Archive For ஜூன் 7, 2021

புதிது – எழுதிவரும் நாவல் ‘மிளகு’ – சிறு பகுதி- ஆசாரமல்லாத காகிதம்

By |

புதிது – எழுதிவரும் நாவல் ‘மிளகு’ – சிறு பகுதி- ஆசாரமல்லாத காகிதம்

Excerpts from the novel MILAGU I am currently writing – தற்போது எழுதிவரும் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி (draft awaiting editing) ————————————————————————————————– திருவாளர் பெத்ரோவின் இரட்டைக் குதிரை வண்டி மிர்ஜான் துறைமுக நகர் கடந்து, மிர்ஜான் கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது காலை எட்டு மணி என்று அதிர்வேட்டு போட்ட சத்தம் காதில் விழ தன் கால்சராய் கடியாரத்தை எடுத்து மணி பார்த்தார். எட்டு அடிக்க இன்னும் பத்து நிமிடம்…




Read more »

1596 ஹொன்னாவரில் இருந்து மிர்ஜான் கோட்டைக்கு – மிளகு நாவலில் இருந்து

By |

1596 ஹொன்னாவரில் இருந்து மிர்ஜான் கோட்டைக்கு – மிளகு நாவலில் இருந்து

நான் எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து மாஜி அரசப் பிரதிநிதி ஒரு வினாடி ஏதும் பேசாமல் நின்றார். “சென்னபைரதேவி என்னை மதிக்காமல் நடந்து கொண்டது பெத்ரோவே, உமக்குத் தெரியாதா அல்லது மறந்து போனீரோ?” தெருவில் அடுத்து மூன்று குதிரை பூட்டிய ட்ரோய்க்கா ஒன்று பாதையை விட்டு விலகிச் சற்றே ஓரமாக வர, அதன் மேல் மோதாமல் ஒதுங்கி நின்றபடி கேட்டார் மாஜி கவர்னர். “பிரபு, மன்னிக்க வேண்டும். பல ஆயிரம் இங்கிலீஷ் பவுண்ட் மதிப்புக்கு மிளகும்,…




Read more »

பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை)

By |

பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன்  (இரா.முருகன் புதுக் கவிதை)

பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை) ————————– கறுப்பு நிறப் படைவீரன் ஒருத்தனை சதுரங்கப் பலகையின் குறுக்கே அழைத்துப் போய் வெள்ளை முதல் வரிசையில் கொண்டு நிறுத்தினேன். ”நீ யாராக ஆக ஆசைப்படுகிறாய் சொல் உன்னை மாற்றுவேன்”- வரம் வழங்கும் கடவுளாக கருணையோடு அவனைப் பார்த்தேன். என்னை யானை ஆக்கினால் நேரே நடப்பேன் பக்கவாட்டில் கோணல் இல்லாது ஊர்வேன் வேண்டாம் அந்த சொகுசு அசைவு நடக்கவே மறந்து போகும். என்னைக் குதிரையாக்கினால் புத்திசாலியாக…




Read more »

புதிது – எழுதி வரும் நாவல் ‘மிளகு’ வில் இருந்து – கவுண்டின்ஹோ பிரபுவும் காஸெண்ட்ராவும்

By |

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – Draft awaiting editing ஹொன்னாவர் நகரில் ஷராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து பெத்ரோ புண்ணியவாளனின் தேவாலயம் போகும் சாலை. புராதன மாளிகைகள் வரிசையாக நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் ஒன்று அது. போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி மேனுவல் அகஸ்டினோ பெத்ரோ வீட்டு வாசலுக்கு வந்து காத்திருந்த வெள்ளை நிற குதிரை பூட்டிய சாரட் வண்டியையும் சேணத்தைப் பற்றியபடி நிற்கும் கடைக்கீழ் உத்தியோகஸ்தனையும் மாறி மாறிப் பார்த்தார்….




Read more »