Archive For ஜூலை 8, 2017

மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் மக்ரோனியை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது?

By |

மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால்  மக்ரோனியை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது?

அடிக்கடி வறட்சியும் அது காரணமாக உணவுத் தட்டுப்பாடும் ஏற்படுவது கேரளத்தில் நடப்பதுதான். அப்போதெல்லாம் திருவிதாங்கூர், கொச்சி அரசர்கள் கஞ்சித்தொட்டி திறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர்மக் கஞ்சி வார்த்தார்கள் என்றாலும் பட்டினிச் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. போர்த்துகீசியர்கள் பிரசீலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் மரச்சீனிக் கிழங்கைத் கேரளத்தில் தினசரி உண்ணும் உணவாக்க்க திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாள் மகாராஜா முனைந்து பிரசாரம் செய்தபோது பஞ்சம் கொஞ்சம் தணிந்தது. மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் மக்கள் ஏன்…




Read more »

இந்த ரேடியோவை ஆசீர்வதியும்

By |

பள்ளிவாசல் அணைக்கட்டில் இருந்து கிழக்கு மேற்காகக் கடந்து மின்சாரம் வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாக, லந்தன்பத்தேரியில் முதல் ரேடியோ வந்தது. மலாக்கா ஹவுஸ் கீழ்த் தளத்தில் சாயாக்கடை நடத்திய பவுலோஸ், வெண்டுருத்தியில் இருந்து உத்தியோக இட மாற்றம் கிடைத்துப்போன ஒரு பஞ்சாபி கடற்படைக்காரனிடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பழைய ரேடியோவைக் கொண்டு வந்த தினத்தில், மலாக்கா ஹவுஸின் மேல் கூரையில் இரண்டு மூங்கில் கழிகள் நிறுத்தப்பட்டன. அவற்றில், வலைவலையாக இருந்த பிரகாசமான செம்பு ஏரியலை பவுலோஸும் அவனுடைய…




Read more »

வீட்டுக்கு மின்சாரம் வந்தபோது

By |

மின்சார ஒயரிங் வேலை முடிந்த பிறகு எங்கள் வீட்டுக்கு வெளியே நின்ற மின்கம்பத்தில் ஏறி லைன்மேன் ப்யூஸைச் செருகினார். வீட்டுக்குள் எலக்ட்ரீஷியன்கள் மெயின் சுவிட்சை ஆன் செய்தார்கள். எல்லா விளக்குகளும் ஒளிவிட்டு எரிந்தன. திரு இதயப் படத்தின் முன், திரி போல் ஒளிர்ந்த சிவந்த ஸீரோ வாட் பல்ப் எரிய, நாங்கள் மண்டியிட்டிருந்தோம். மூன்று முறை, இரண்டு முறை.. போஞ்ஞிக்கரை மாதாகோவிலில் மணி முழங்கியது. மூன்று – இரண்டு இந்தத் தாளம் அப்பனைத் துள்ளி எழ வைத்தது….




Read more »