Archive For அக்டோபர் 19, 2008

ஒரு கவிதை – ஒரு கடிதம்

By |

     கலாப்ரியா, அருள்நம்பி கடிதங்கள் அன்புள்ள முருகன் வெந்தணலில் மெழுகெனவே வேதனையில் சிங்களரால் நொந்து படுகின்றார் நம்தமிழர் – செந்தமிழா கடலெல்லை தாண்டிக் களம்கண்ட நம்மாந்தர் இடர்ப்பட்டுப் போவதுஏன் இன்று. கொடுமைகண்டு பொங்கும் குணமெங்கே எந்தமிழா கடமை மறந்தனையோ? கற்சிலையாய் அடிமைஎனும் விலங்குடுத்து வாழ்கின்றார் விலங்கினும் கடையராய் இலங்கையில் தமிழரெலாம் இன்று.




Read more »

Updated கலாப்ரியா,வண்ணதாசன் கடிதங்கள்

By |

  நேற்று வந்த கடிதம் ஒன்று சில கடிதங்கள் எவ்வளவு personal ஆக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் கலாப்ரியா, கல்யாண்ஜி வண்ணதாசன், அவருடைய தந்தையார் பெரியவர் தி.க.சி, முன்றில் மா.அரங்கநாதன் எழுதிய கடிதங்களும், ஆசான் சுஜாதாவின் மின்னஞ்சல், குறுங்கடிதங்களும் இந்த வகையில் வருபவை. கலாப்ரியாவிடமிருந்து நேற்று வந்த கடிதம் இது. அவர் சொன்னது என் மகன் விஷயத்தில் பலித்திருக்கிறது. மற்றதைக் காலம் தான் சொல்ல வேணும். இரா.மு ——————————————————————————————————– dear murukan இன்னும்…




Read more »

கடவுள் துகள்

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி டிஜிட்டல் கேண்டீன்-26 பூமியும் கிரகங்களும் சூரியனும் இல்லாத காலம் அது. உறைய வைக்கும் குளிர். ஆயிரத்து முன்னூறு கோடி வருடம் முந்தைய அந்தக் காலகட்டத்தில், அண்டப் பெருவெளியில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. இந்த அண்டப் பெருவெடிப்பு (Big Bang) ஏற்பட்டதும் எங்கும் பெரும் வெப்பம் சூழ்ந்து கவிந்தது. அணுத் துகள்களான நியூட்ரான்களும் புரோட்டான்களும் ஒளியின் வேகத்தில் பாய்ந்து ஒரு சேரக் கலந்தன. இக்கலப்பில் அணு மையப்பொருள் தோன்றியது. வெப்பம் சற்றே…




Read more »

தம்புராட்டி

By |

  ‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி – யுகமாயினி ஆகஸ்ட் 2008 ‘இந்த நாடகத்தில் ஒரு சீன்லே ஹீரோ உடம்புலே பொட்டுத் துணி கூட இல்லாம மேடையிலே நிக்கறான்’. ராயல் லைசியம் தியேட்டரில் டாக்டர் பாஸ்ட் நாடகத்துக்கான டிக்கட் வாங்க கியூவில் நிற்கும் போது எனக்குப் பின்னால் நின்றவள் என் காதில் கிசுகிசுத்தாள். பழைய ஜெர்மனிய இலக்கியம். கத்தே என்ற மாபெரும் படைப்பாளி எழுதியது. பார்க்க இப்படி பனியில் நனைந்தபடி க்யூவில் நிற்கிறேன். ஈவ் டீசிங் போல்…




Read more »

Lunch with Govind Nihalani

By |

  சென்னையில் கோவிந்த் நிஹலானியோடு ஒரு சந்திப்பு எல்லாப் பக்கத்திலிருந்துன் விஸ்தாரமாகத் தோண்டித் துளைத்து அங்கங்கே தேசலான பழைய தார்த் தடம் தெரிய பரிதாபமாகக் கிடக்கிற திருமலைப் பிள்ளை சாலை. பெருந்தலைவர் காமராஜ் அவர் வீட்டு வாசலில் கருப்புப் பளிங்குச் சிலையாக நின்று ‘இதெல்லாம் என்னங்கறேன்’ என்கிற போஸில் இடுப்பில் கைவைத்து எல்லா அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி நான். காரை எப்படியோ ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைல் ஃபோனைக் காதில் ஒட்டி வைத்தபடி தெரு…




Read more »

நீத்தார் நினைவுகள்

By |

  குங்குமம் பத்தி – அற்ப விஷயம் -17 ‘திரு.அ இறந்துவிட்டார்’. மொபைல் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் தகவல். இந்த மாதிரியான செய்திகள் பெரும்பாலும் தூங்கப் போன பிற்பாடு வந்து படுக்கைக்குப் பக்கத்தில் பொறுமையாகக் காத்திருக்கும். விடிந்ததும் படிக்கக் கிடைத்து அன்றைய தினத்தையே தடம் புரட்டிப் போட்டுவிடலாம். யார் காலமானார், அனுப்பியவருக்கு என்ன உறவு அதைவிட முக்கியமாக நமக்கு யார் என்பதைப் பொறுத்த பாதிப்பு இது. முதல் எதிர்வினை உடனடி தொலைபேசி அழைப்பு. அநேகமாக, தகவல் அனுப்பியவரை அழைத்து…




Read more »