நம்பூத்ரி மலையாளம்

 

அதிக வேகத்தோடு பேசப்படுவதால், முதல் சொல்லின் கடைசிச் சீரும், அடுத்த சொல்லின் முதல் சீரும் குழம்பி ஒலிப்பது இந்தப் பேச்சில் முக்கியமானது. அது தவிர சில பிரயோகங்கள் – அஸ்ஸலாயி, கேமனாயி (நல்லாயிருக்கு), ஸ்ஸி (கொஞ்சம்), ‘ன்னிட்டு’ (என்றால்) – இந்தப் பேச்சுமொழிக்குத் தனித்துவம் கொடுப்பவை.

ஒரு நம்பூதிரி பலிதம் (பொழுதுபோக்கு கதை) அந்தப் பேச்சு வழக்கிலேயே.***************************************

பூமுள்ளி உல்(த்)சவத்திலெத்தித்தாணு அடீரிம் கூட்டரும். பூமுள்ளி உல்சவம்’ச்சால் அதி கம்பீராணு. விஸ்தரிச்சுள்ள தேச்சுக்குளீம் சாப்பாடும் மோஹிச்சு நானாதிக்கில்நின்னும் நம்பூராரெத்தும். பூமுள்ளிடே ஆத்ய(ந்)த்தோம் மேனி முழ்யோனெ உல்சவத்திலும் காணிக்கும். மற்றுள்ளோர் கேமாணு பறேணம். அத்ரேள்ளு. வாரங்ஙளும் உல்சவங்ஙளும் கேமாவணேன்ற ரஹஸ்யோம் அதாணு.

(பச்சை மலையாளத்தில் சொன்னால் மேலே உள்ளது இப்படி இருக்கும் –

பூமுள்ளி உல்சவத்தில் எத்தியாணு அடுதிரியும் கூட்டரும். பூமுள்ளி உல்சவம் என்னு வச்சால் அதி கம்பீரமாணு. விஸ்தரிச்சுள்ள தேச்சுக்குளியும் ஊணும் எதிர்நோக்கி நானாதிக்கில் நின்னும் நம்பூத்ரிகள் எத்தும். பூமுள்ளியுடெ ஆத்யம் அந்தம் மேனி முழுவன் உல்சவத்திலும் காணிக்கும். மற்றுள்ளோர் கேமனாணு என்னு பறயணும். அத்ரயெ உள்ளு. வாரங்ஙளும் உல்சவங்ஙளும் கேமனாணு என்ன ரஹஸ்யம் அது தன்னே.)

தமிழில் –

பூமுள்ளி என்ற ஊரில் கோவில் திருவிழாவுக்கு அடுதிரியும் (நம்பூத்ரி வகைப்பெயர்) தோழர்களும் போனார்கள். பூமுள்ளி உற்சவம் என்பது மிகச் சிறப்பாக நடப்பது. சுகமான குளியல், அருமையான சாப்பாடு இவையெல்லாம் கிட்டும் என்பதால் எல்லா ஊர் நம்பூத்ரிகளும் அந்த உற்சவத்துக்கு வந்துவிடுவார்கள். பூமுள்ளியின் அன்பான உபசரிப்பும் பெரியதனமும், உற்சவம் முழுக்க வெளிப்படும். வந்தவர்கள் ‘பிரமாதமாயிருக்கு’ என்று சொல்ல வேண்டும். அவ்வளவு தான். கோவில் பூஜைகளும், உற்சவங்களும் பிரமாதமாக நடப்பதின் ரகசியம் இதுதான்.

*******************************

பிரம்மஸ்வம் மடத்தில்ணு வேதாத்யாயனோம் ஸமாவர்த்தனோம் கழிஞ்ஞில்லத்தெத்யால் வேளி கழ்யேணவரெ உண்ணிநம்பூரார் சர்வத்ர ஸ்வதந்ரனாணு. வாரங்ஙளும் பூரங்ஙளும் கதகளீம் தேடி நடக்யாணு பின்னத்தெ பதிவு. அல்பசொல்பம் தோண்யாஸொக்கெ வசாக்கல் ஈ காலத்தாணு.

ராவிலத்தெ சீவேலிம் பிராதலும் கழிஞ்ஞால் உண்ணாறாவணவரெ முறுக்கும் வெடிபறயலுமாணு பின்னத்தெ நேரம்போக்கு.

