நம்புவது ஆசுவாசம்

சாவகாசமாக மரம் உதிர்த்த
துளிகள்
கல்நார்க் கூரையில் நடனமிட்டுப்
பெருமழை பெய்ததாய்ப்
பொய் சொல்வதை
நம்பாதது நம்மிஷ்டம்
நம்புவது ஆசுவாசம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன