Archive For ஜனவரி 11, 2016

New novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 14 இரா.முருகன்

By |

New novel :  வாழ்ந்து போதீரே       – அத்தியாயம் 14   இரா.முருகன்

ஒடிந்து விழுவது போல் கதாநாயகி. அவளைப் படைத்தவனோ, உடுப்புத் தைத்தவனோ, சரீர பாரத்தை எல்லாம் ஸ்தன பாரமாக மட்டும் உடம்பில் வடக்குப் பிரதேசத்தில் உருட்டி வைத்து மற்றப்படி குச்சிக் கால்களோடு அவளைப் புல் தரையில் வெட்டுக்கிளி போலத் தத்தித் தத்தி ஓட வைத்திருக்கிறான். அவளைக் கட்டி அணைத்துத் தூக்கித் தட்டாமாலை சுற்றுகிற மீசை மழித்த கதாநாயகனை ஒரு நூற்றுச் சில்லரைப் பேர் கிராண்ட் ரோடு சினிமா தியேட்டரின் பூச்சி ஊறும் நாற்காலிகளில் உட்கார்ந்து, பகல் காட்சியில் அசூயையோடு…




Read more »

new bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 33 இரா.முருகன்

By |

new bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 33     இரா.முருகன்

தியூப்ளே வீதி – 33 இரா.முருகன் நாளைக்கு கிறிஸ்துமஸ். நேற்றும் இன்றும் நாளையுமாக மார்கழி இந்த மூன்று தினங்கள் மட்டும் டிசம்பராகவும் வடிவம் எடுக்கும். மார்கழி பிறந்து இந்தப் பத்து நாளில் திருப்பாவையையும், திருவெம்பாவையையும் கோவில்களின் கூம்பு ஒலிபெருக்கிகள் காற்றில் பரப்பி வெளியை நிறைக்க, ஏசு விசுவாசிகளின் கிறிஸ்துமஸ் கீதங்கள் இடையிடையே இனிமையாக ஒத்திசைந்து ஒலிக்கும். இரண்டு நாள் முன்பாக திருவாதிரை வந்து போனது. இனி மூன்று பெரிய எதிர்பார்ப்புகளோடு விழாக் காலம் நீண்டு போகும். அடுத்தடுத்து…




Read more »