Archive For பிப்ரவரி 14, 2014

Muththamma Teacher – Chapter 5முத்தம்மா டீச்சர் – அத்தியாயம் 5

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 5 இயற்கை மனிதனுக்கு அளித்த செல்வங்களில் மகத்தானவை நிலமும் நீரும் ஆகும். நிலத்தில் வளரும் செடிகொடிகளும், மரங்களும், மனிதனின் பசியைப் போக்க உணவையும், சுவாசிக்க நல்ல காற்றையும் வழங்குகின்றன. நிலத்தின் அடியிலும் இயற்கை பல்வேறு கனிம, படிவ வளங்களை வெகுமதியாகக் கொடுத்துள்ளது. நான் அவற்றில் ஒன்று. என் பெயர் நிலக்கரியாகும். முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டு திருத்திக் கொண்டிருந்தாள். ஏழாவது வகுப்புப் பாடம். முப்பத்தாறு நோட்டுகளில்…




Read more »

Balu Mahendraபாலு மகேந்திரா

By |

வாய் நிறைய மனம் நிறைய அவரே அன்போடு வரவேற்றார் ‘தலைமுறைகள்’ ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரீவ்யூ தியேட்டரில் சிறப்புக் காட்சியின் போது. சமீபத்திய நாவல் பிரதிகளைக் கொடுத்தேன். வாங்கி ஒரு நிமிடம் குழந்தை கன்னத்தை வருடுகிற மாதிரி வாஞ்சையோடு வருடி விட்டுப் பின்னால் நின்ற நண்பரிடம் கொடுத்தார். ‘ஸ்கிரீனுக்கு ரொம்ப் பக்கத்தில் உட்கார்ந்திடாந்திங்க’ என்று பக்கத்து இருக்கையைக் காட்ட, அருகே எங்கள் மதிப்புக்குரிய தோழர் ஜி.ஆர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் தமிழ்நாடு செயலர்). ஜி.ஆர் இன்னும் படத்தின் பாதிப்பில் இருந்து…




Read more »

Muththamma Teacher – 4முத்தம்மா டீச்சர் – 4

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 4 எல்லோருக்கும் நாற்காலி டிக்கெட். அலமேலம்மாக் கிழவி கூட கதவோரம் நாற்காலியைக் கோணலாக இழுத்துப் போட்டுக் கொண்டு வாயில் புகையிலைக் கட்டையைக் குதப்பியபடி கெத்தாக உட்கார்ந்திருந்தாள். ஒரு பெரிய பொட்டலம் நிறைய மட்டன் கவாப்பும், மீன் கவாப்பும் வாங்கி வந்து, படம் ஆரம்பிக்க முன்னால் எல்லோருக்கும் கொடுத்தார் மாப்பிள்ளை. ‘கொடுங்க..கொடுங்க.. நாளைக்கு ராசாத்தி கஜானாவைப் பிடிச்ச பிறகு சுக்கு மல்லி காப்பி கூடக் கெடைக்காது..’ போதும்பொண்ணு…




Read more »

Muththamma Teacher – 3முத்தம்மா டீச்சர் – 3

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 3 முத்தம்மா டீச்சர் வென்னீரை எடுத்து வைத்துக் குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்டபோது அங்கே ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளை ராஜு… ஆலங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டு .. காறிக் காறி உமிழ்ந்து கொண்டு.. குறக்களி காட்டுகிறது மனது. பின்னால் வந்து புஜத்தைப் பற்றும் கைகள் நாற்பது வருஷம் முந்திய வலுவோடு ‘முத்தம்மா.. முத்துன்னு கூப்பிடணும் இல்லே.. என்ன படிக்கறே முத்து?’ ‘ஒம்பதாவது … ராசாத்தி வந்துடுவா…..




Read more »

Random musingsRandom musings

By |

The ‘Pesuren pesuren kaadhal mozhi’ song sequence … We rarely get music videos that convey one emotion well enough, and here’s a song that casually straddles two contradictory emotions, sadness and happiness, the tune balanced perfectly between dirge and romantic ballad.// பாட்டைக் கேட்டேன். சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் பரத்வாஜ் ரங்கன் —————————- இருக்கு வேதம் (ரிக் வேதம்) எடுத்துக் கூறும்…




Read more »

Muththamma teacher paarththu mudikkadha Tamil padam – chapter 2முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – அத்தியாயம் 2

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – அத்தியாயம் 2 தெரசாள், முத்தம்மா, அழகு மீனா, ராசாத்தி, சாந்தா, போதும்பொண்ணு, செல்வி.. ஒரு கூட்டமே தரை டிக்கெட்டில். ராசாத்தியின் அவ்வா அலமேலம்மாக் கிழவி புகையிலைக் கட்டையை வாயில் அடக்கிக் கொண்டு தடுப்புச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். தடுப்புக்கு அந்தப் பக்கம் களவாணிப் பயல்கள். சினிமா கொட்டகைக்கு வருவதே குட்டிகளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத்தான். சமயம் கிடைத்தால் உரசியும் பார்ப்பார்கள். யாருமே எவனுமே யோக்கியமில்லை. காலம் கெட்டுக்…




Read more »