A dad like meஎன்னைப் போல் ஒருவன்


சார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு

யார் சார்?

என் மகள் தான் சார்

எந்தக் கோவில்?

ஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி..

திட்டினீங்களா?

எதுக்கு? கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா..

சிரிக்கிறார். அதில் தந்தை மகள் மேல் கொண்ட பாசமும், மகள் தந்தை மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது. எங்கேயும், எந்த நாட்டிலும் இனத்திலும் உள்ளது போல உன்னதமான தந்தை – மகள் பாசம்..

அந்தத் தகப்பனைப் போயா இப்படி தரக்குறைவாகப் பேசுவது?

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்ப திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.

அவருக்கு மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

படித்துவிட்டு முகம் மலர்ந்தார். என்னிடம் மொபைலை நீட்டினார்.

‘அப்பா, என் முதல் சம்பளம் இன்று வாங்கினேன்’

மூத்த பொண்ணா, சார்? எனி மியூசிக் ஸ்கோரிங்க் அசைன்மெண்ட்?

இல்லே, சின்னவ. மும்பாய்லே அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒரு படத்துலே வேலை செய்யறா. அங்கே முதல் மாச சம்பளம்..

எவ்வளவு சார் இருக்கும்?

பத்தாயிரம் ரூபாய்.

பூவாகச் சிரிக்கிறார்.

அந்த நல்ல மனதையா நோகடிப்பது?

2 comments on “A dad like meஎன்னைப் போல் ஒருவன்
  1. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

    இப்படிப்பட்ட நபர்கள் எப்படி பொதுவெளியில் கொஞ்சமும் கூசாமல் நடமாடுகிறார்கள் ?

  2. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

    இந்த நரகலை தன மகளிடமோ தாயிடமோ தயக்கமின்றி படித்துக்காட்ட இயலுமா இந்த ஆளுக்கு ? கொடூரமாக இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன