Archive For மே 6, 2020
”ஏம்பா நீ போன வாரம் நான் பார்த்தபோது காப்பி போட்டுட்டிருந்தியே” என்று விசாரித்தபடி திரும்பினார் விட்டோபா. ”ஆமா காப்பி மாஸ்டர் வரலேன்னு முதலாளி அங்கே அந்த மூலைக்கு போகச் சொன்னார். காப்பி மாஸ்டர் போயாச்சு.. அட இருக்காருங்க.. மெட்றாஸோட போயிட்டார்.. எல்லோரும் மெட்றாஸை விட்டு வரும்போது இவர் அங்கே காபிக்கடை இல்லே டீக்கடை போட்டிருக்கார்.. நல்லா போகுதாம்”. பச்சையப்பன் தெருப்பையன் என் தகவலுக்காகவும் சொன்னான். ”இங்கே காப்பி கோட்டை ஆச்சே.. டீ எப்படி போவுது?” என்று கேட்டபடி…
என் அடுத்து வெளிவர இருக்கும் நாவலான ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் இங்கே மணி ஆறரை ஆகியிருந்தது. அந்தக் காலை நேரத்திலும் கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெலக்ஸ் தெலக்ஸ் என்று பரபரப்பு தெரிந்தது. போட்மெயில் மெதுவாக நகர்ந்து வந்து நிற்கத் தயாராகிக்கொண்டிருந்தது. ராமு ராமு என்று தீனமான சத்தம். ப்ளாட்பாரத்தில் ரயிலோடு ஓடி வந்து கொண்டிருந்தார் விட்டோபா. வண்டி நின்றது. நான் இறங்கி ப்ளாட்பாரத்தில் நிற்க என் மேல் மோதி அணைத்துக் கொண்டு நின்றார் அவர் மூச்சு…
அன்புள்ள நண்பர்களுக்கு என் வணக்கம். ஒரு சிறுகதையாகத் தொடங்கியது, நண்பர்கள் விருப்பப்படி 400+ பக்கங்களுக்கு வளர்ந்து பெரிய நாவலாக ‘ராமோஜியம்’ உருவாகிக் கொண்டிருக்கிறது. அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு நாவல்களில், 2400 பக்கங்களில் தொடர்ந்த மேஜிக்கல் ரியலிச கதைப் பொழிவு தமிழில் முதன்முதலாக இதற்கு முன் நிகழ நண்பர்களான நீங்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் போல இப்போதும் எனக்குக் கிடைத்து, தமிழில் முதன்முதலாக ’உருவாகும்போதே பிரதியை விவாதிக்கத் தருவதை’த் தமிழில்…
அவர் போன பிறகு கதவு அடைத்து வந்தேன். “புவி, உங்க படம் நான் தசாபதி தான் முதன்முதலா பார்த்தேன். அதுக்கு முந்தி ஆக்ட் கொடுத்திருக்கீங்கன்னு சொன்னீங்களே”, ரத்னா சொன்னாள். ”ஓ நான் நாலு வருஷம் முந்தி, அவன்.. கோஷ்.. ஏமாத்திட்டுப் போனதுமே நடிக்க ஆரம்பிச்சுட்டேன்”. ”ராஜ முந்திரியிலேயா?” நான் கேட்டேன். ”இல்லை, மதறாஸ். திரும்பி வந்தாச்சு” என்றாள். புரியாமல் பார்த்தோம். ”ராஜமுந்திரிக்கு அஞ்சு மைல்லே கோலமூரு தான் என் பூர்விகம். அப்பா பத்து ஏக்கர் நிலம் வச்சிருக்கார்.பி.ஏ…
வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் தெலக்ஸ் தலையைச் சாய்த்தபடி சிரித்தாள். ”எம்விஎம் செட்டியார் சார் அடுத்த படம். காரைக்குடி பக்கம் கல்லல்னு ஒரு ஊர். பக்கத்திலே செம்மண் பிரதேசத்துலே அவசர அவசரமா ஸ்டூடியோ டெவலப் பண்ணி அங்கே தான் ஷூட்டிங் எல்லாம்.. படிச்சிருப்பீங்களே பத்திரிகையிலே”. இது என்னைக் கேட்டது. பின்னே இல்லையா? பாராயணமே பண்ணி இருக்கிறேன். ”நாங்க கும்பகோணம் போறோம்” என்றேன் பெருமையோடு. ”அதான் கேட்டேன், அடுத்த தேன் நிலவான்னு…..
உள்ளே உட்கார்ந்ததும் மெத்தை தைத்த இருக்கையில் படுத்துப் பார்த்தாள். ”என்னங்க, படுக்க இடம் சரியா இல்லையே”. நான் அவளை எழுந்து நிற்கச் சொல்லிவிட்டு, பின்னால் தாழ்ப்பாள் போட்டு மாட்டி இருந்த மெத்தைப் படுக்கையை மெல்ல இறக்கினேன். ஓஓஒ என்று குழந்தை போல் குதூகலித்து, சந்தோஷப்பட்டு, ஒரு நிமிடம் படுத்து எழுந்து, உயரத்தில் உட்கார்ந்து சிரித்தாள். ரயில் கிளம்பினதும் இந்த மெத்தையை இறக்கலாம் என்று அதை திரும்பப் பொருத்தி வைத்தேன். ”நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமா இந்த இடம்?…