ஆனப்பரம்பிலெ ஆள்தரேலாணு வெடிவட்டெங்ஙிலும் ஆன கண்டிருக்கல் அடீரிக்குக் கம்பள்ள கூட்டத்திலல்ல.

“ஏதா ஆன?” வேறெ நிர்த்திய ஒரு கிழக் கொம்பனெச் சுண்டி ஒரானக்கம்பன் சோதிச்சு. அடீரி சிரிச்சு. “இத்ர காலாயிட்டும் அது நிச்யல்யே? கருத்திருண்டு உயரம் கூடிதான. ஒயரல்யாத்தது பாப்பான்.” அடீரி பறஞ்š.

தமிழில் –

வேதபாடசாலையில் வேதம் படித்து முடித்து வீட்டுக்குத் திரும்பிய நம்பூத்ரி இளைஞர்கள் கல்யாணம் ஆகும்வரை சுதந்திரமாகத் திரிவார்கள். கோவில் பூஜை, திருவிழா, கதகளி என்று தேடிப் போவார்கள். கொஞ்சநஞ்சம் விரும்பியது வசப்படுவது அப்போதுதான்.

காலையில் கோவில் வழிபாடும், காலைச் சிற்றுண்டியும் முடிந்தால், மதியம் வரை, தாம்பூலம் தரிப்பார்கள். வேடிக்கைக் கதைகள் சொல்லி நேரம் போக்குவார்கள்.

யானைச்சாவடி ஆலமரத்தடியில் பேசிக்கொண்டிருந்தாலும், யானையைப் பார்த்துக் கொண்டிருப்பது அடுதிரிக்குப் பிடித்த விஷயமில்லை.

“யானையா இது?”, தனித்து நிறுத்திய வயதான யானையைப் பார்த்து ஒரு யானை ரசிகன் கேட்டான்.

“இவ்வளவு வயசானாலும் யானையைத் தெரியாதா உனக்கு? கருப்பா, உயரமா நிக்கறது யானை. குட்டையாக பக்கத்திலே நிக்கறவன் பாகன்.” என்றார் அடுதிரி.

(பாகனை மலையாளத்தில் பார்ப்பான் என்பார்கள்).

**********************************

ஆனக்கம்பனு தேஷ்யாயி.. “ஆடின்யேம், ஆன்யேங்கண்டால் திரிச்சறியாத்தது அடீரிக்கன்னயா.”

(குறுக்கல் விகாரம் எக்கச்சக்கமாவது இப்படித்தான். இது சாதாரண மலையாளத்தில் –

ஆனக்கம்பனு தேஷ்யமாயி. “ஆடினெயும் ஆனயெயும் கண்டால் திரிச்சு அறியாத்தது அடுதிரிக்குத் தன்னெயா”

தமிழில் –

யானை ரசிகனுக்குக் கோபம் வந்தது. “ஆட்டையும் ஆனையையும் கண்டால் அடுதிரிக்குத்தான் வித்தியாசம் தெரியாது.”

***************************************

“அது சர்யா. செலர்க்கு மாறின்னீர்க்கும். ரெண்டின்றெயும் ஆத்யக்ஷரம் ஆ-ன்னாணலோ” அடீரி வா பொளிச்சு கோஷ்டி காட்டித் துடர்னு. “ஒண்ணினு பொக்கம் ‘ஸ்ஸி(உ)ண்டு. மற்றேனு ‘ஸ்ஸி(இ)ல்யா. பின்னெ ரெண்டேன்ற்யம் விசர்ஜம் ஒருபோல்யா. வலிப்ப வியத்யாசம்(உ)ண்டுன்னெள்ளு. அடீரி பரிஹாசாயி பறஞ்š. கேட்டவர் சிரிச்சு. சோதிச்சயாள் வெஷளாயித் தல தாழ்த்தி.

தமிழில் –

“அது சரிதான். சிலருக்கு தெரியாதுதான். ஆடு, ஆனை இரண்டுக்கும் முதல் எழுத்து ஆ”.

அடுதிரி பழிப்புக் காட்டிவிட்டுத் தொடர்ந்தார்.

