என் அடுத்து வெளிவர இருக்கும் நாவல் ‘ராமோஜியம்’ பற்றி – About my forthcoming novel RAMOJIUM

அன்புள்ள நண்பர்களுக்கு என் வணக்கம்.

ஒரு சிறுகதையாகத் தொடங்கியது, நண்பர்கள் விருப்பப்படி 400+ பக்கங்களுக்கு வளர்ந்து பெரிய நாவலாக ‘ராமோஜியம்’ உருவாகிக் கொண்டிருக்கிறது.

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு நாவல்களில், 2400 பக்கங்களில் தொடர்ந்த மேஜிக்கல் ரியலிச கதைப் பொழிவு தமிழில் முதன்முதலாக இதற்கு முன் நிகழ நண்பர்களான நீங்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் போல இப்போதும் எனக்குக் கிடைத்து, தமிழில் முதன்முதலாக ’உருவாகும்போதே பிரதியை விவாதிக்கத் தருவதை’த் தமிழில் முதன்முதலாக நான் செய்கிறேன் – உங்கள் ஆதரவோடு.

நாவல் எழுதும்போதே சமூக ஊடகத்தில் துண்டுகளாகப் பிரசுரித்துப் பங்கிட்டுக் கொள்வதை இந்த நாவலுக்கு நான் முதன்முதலாகச் சோதனை செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முந்திய என் நாவல்களில் 1975, தியூப்ளே வீதி, வாழ்ந்து போதீரே ஆகியவற்றை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பங்கிட்டு வந்தாலும் முழு நாவலையும் எனக்குத் தோன்றிய வரிசையில் கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து பின்னூட்டங்கள் மூலம் வாசகர் கருத்தோட்டத்தை அறிய முற்படுவது இப்போது தான் நடக்கிறது.

நண்பர்கள் தொலைபேசும்போது, ராமோஜியம் பற்றிக் கருத்துச் சொல்லத் தவறுவதில்லை. கொரானா வைரஸ் இயல்பு வாழ்க்கையை, கலை இலக்கியத் தேடலை முழுக்க முடக்க முற்படும் இந்தக் காலகட்டத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்க என்னால் ஆன இலக்கியப் பணி – பயணமாக ராமோஜியத்தின் மூலம் 1940-களில் நிகழ்ந்த வாழ்க்கையின் சில கணங்களைக் கண்டும் பங்கு பெற்றும் சேர்ந்து அனுபவித்தும் வர உங்களைச் சகபிரயாணிகளாக வரவேற்கிறேன். அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள்.
———————————————————————————-

thanks all my friends. I’m experimenting with a new initiative – sharing this new novel of mine, RAMOJIUM in the social media as the novel progresses.

I attempted this to a lesser extent with my previous novels Dupleix Veedhi and 1975. It is all together a satisfying experience for me and I observe most of you like reading the kaliedoscopic fragmented shares, responding almost immediately to the updates.

Apart from my FB friends liking the shared narration on my timeline, there are others who phone me up about their reading experience either in FB or in my web page www.eramurukan.in

A few of my good friends have also (sort of) found fault with me for sharing a huge novel in a fragmented manner even before the first edit has happened,

My refrain to them is – why not? The work evolves this way too, with inputs and feedback as it continues to develop. Thanks my dear friends…. thank you very much

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன