Next  

Next  

  • எழுதப்பட்டு வரும் நாவல் றெக்கை – வலனாடு கோல்கீப்பர் ஜாஜா

    றெக்கை நாவல் சொல்வனம் இணைய இதழில் அறிமுகமானவன் வலனாடு கால்பந்தாட்ட அணி கோல் கீப்பர் ஜாஜா யரூபா மதத்தவனாக மாதத்தில் பதினைந்து நாளும், மிச்ச நாட்கள் யூத மதத்தவனாகவும் இருக்கிறான். எல்லாம் வலனாடு அணி வெற்றி பெறத்தான். ஷேப் ஷிப்டர் shape shifter குடும்பம் ஏற்கனவே அறிமுகமாகி நாவலை வழிநடத்திப் போகிறார்கள். I like the person I have become காலையிலிருந்து பல் இடுக்கில் சிக்கி நெருடிக் கொண்டிருக்கும் மாம்பழ நார் போல இந்த வாக்கியம்...

  • கைகால் முளைத்த அன்னப் பறவையை போல – என் புதிய நாவல் றெக்கை

    ‘றெக்கை;’ -அத்தியாயம் 2 சொல்வனம் இணைய இலக்கிய இதழில் -v———————————————————- Rekkai chapter 2 டாக்டரம்மா’ . ஊர்ப் பெரியவர்களில் ஒருத்தர் அழைக்கிறார். ”ராட்சச வண்டிக்காரி’ – குரல்கள் காத்திரமாகச் சேர்ந்து ஒலித்தன. டாக்டர் நிர்மலா நின்றாள். எல்லா வீட்டுக் கூரை மேலும் சுரைக்காய் காய்த்துத் தொங்கியதை பார்த்தபடி நிர்மலா ஊர்ப் பெரியவர்களிடம் சொன்னாள் – நான் உள்ளே போய் மரியாதை செலுத்திட்டு வந்துடறேன். அவளை வரவேற்கலாமா அல்லது திருப்பி அனுப்பிவிடலாமா என்று முடிவுக்கு வர முடியாமல்...

  • நானும் கலாப்ரியாவும்

    இன்று அகவை எழுபத்தைந்தில் அடியெடுத்து வைக்கும் என் அருமை நண்பன் பெருங்கவிஞர் -நாவல் ஆசிரியர் –கட்டுரையாளர் கலாப்ரியாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.. கோவில்பட்டியில் இன்று கலாப்ரியா -75 விழா சீரும் சிறப்புமாக எடுக்கப்படுகிறது. இன்று வெளியிடப்படும் விழா மலரில் என் கட்டுரை – ——————————————————————— . கலாப்ரியாவும் நானும் எது கவிதை? தொடக்கப் பள்ளிக் காலத்தில் வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு குழு இசைப் பாடல். ’கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி...

  • உலக வாசிப்பு தினம்  25 ஜூன் 2025

    இன்று உலக வாசிப்பு தினம். அதை ஒட்டி – 2024 ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நோய் கண்டது எனக்கு. உடல்நலம் வேகமாக குறைந்து வர அது காரணம் சில நோய்க்கூறுகள் தென்படத் தொடங்கின. அவற்றில் எனக்கு முக்கியமானது எழுத்துத் தடங்கல். writers bkock. பத்து நிமிடம் கூட லேப்டாபில் தொடர்ந்து எழுத முடியா.து. கையால் எழுதி முப்பது ஆண்டும் மேலும் ஆகியதால் கை எழுத்து பாதிக்கப்பட இல்லை . இந்தக் காலகட்டத்தில் மொத்தம்...

  • பரிவாதினி இசை மலர் – 1

    வாத்திமர் நாவல் எழுதுவதற்கு இடையே பரிவாதினி இசை மலர் வாசித்துக் கொண்டிருக்கிறேன், இருபதாம் நூற்றாண்டுத் துவக்கம் முதல், மத்தியப் பகுதி வரை ஒரு இசைப் பயணமாக நீளும் மலரில் அந்தக் காலமும், இசைச் சூழலும் குறித்த ambiance உருவாக்குவதில் அபார வெற்றி பெறுகிறார் சிவகுமார். அதற்கு முதல் படியாக 1930 – 1950 வரை தமிழ் இதழ்களில் வெளிவந்த அந்தக்கால ரேடியோ, கிராமஃபோன், இசைத்தட்டு வெளியீடு விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கங்கே வைத்திருக்கிறார். ஓவியக் கலை விற்பன்னர் கோபுலுவின்...