லாஸ் வேகாஸ் – ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

கிரேசி மோகன் – இரா.முருகன் தினசரி வெண்பாக்களில் இன்று –

weird history -100 years ago, Las Vegas consisted of 38 buildings. Today it has more than 500,000.

நாஸ்தியாய் பூமியின்றி நாலுலட்சம் கட்டிடம்
லாஸ்வேகாஸ் பூராவும் ஸ்லாட்மெஷின் வாஸ்தவம்
வாதாட நேரமில்லை வாரீர் விரைந்திங்கே
சூதாடிச் சேர்ப்போம் பணம்.

இரா.முருகன்
*****************************************************

’’சூதாடி மாமாவால்(சகுனி மாமா) சொத்தாம் சகோதரரை(தர்மன் இழந்தார்)
தீதால் துரோபதையைத் தோற்றிடும் -போதாடை(போது ஆடை)
பாஸ்(கண்ணன்)பொழிந்து காத்தாரே பாஞ்சாலி மானத்தை:
லாஸ்வேகாஸ் பேரிலேயே லாஸ்(நஷ்டம்)’’….கிரேசி மோகன்…

சகுனியால் தர்மரோ, சொக்கட்டடா னில்தோற்க
அகல்விளக்கு ஆம்படையாள் அவையில் -துகிலுரிக்க
துச்சன் துரோபதையின் அச்சத்தைப் போக்கினார்
அச்சுதர் நல்லிக் கனி….கிரேசி மோகன்….!

”வில்லன் துரியன்கள் வாத்ஸல்ய தாய்மாமன்
வல்லன் பகடை விளாசிட -கல்லுளி
மங்கனாய் தர்மன் மகாபா ரதப்போரில்
சிங்கன் எடுத்தார் சவுக்கு(குதிரையை ஓட்ட)’’…..கிரேசி மோகன்….!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன