Archive For ஆகஸ்ட் 19, 2021

லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த வான்கோழிகள் :மிளகு நாவலில் இருந்து

By |

லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த வான்கோழிகள் :மிளகு நாவலில் இருந்து

”இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கும், வியர்வைக் கசகசப்பு குறைக்கவும் இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு”. முகத்திலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்தாலும் மலர்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணப்பா. ”நீ கோழிமுட்டை மட்டும் விற்றே எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறாய்? வான்கோழி வைத்துப் பராமரித்து அதன் முட்டைகளையும் விற்கலாமே? இந்தியர்கள் வாங்குகிறார்களோ என்னமோ, ஹொன்னாவரில் இருக்கப்பட்ட போர்த்துகீசியர்கள் ஒருத்தர் விடாமல், நீ என்ன விலை சொன்னாலும்…




Read more »

ஹொன்னாவர் பெருச்சாளிகளும், லிஸ்பன் மாநகரப் பெருச்சாளிகளும்

By |

மிளகு நாவலில் இருந்து சிருங்காரக் கனவில் மனம் லயிக்க இடுப்புக்குக் கீழ் அவசரமாக ஊர்ந்து படுக்கையில் இருந்து குதித்துக் கீக்கீக்கென்று சத்தமிட்டுப் போனது பெருச்சாளி. சந்தன மணமும் ஒதிகோலன் வாசனையுமில்லை. புழுத்த கழிவு தேங்கிய சாக்கடை ஓரம் குமட்டும் மேல்தோல் நனைய நகரும் பெருச்சாளி வாடை. அதன் சிறு கண்கள் அகஸ்டின்ஹோவின் கண்ணை நேரே பார்த்த பார்வை காமாந்தகாரா என்று இகழ்ந்தது. வாயைத் திறந்து வெளிப்பட்ட பற்கள் கடித்துக் கொல்லக் கூடியவையாகத் தெரிந்தன. நாலு பெருச்சாளிகள் சேர்ந்து…




Read more »

லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே

By |

லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே

மிளகு நாவலில் இருந்து ”சாப்பிட்டு நடக்க முடியலேடி துளுவச்சி, ஒரு பக்கமா கொண்டுபோய்த் தள்ளுது. அதான் சாரட்டு சவாரி, இல்லாட்டாலும் குதிரை ஆள் அம்பு எல்லாம் இந்த உடம்பிலே உசிர் இருக்கறவரை கூடவே வரும். மூச்சு நின்னா, நின்னா சென்னா இல்லேதான்”. சென்னபைரதேவி சிரித்தாள். லொளலோட்டே எல்லா லொளலோட்டே சென்னபைரதேவி பாட அப்பக்காவும் சேர்ந்து கொண்டாள். லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே சிநேகிதிகள் கைகளை உயர்த்திச் சேர்த்துத் தட்டி…




Read more »

அசுரவித்து- ஒரே இரவில் பற்றிப் படர்ந்து வெளி நிறைக்கும் மிளகுக்கொடி

By |

அசுரவித்து- ஒரே இரவில் பற்றிப் படர்ந்து வெளி நிறைக்கும் மிளகுக்கொடி

மிளகு நாவலில் இருந்து தெருவில் அந்த நேரத்திலும் கூட்டம். “எந்தினாணு அவிடெ திரக்கு?” என்று விசாரிக்க ”சாரதாம்ம வீட்டுலே ஏதோ மேஜிக்காம்” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விழுந்தடித்து ஓடினான் கேட்கப்பட்டவன். வீடு முழுக்க நல்ல மிளகு வாசனை. வாசலில் க்ரோட்டன்ஸ் வைத்திருக்கும் சிறு தோட்டத்தில் முழுக்க கொடிவிட்டுப் படர்ந்திருந்த மிளகும் அதே போல் நல்ல வாசனை பரத்திக் கொண்டிருந்தது.வாசலில் பிஷாரடி நின்றிருந்தார். ”சாவக்காட்டு வயசன் புளிச்ச காடியை அமிர்தம்னு குடிச்சுட்டு துப்பின இடம் இது. அந்த…




Read more »

மிளகு நாவலில் இருந்து – மாஸ்கோவில் இருந்து வந்த நடாஷா

By |

மிளகு நாவலில் இருந்து – மாஸ்கோவில் இருந்து வந்த நடாஷா

”நடாஷா, உன் குடும்பம்?” திலீப் தயங்கித் தயங்கிக் கேட்டான் அவளை. “நானா? சில இனிப்புப் பழம், சில புளிப்புப் பழம், சில அழுகிய பழம், இன்னும் சில பழுக்காமலேயே உலர்ந்து உதிர்ந்தது. என் பழக்கூடையிலே எல்லாம் உண்டு”. நடாஷா சிரித்தாள். ”நான் இங்கே இருந்து மாஸ்கோ போனபோது எங்கப்பாவுக்கு சித்தபிரமை பிடிச்சிருந்தது. அதோடு கூட சென்ட்ரல் கமிட்டியில் சிறப்பாக வேலை பார்த்திருந்தார். அவரை குருஷேவ் எதிர்ப்பாளர்னு சைபீரியா அனுப்பிட்டாங்க. பிரஷ்னேவ் ஆதரவுக்காரர் அவர்னு அப்புறம் கண்டுபிடிச்சாங்க. பிரஷ்னேவுக்கே…




Read more »

லிஸ்பன் மாநகரப் பிரமுகர்களும் ஒரு பெருச்சாளியும்

By |

லிஸ்பன் மாநகரப் பிரமுகர்களும் ஒரு பெருச்சாளியும்

(மிளகு நாவலில் இருந்து) தோமஸ் அகஸ்டின்ஹோ ரொம்பப் பரிதாபமான நிலையில் காணப்பட்டார். லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த அவருக்கும், அவர் கூட வந்த ஜோஸ் கார்லோஸுக்கும் ஹொன்னாவர் கருமார் தெருவில் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தான் பிரச்சனை. படுத்தால் உறக்கம் வரவில்லை. மெழுகுவர்த்திகளை அமர்த்தினார். திரைகளை முழுக்க இழுத்து மூடினார். அதையும் இதையும் நினைத்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் அகஸ்டின்ஹோ. வேறொண்ணுமில்லை. ஒரு பெருச்சாளி, ராத்திரி படுக்க விடாமல் அவர் படுக்கையைச் சுற்றிக் குறுக்கும் நெடுக்கும்…




Read more »