“ஆனையும், ஆடும் – ஒண்ணு உயரம் கொஞ்சம் அதிகம். மற்றது உயரக் குறைவு. ரெண்டோட கழிச்சலும் ஒரே மாதிரித்தான். அளவுதான் வித்தியாசம்”

*************************************

உல்சவம் ஆறாம் விளக்காணன்னு. ராவிலத்தெ சீவேலிக்கு எழுந்நள்ளிச்சு. எல்லாவித ஆனச்சமயங்களோடெ உயரம் கூடிய ஆனகள், கேமன்மாராய வாத்யக்கார், ஆனக்கு மும்பில் குத்துவிளக்கு பிடிச்ச அம்பலவாசிகள், பந்தம்பிடிச்ச நாயன்மார். அகம்படிக்கார் வாளும் பரிசையும் ஏந்தி மேளத்தினு முன்னில் நில்க்குன்னு.

மேள பிரதிஷ்ணம் ஆக்ரசால பாகத்து எத்தி. ஆக்ரசாலேடெ கோலாயில் மேளோம் கண்டு நில்க்யாணு அடீரீம் கூட்டரும். தருணீமணிகள் மேல்முண்டு மாரிலிட்டு சுற்றுவிளக்கு தரையில் கயறி நின்னு உல்சவம் காணுன்னு. மேளக்கம்பக்கார் தோர்த்து வீசீம் கையுயர்த்தீம் வாத்யக்காரெ ஆவேசம் கொள்ளிக்குன்னு. பெட்டென்னாணு அது ஸம்பவிச்சது.

திடம்பேற்யான பின்னிலேக்கு பெட்டென்னு திரிஞ்š. திரிஞ்ஞானேடெ கொம்பு அடுத்து நில்குன்ன ஆனெடெ வயறினு கொண்டு. குத்துகொண்டான்யேம் பின்னிலேக்கு வலிஞ்š. அது கண்ட மற்றானகளும். பரிப்ராந்த்யோடெ ஜனங்ஙள் சிதறியோடி. ஒரு நிமிஷம் கொண்டு மதிளகம் விஜனமாயி. அப்பாணு ஸம்பவிச்சதெந்தாணென்னு மனஸ்ஸிலாயது. பந்தம் பிடிச்சிருன்ன ஒரு வித்வான் போதம்கெட்டு பந்தத்தோடொப்பம் முன்னிலேக்கு வீணுகிடக்குன்னு. ஆன விரண்டோடான் வேறெ காரணம் வேணோ?

தமிழில் –

ஆறாம் நாள் உற்சவம் அன்றைக்கு. காலையில் தெய்வத்தை வீதியுலாவாக எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சி. எல்லாவிதமான ஆபரணங்களும் அணிமணிகளுமாக உயரமான யானைகள். செண்டை மத்தளத்தில் தேர்ந்த கலைஞர்கள். யானைகளுக்கு முன்னால் குத்துவிளக்கு ஏந்தி நடக்கும் அம்பலவாசி நாயர்கள். தீப்பந்தம் கொளுத்திப் பிடித்த நாயர்கள். அகம்படி சேவிக்கும் கோவில் ஊழியர்கள் வாளேந்தி நிற்கிறார்கள்.

மேளதாளத்தோடு ஊர்வலம் கோவில் முன்பகுதிக்கு வந்து சேர்ந்தது. அங்கே திண்ணையில் அடுதிரியும் தோழர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அழகான பெண்கள் மேல்துண்டால் மார்பு மறைத்தபடி, சுற்றுவிளக்கு மேடையில் ஏறி நின்று ஊர்வலத்தைக் கண்டபடி இருக்கிறார்கள். செண்டைமேள ரசிகர்கள் துண்டை வீசியும், கையை உயர்த்திக் காட்டியும், மேளக்காரர்களை உற்சாகப்படுத்திக் கொட்டி முழங்க வைக்கிறார்கள். அப்போதுதான் திடீரென்று அது நடந்தது.

சுவாமி விக்ரகத்தைச் சுமந்துகொண்டு முன்னால் வந்த யானை சட்டென்று பின்நோக்கித் திரும்பியது. அதன் தந்தம் பின்னால் நின்ற யானையின் வயிற்றில் குத்தியது. குத்து வாங்கிய யானையும் பின்னால் திரும்ப, அடுத்து நின்ற யானைக்குக் குத்து. இப்படி எல்லா யானைகளும் மிரள, வேடிக்கை பார்த்து நின்றவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். ஒரே நிமிடத்தில் கோவில் பிரகாரம் காலியானது. அப்போதுதான் என்ன நடந்ததென்று தெரிந்தது. தீப்பந்தம் பிடித்துப்போன ஒருத்தன் மயக்கம்போட்டுத் தரையில் எரியும் பந்தத்தோடு விழுந்துவிட்டான். யானை மருண்டோட இது போதாதா?

