Archive For பிப்ரவரி 3, 2009

நரகல் பணியாளர்கள்

By |

     மும்முரமாக வேலையில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருக்கும்போது செல்ஃபோன் சிணுங்கும். அல்லது முக்கியமான ஆபீஸ் மீட்டிங்கில் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் அலைபேசி அலைபாய்ந்து துடிக்கும். யாரோ அவசரமாகத் தொலை பேச அழைக்கிறார்கள். டென்ஷனோடு ஃபோனை எடுத்து ஹலோ சொன்னால் ஒரு பெண்குரல் வணக்கம் சொல்லும். ‘சார், ஏபிசிடி பேங்கிலிருந்து பேசறோம். பிளாட்டினம் கிரடிட் கார்ட் எந்த வித சார்ஜும் இல்லாமல் கொடுக்கறோம். நீங்களும் வாங்கிக்குங்களேன்’. எனக்குத் தெரிந்து பலபேர் இப்படியான ஒரு செல்போன்…




Read more »

குட்டப்பன் கார்னர் ஷோப் – பதினொன்று

By |

<!--:ta-->குட்டப்பன் கார்னர் ஷோப் – பதினொன்று<!--:-->

  Vaarthai Column – Feb 2009 இரா.முருகன் தைமாத நடுவாந்திரத்தில் மார்கழியை அசைபோடுவதை அன்பர்கள் மன்னிக்க வேண்டும். மாதப் பத்திரிகைக்குப் பத்தி எழுதும்போது சாவகாசமாகச் சாய்ந்து உட்கார்ந்து, விட்டு விலகி நின்று அவதானித்துப் பிரித்து மேய்ந்து வழி செய்வதால் இந்த time lag-ம் வேண்டுவதே இம்மாநிலத்து. கடந்து போன மார்கழியில் புத்தியில் உறைத்து இறும்பூது எய்த வைத்த முதல் விஷயம் என்ன என்றால் சென்னை சங்கீத சபாக்களின் மேடைகள் அழகிப் போட்டிக்கான முதல் கட்ட அணிவகுப்பு…




Read more »

பெயரில் என்ன இருக்கு

By |

  ‘பசுமாட்டுக்குப் பெயர் வைத்து அன்போடு கூப்பிட்டால் பால் அதிகம் கறக்கும்’. பாட்டியம்மா சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து டிவியில் பழைய ‘கோமாதா’ சினிமா பார்த்துக் கொண்டு, வெற்றிலைச் சீவலை சாஷேயில் இருந்து வாயில் கவிழ்த்தபடி சொன்னால், ‘உங்களுக்கு வேறே வேலை இல்லை. ஆவின் ஆபீசுக்கு வேணும்னா எழுதிப் போடுங்க’ என்று டிவி சானலை மாற்றும் இளசுகள் அதிகம். பாட்டி இல்லை. வெள்ளைக்காரன் அறிவித்திருக்கிறான். இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக் கழகம் நடத்திய லேடஸ்ட் ஆய்வு முடிவு – பசுவுக்குப்…




Read more »