Next  

Next  

  • ஒருமித்து முழங்கும் முழவுகளின் பின்புலத்தில் காதல் சொன்னார்கள்

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது-அடுத்த சிறு பகுதி   ஜாக்கிரதையாக பாதிரியாரின் நலம் விசாரிக்க, கன்னத்தில் குழி விழச் சிரித்த கொச்சு தெரிசா என்ற அழகுப் பெண் சொன்னாள் –   அமேயர் பாதிரியாருக்கு வாடிகன் மாநகரில் போப்பரசருடைய புனித  வசிப்பிடத்தில் தங்கி இருந்து தேவ ஊழியம் செய்ய வாய்ப்புக் கிடைத்து இத்தலி போக இருக்கார். இனி திரும்ப இங்கிலாந்தோ இங்கேயோ வருவாரான்னு தெரியலை. பிதாவுக்கு ஸ்தோத்திரம்.   அவசரமாகத் தன்...

  • மறைந்த இறை ஊழியர்கள் பற்றிய நினைப்புகளும் புனிதமானவை

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி பயணத்தில் சந்தித்த போது மனதில் மேலோட்டமாகப் பதிந்து கடந்து போன அழகெல்லாம் அவள் இப்போது தனியாக வந்திருக்கும் போது மேலெழுந்து சூழ்ந்து எதிரே நிலைகொண்டு சஞ்சலப்படுத்துகிறது. அவன் தனியாக இருப்பதும், இந்த வனப்பால் நிலைகுலைந்து போனதற்கு இன்னொரு காரணம்.   அந்த பஸ் பயணம். அது ஒரு வருடம் முன்பாக இல்லையா? நீங்கள் எப்படி இன்னும் இங்கே?   நம்ப முடியாத குரலில்...

  • நின்று நடத்தும் பேச்சுவார்த்தை

    வாழ்ந்து    போதீரே – 4வது அரசூர் நாவலில் இருந்து கொச்சு தெரிசாவாகப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் இந்த விழிகள் அவனுக்குப் பரிச்சயமானவை. ஒரு வினாடி பார்வையில் பட்டு ஈர்த்து, அவசரமாகப் பின் வாங்க வைக்கும் செழுமையான மார்பும் கூட. குரல் மட்டும் இன்னும் கீச்சென்று இருந்தால் தில்ஷித் கவுரே தான் இவள். தில்ஷித் கவுரை பத்து வினாடியாவது தொடர்ந்து கண் இமையாது பார்க்க முடியும். அமைச்சக அலுவலகத்தில் சங்கரனுக்கு சில படிகள் கீழே உத்தியோகம் பார்க்கிறவள். பார்வை...

  • பாரம்பரிய உடையணிந்த இரு முதியவர்கள் மற்றும் யந்திரம் பற்றிப் பேசவந்த மற்றொருவர்

    காலையில் யந்திர நிர்மாணம் பற்றிப் பேச வந்த முதியவர் எங்கே?   யாரோ வந்து சங்கரனைக் கேட்டார்கள். அந்தக் கேள்வியை பல பேர் கேட்டு விட்டார்கள். தற்காலிக யந்திரம் என்று ஒரு பெரிய செப்புத் தகட்டை விழாப் பந்தலுக்கு அருகே ஒரு மாமரத்தில் இரும்பு ஆணிகள் கொண்டு அவர் அடித்து  நிறுத்தும்போது தான் சுருக்கமாக மழை பெய்தது. ஏழெட்டு மயில்கள் கூட்டமாகத் தாழப் பறந்து திரும்ப வானேறின.   அந்த முதியவரை மட்டுமில்லை, பிரபுத்துவக் குடும்ப உடுப்புகளோடு...

  • அவசரமாகப் புனைய வேண்டிய புது ஆளுமை பிம்பங்கள்

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதாம் நாவல் -அடுத்த சிறு பகுதி ராஜா பிரியத்தோடு விசாரிக்க, நெட்டை பனியன் சொன்னான் –   அதிகாரிக்கு அவர் பொண்டாட்டியோட கல்யாணம் ஆச்சு. இந்தப் பொண்ணுக்கு அவளோட புருஷனோட ஆச்சு.   ஆச்சா? ராஜாவுக்கு ஏனோ ஏமாற்றமாகப் போனது.   பந்தல் உள்ளே இருந்து செண்டை மேளம் அமர்க்களமாக ஒலிக்க, ஆடி ஆடிச் சிரித்துப் போன கிழவன் சத்தம் கூட்டினான் –   மாப்ளே, அது...