கு நாவல் வரிசை)

By |

சுந்தர கனபாடிகள் வைகை நதியோடு போய்க் கொண்டிருந்தார். சுத்த ஜலம் பிரவாகமாக இரு கரையையும் அடைத்துக் கொண்டு நுங்கும் நுரைப்புமாகப் பொங்கி வழிந்து ஓடியதன் சுவடுகள் ஈர மணலில் அழிந்தும் அழியாமலும் தடம் விரிக்க, வற்றி இளைத்துப் போன நதி சின்னச் சாரைப் பாம்பாக சலித்துக் கொண்டே அசைந்து போனது. கரையோரம் வெகுதூரம் போய், புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக் கொள்ள வந்தபோதே நதியடி மணலை நாட வேண்டிப் போனது. நதியெல்லாம் தெய்வம்….




Read more »

அரசூர் நான்கு நாவல்களில் புனித கங்கை – 1. அச்சுதம் கேசவம்

By |

என் அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து- ஹரித்வாரில் கங்கை டோங்கா ஏற்படுத்திக் கொண்டு ஹர் கி பவ்ரி என்ற கங்கைப் படித்துறைக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தபோது சாயந்திரம் ஐந்து மணி ஆகி இருந்தது. ஒருத்தர் இருவராகக் கூட்டம் வர ஆரம்பிக்கும் முன்னாலேயே அரசூர் கோஷ்டி படித்துறைக்குப் போய்ச் சேர்ந்து, தரிசிக்க வாகான படிகளில் இடம் பிடித்தது.   கங்கா மாதாவுக்கு புஷ்பமும் நெய் தீபமும் ஏற்றி, எல்லா சாஸ்திரத்தில் இருந்தும் நாலு வேதத்தில் இருந்தும், ஆமா நாலும்…




Read more »