மழை மறைத்த தெருவும் மற்றவையும்

மழைத் தெரு
————-
நுழைந்து நினைவில் வளைந்து கலந்து
விழைந்து விரல்கள் விரைய – குழைந்தே
இழையும் நிறங்கள் உலர்ந்த பிறகு
மழையில் மறையும் தெரு

Street painter in Paris, 1945

காய்கறிக் கடையில் காதல்
—————————
அத்திக்காய் ஆலங்காய் சொன்னார்நம் கண்ணதாசன்
இத்திக்கில் என்நிலாநீ காயாதே – பித்தாகி
ஓடிவந்தேன் காதல் உரைப்பேன்நான் ஏற்றுக்கொள்
கூடும்தக் காளிவிலை முன்

இங்க்லீஷும் பேசுவோம்
————————
இங்க்லீஷே பேசு இலண்டன் புறநகரில்
இங்கித மில்லாச் சுவரெழுத்து – அங்கதனை
இங்க்லீஷும் பேசுவோம் என்றே படக்கடையில்
சங்கீத மாக்கினர் காண்
(படக்கடை – PhotoShoppe)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன