Archive For மே 1, 2018

New: புது நாவல் : மேன்செஸ்டர், குளிர் பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது

By |

(First cut – awaiting editing) வெளிச்சம் மங்கிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. சற்றே புழுக்கம் தொடங்கியிருந்தது. ஆஸ்ட்ரிக்ஸை மூடி வைத்துவிட்டு விமானத்தின் அந்தக் கோடிக்கு மெல்ல நடந்தான் சிவா. முன்னால் இடத்தை அடைத்துக்கொண்டு ஒபீலிக்ஸ் நடப்பதாகக் கற்பனை செய்யச் சிரிப்பு வந்தது. சின்னவயதில் இருந்து ஈடுபாட்டோடு படித்த காமிக்ஸ் ஆஸ்ட்ரிக்ஸ். அதன் நுண்ணரசியலையும், நளினமான நகைச்சுவையையும் அவன் புரிந்துகொண்டபோது பிள்ளைப் பருவம் கழிந்து எத்தனையோ வருடமாகி இருந்தது. ஆஸ்ட்ரிக்ஸ், ஒபிலீக்ஸ், கெடாபிக்ஸ், காகஃபோனிக்ஸ்.. உங்கள் உலகம் ரம்மியமானது….




Read more »