**********************************************8

“ஆன ஆனேன குத்தி”, ஏதோ உண்ணிநம்பூரி விளிச்சுப் பறஞ்சுகொண்டு ஆக்ரசாலேல்க்கு ஓடிக்கயறி.

“அப்பொ குத்து கொண்டான மறுகுத்து உண்டாயில்லே?”

அடீரி குஸ்ருதியோடெ சோதிச்சு.

“அதுண்டாய்யோன்னு நிச்சல்ய. குத்தணதே கண்டுள்ளு. மறுகுத்து காண்யண்டாயில்ல.” அயாள் கிதச்சுக்கொண்டு பறஞ்š.

“ன்னாலேய் ஞான் கண்டது மறு குத்தா”

அடீரி பறஞ்ஞப்பொ எல்லாரும் மிழிச்சு நில்ப்பாயி.

தமிழில் –

“ஒரு யானை இன்னொரு யானையைக் குத்தியது” ஒரு நம்பூத்ரி இளைஞன் கூவிக்கொண்டு கோவில் முன் மண்டபத்திற்குள் ஓடினான்.

“அப்போ, குத்து வாங்கின யானை மறுகுத்து கொடுக்கலியா?

அடுதிரி குறும்போடு கேட்டார்.

“அது நடந்துதான்னு நிச்சயமாத் தெரியலை. குத்து தான் பார்த்தேன். மறு குத்து பார்க்கலை” , அவன் படபடப்போடு சொன்னான்.

“அப்படீன்னா, நான் பார்த்தது மறு குத்துதான்”.

அடுதிரி சொன்னபோது எல்லாரும் விழித்தார்கள்.
***********************************8

“தான் மாத்ராய்ட்டு கண்ட்யென்னோ! போஷ்க்” , அயாள் வாதிச்சு.

“உவ்வ. கண்டுன்னுள்ளது சர்யா. எங்ஙன்யாச்சால் (எங்ஙனெ என்னு வச்சால்)

கரிக்குத்து நோக்கெ கண்டு
கரிமிழியாளுடெ சுந்தரானனம்.
கஜப்போர் காணே பயன்னோடியொருவளுடெ
களாட வீழே மாரிலது கண்டு
கரிமறுகொரு குத்து போல்

தமிழில் –

“நீ மட்டும் பார்த்தியா? பொய்.” அவன் சொன்னான்.

“ஆமா, பார்த்தேன். எப்படின்னு கேட்டால்,

கண்ணில் மையெழுதியவளின் பேரழகை
யானையிடித்த போது பார்த்தேன்.
யானைப்போர் கண்டு பயந்தோடியவளின்
கழுத்தாடை வீழ, மாரில் கண்டேன்
கறுப்பு மச்சம் புள்ளிபோல.

(மறு குத்து – யானை திருப்பிக் குத்தியது; புள்ளி போன்ற மறு).

*****************************************

இப்போதும் யானைகள் உண்டு. கோவில் உண்டு. சீவேலியும் எழுநள்ளிப்பும் எல்லாம் உண்டு. நம்பூத்ரிகள் இருக்கிறார்கள். முண்டு உடுத்து மேல் துண்டு கொண்டு மார்பு மறைக்காமல், அழகாகச் சேலை உடுத்த பெண்கள் இருக்கிறார்கள். நம்பூத்ரிகள் வெட்டிப் பேச்சு, சிருங்காரக் கதைகள், மாராப்புத் துணி விழுமா என்று பார்த்து நிற்பது, கோவில் உற்சவத்தில் சாப்பாடு என்று அலைவதில்லை. படிக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார்கள். அரசியலில் ஈடுபட்டு இடதுசாரியும் வலதுசாரியுமாக மைக்கைப் பிடித்து கோஷமிடுகிறார்கள்.

அவர்கள் பேச்சு வழக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் பழைய வாடையோடு இருக்கிறது.

இரா.மு

(2005)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன