Archive For பிப்ரவரி 13, 2024

நாலு தடவை அடுக்கு தீபாராதனை மாதிரி தும்மல் போட வைத்த அர்ஜுன நிருத்தம்

By |

நாலு தடவை அடுக்கு தீபாராதனை மாதிரி தும்மல் போட வைத்த அர்ஜுன நிருத்தம்

வரலாமா? கேட்டபடி யாரோ படி ஏறி உள்ளே வந்தார்கள். நேற்று பகலில் இருந்து திலீப் இப்படி உள்ளே கடந்து வருகிறவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். தூக்கத்துக்கு ஆள் எடுக்கற யேஜென்சி தானே? வந்தவன் கேட்க, மர ஸ்டூலில் உட்கார்ந்திருந்த வயசன் சிரிக்க ஆரம்பித்தான். திலீபுக்கும் சிரிப்பு வந்தது. வந்தவர்கள் இப்படித்தான் விசாரிக்கிறார்கள். பத்திரிகையில் விளம்பரம் பார்த்து விட்டு வருகிறவர்கள். அர்ஜுனன் களிக்கு தான் ஆள்கார் வேணும்னு கேட்டது. தூங்கி மரிக்க இல்லே கேட்டோ சாமு மாஸ்டரே. வயசன் பதில்…




Read more »

திலீப் லண்டனுக்குக் குடி பெயர்ந்து வெள்ளைக்காரனுக்கு அர்ஜுன நிருத்தம் பாடம் எடுப்பான்

By |

திலீப் லண்டனுக்குக் குடி பெயர்ந்து வெள்ளைக்காரனுக்கு அர்ஜுன நிருத்தம் பாடம் எடுப்பான்

ஆராய்ச்சிக் கட்டுரையைப் பெரியம்மா நின்றும் இருந்தும் நகர்ந்தும் வாய்விட்டும், முணுமுணுத்தும், அரை வார்த்தை சொல்லி மற்றது முழுங்கியும் டிக்டேட் செய்யச் செய்ய அதைக் கவனித்து சரியாக டைப் அடித்துத் திருத்தித் திருத்தி, திலீபுக்கும் அர்ஜுன நிருத்தம் பற்றித் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. சாஸ்திரி தம்பதிகளில் அம்மையாருக்குத் தெரிந்ததை விட அது பத்து மடங்கு அதிகம்; சாஸ்திரியை விடவும் தான் என்று அவன் நினைக்கிறான். இன்னும் சிரத்தையாக இதுவே வாழ்க்கை என்று திலீப் உட்கார்ந்தால், சியாமளா பெரியம்மாவுக்கும் சாஸ்திரிக்கும் அவன்…




Read more »

சாயங்கால நடையும் சந்தியா நடராஜனும்

By |

சாயங்கால நடையும் சந்தியா நடராஜனும்

ஒரு மாதமாகக் காலை ஒரு மணி நேர நடைப் பயிற்சியொடு மாலையில் இன்னொரு 45 நிமிடம் கூடுதல் நடையும் சேர்ந்ததால் ராத்திரி சீராக உறக்கம் வருகிறது.நோய்க்கூறு கண்டது தேய்ந்து மனதின் ஒரு மூலையில் பதுங்கிவிட்டது, சாயந்திரம் நடையில் ஒரு கூடுதல் சுவாரசியம் உண்டு.வட்டம் கிறங்கிச் சுற்றிவரும் நடைப் பாதையில் நண்பர் சந்தியா பதிப்பக உரிமையாளர் நடராஜனை சந்திப்பது அவ்வப்போது நடக்கும். எப்போதும் உற்சாகமாக வரவேற்கும் நடராஜன் குறுந்தொகையிலிருந்து, சுந்தரர் தேவாரம், வள்ளலார் திருவருட்பா, பாரதி,கல்யாண்ஜி கவிதை வரை…




Read more »

எல்லா அடவுகளும் முத்திரைகளும் எதிரியை பயப்படுத்தி அகற்றி நிறுத்தவே ஏற்பட்டவை

By |

எல்லா அடவுகளும் முத்திரைகளும் எதிரியை பயப்படுத்தி அகற்றி நிறுத்தவே ஏற்பட்டவை

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரேயிலிருந்து= தொடர்ச்சியாக இங்கே வந்தது முதற்கொண்டு சதா பேசியபடி இருக்கிறான் வயசன். இந்த வயசில் அவனுக்கு ஒருத்தர் வேலை போட்டுக் கொடுத்த பூரிப்போ சந்தோஷமோ வார்த்தையாய் வந்து விழுந்த மணியமாக இருக்கிறது. எப்போதோ கண்ணூர் போன கதையை வயசன் திலீபுக்கு இது வரை ரெண்டு முறை சொல்லி விட்டான். அவன் சின்ன வயதில் பொண்ணு தோற்றுப் போகிற வனப்பில் இருப்பானாம். கையும் காலும் முகமும் தொடையும் வழுவழுவென்று மினுங்கிய…




Read more »

இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்த மாரார்களுமாக மாடுங்கா

By |

இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்த மாரார்களுமாக மாடுங்கா

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து கேரளம் திலீப் நினைத்தது போல் இல்லை. பம்பாய் மாடுங்கா சங்கர மட வைதீகர்களும், ஓணத்துக்கு வாழைக் குலை வாங்கக் குடும்பத்தோடு கும்பலில் புகுந்து புறப்படும் செண்ட்ரல் ரயில்வே டிவிஷனல் கிளார்க் நாயர்களும், ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம் இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்து சேரும் மாரார்களுமாக அவன் மனதில் எழுப்பியிருந்த உலகம் வேறு விதமாக இருந்தது. அந்த நிலப் பிரதேசத்தில் விடிய ரெண்டு மணி நேரம் முன்னால் நம்பூதிரிகள்…




Read more »

ஜான் ஹெர்ஸெ எழுதிய ‘ஹிரோஷிமா’ என்ற புத்தகம் தமிழில் வருமா?

By |

ஜான் ஹெர்ஸெ எழுதிய ‘ஹிரோஷிமா’ என்ற புத்தகம் தமிழில் வருமா?

எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான ஹிரோஷிமா மேல் அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதைக் குறித்த இந்தப் புத்தகம் உலகில் பல மொழிகளில் மூன்று மில்லியன் பிரதிகள் மொத்தமாக விற்பனையாகியுள்ளது, இதைவிட அதிக விற்பனை, மாசேதுங்கின் சிவப்புப் புத்தகம் தான். இரண்டாம்…




Read more »