Death by PowerpointDeath by Powerpoint

தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான்.

பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே.

ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம் இருட்டில் நின்றார்கள் ரெண்டு பேரும்.

‘விரசா ஆகட்டும்.. தாவி உள்ளே போ… இந்தச் சாவிக் கொத்து எந்தப் பூட்டையும் திறக்கும்…’

திருடன் சாவிக் கொத்தை நீட்டினான்.

தொம்பங் கூத்தாடி யாரையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.

’நம்ப சோக்ராதான். பையன் திம்திம்முனு கொட்டினா நான் சரசரன்னு சுவர் ஏறிடுவேன்’.

டெக்னாலஜி நம்மை எந்த மதிலையும் கடந்து வென்று வரும் தொம்பங் கூத்தாடிகளாக்கி இருக்கிறது. பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் ஒரு ஸ்லைடாவது இருந்தால் தான் பேச்சு வருகிறது. Death by power point – நான் அடிக்கடி செய்வது.

நேற்றும் செய்ய ஆயத்தமானேன்.

‘சார், ப்ரஜெக்டர் ஏதோ ப்ராப்ளம்.. மாத்தித் தரேன்’.

போனவர் வரவே இல்லை.

பார்த்தேன். பின்னால் வெள்ளை அக்ரலிக் பலகை. மார்க்கர் பேனாக்கள். முழுக்க ஒயிட் போர்டில் எழுதி விளக்கி, வரைந்து விவரம் தந்து பவர் பாயிண்டே இல்லாமல் வகுப்பு. சேம்பர் மியூசிக் கச்சேரி செய்த மாதிரி மனதுக்கு நிறைவாக இருந்தது.

ஒயிட் போர்டும், மார்க்கர் பேனாவும் தான் எதற்கு? சுற்றுச் சூழலை மாசு படுத்தும் இனங்கள் அல்லவோ இரண்டும்?

எல்லா நிறுவனங்களும் பள்ளி வகுப்பு போல கரும்பலகைக்கும் சாக்பீஸுக்கும் மாறினால் இன்னும் அந்நியோன்யமாக இருக்கும்.

பாடம் நடத்திக் கொண்டே, சாக்பீஸை உயர்த்திப் பிடித்து, கேரம் போர்ட் காயை அடிப்பது போல் சாக்பீஸின் தலையில் சுண்டி அந்தத் துண்டு கடைசி வரிசையில் பேசிக் கொண்டிருந்த சோமசுந்தரம் மேல் சரியாகப் போய் விழ, ‘பாடத்தைக் கவனி’ என்று கண்டித்தபடி க்வாட்ராடிக் ஈக்வேஷனைத் தொடர்ந்த எங்க ப்ரபசர் மாதிரி நானும் ஒரு நிமிடமாவது மாற ஆசைதான்.

—————————————–

RBI raises minimum daily balance for CRR from 70% to 99%. Short term borrowing may come with more fund cost. And this will certainly hit the not-so-liquid banks below the belt. More painful than RBI holding these bankers by their b*l*s in a tight grip
—————————————————

Ben Bernanke (US Fed Reserve Chairman) effect is still lying heavy on Sensex with IT stocks continuing to rally today too. Yet, Footsie (FTSE) is wobbling with London Stock Exchange booking listless trades against the background of poor results by Microsoft and Google. Exotic option sellers, especially, ‘long butterfly call’ are having a field day over there..

Pray tell me if you know, what constitute Indian market sentiments?
——————————————————–

’பேனா நிப் பட்டையடித்து மசித் துளிகள் காகித நடுவில் சின்னத் தீவுகளாகக் குளம் கட்டின’

இந்த வாக்கியத்தை எழுதி விட்டுப் பார்த்தால் புரிவது – இது 1870களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கே விளங்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுத்தாணி பரம்பரை. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது வருடமாக பால்பாயிண்ட் பேனா வம்சம். இடையில் வந்த மசிப் பேனா ((fountain pen) என்ற ஒரு சிறு தொழில்நுட்பம் சமூக வாழ்க்கையைப் பாதித்துப் போயிருக்கிறது.

புனைகதையும் அபுனைகதையும் ஓவியமும் புகைப்படமும் காலத்தைப் பதிவு செய்வது ஏன் அவசியம் என்று புரிகிறது.
———————————————-

The opening sentence (preface) of Edgar Thurston’s seven volume book ‘Castes and tribes of South India’ –

//In 1894, equipped with a set of anthropometric instruments obtained on loan from the Asiatic Society of Bengal, I commenced an investigation of the tribes of the Nīlgiri hills, the Todas, Kotas, and Badagas, bringing down on myself the unofficial criticism that “anthropological research at high altitudes is eminently indicated when the thermometer registers 100° in Madras.”//

ஆக, இந்த மாதிரி விமர்சனம் எல்லாம் 120 வருடமா வந்துட்டுத்தான் இருக்கு!

———————————————–

மறைந்த தோழர் சமர் முகர்ஜியைப் பற்றி யாரும் சொல்லாட்ட என்ன, நாம் சொல்லலாம்:

1) லெனினின் சோவியத் புரட்சி நான்காவது பிறந்த நாள் கொண்டாடிய போது பிறந்தவர் (நவம்பர் 7, 1913)

2) சுதந்திரப் போராட்ட தியாகி. சைமன் கமிஷன் எதிர்ப்புக்காகப் பள்ளியில் படிக்கும் போதே சிறை புகுந்து, படிப்பைத் தொடர முடியாமல் போனவர் – பிறகு சாவகாசமாக முடித்தார்.

3)1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

4) 1957 முதல் 1971 வரை மேற்கு வங்க மாநிலச் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பணியாற்றியவர்

5) 1971 – 1984 பெரிய தொகுதியான ஹௌராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்

6) 1986 – ராஜ்யசபா உறுப்பினர்

7) 1940-முதல் கம்யூன் (கட்சி கூட்டு இருப்பிடம்) வாழ்க்கை வாழ்ந்தவர். 1965 முதல் இறுதி நாள் வரை ஒரே கம்யூனில் தங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.

சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவராகப் பதவி வகித்தவர்

9) சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியத்தை மறக்காமல் கட்சியில் ஒப்படைத்து தன் அத்தியாவசியச் செலவுக்காக மட்டும் பணம் வாங்கிக் கொண்டவர்.

10) யாரோடும் தனிப்பட்ட முறையில் விரோதம் கொள்ளாது, கோபப்படாது, கண்ணியம் காத்த நல்ல மனிதர்.

11)100 வயது நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தவர்.

சமர் முகர்ஜி போன்ற மனிதர்கள் இங்கே இருந்தார்கள் என்பது சீக்கிரமாக மறக்கப்பட்டு விடும். லால் சலாம் காம்ரேட்.

———————————————

கண்ணமுது காணாது காதில் குழலொலிக்கும்
பண்ணமுது என்நெஞ்சில் பாற்கடலாம் விண்ணமுது
மாரார் எடக்கயில் மன்றாடி நிற்கின்றார்
ஆரா வமுதே அருள்.

எடக்க – தாளமும் நரம்பிசையும் கலந்த கேரள இசைக்கருவி.

மாரார் – எடக்க வாசித்து சோபான சங்கீதம் பாடுகிற்வர்கள் பெரும்பாலும் மாரார் குலத்தினராக இருப்பது மரபு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன