Archive For The “பொது” Category
‘றெக்கை;’ -அத்தியாயம் 2 சொல்வனம் இணைய இலக்கிய இதழில் -v———————————————————- Rekkai chapter 2 டாக்டரம்மா’ . ஊர்ப் பெரியவர்களில் ஒருத்தர் அழைக்கிறார். ”ராட்சச வண்டிக்காரி’ – குரல்கள் காத்திரமாகச் சேர்ந்து ஒலித்தன. டாக்டர் நிர்மலா நின்றாள். எல்லா வீட்டுக் கூரை மேலும் சுரைக்காய் காய்த்துத் தொங்கியதை பார்த்தபடி நிர்மலா ஊர்ப் பெரியவர்களிடம் சொன்னாள் – நான் உள்ளே போய் மரியாதை செலுத்திட்டு வந்துடறேன். அவளை வரவேற்கலாமா அல்லது திருப்பி அனுப்பிவிடலாமா என்று முடிவுக்கு வர முடியாமல்…
இன்று அகவை எழுபத்தைந்தில் அடியெடுத்து வைக்கும் என் அருமை நண்பன் பெருங்கவிஞர் -நாவல் ஆசிரியர் –கட்டுரையாளர் கலாப்ரியாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.. கோவில்பட்டியில் இன்று கலாப்ரியா -75 விழா சீரும் சிறப்புமாக எடுக்கப்படுகிறது. இன்று வெளியிடப்படும் விழா மலரில் என் கட்டுரை – ——————————————————————— . கலாப்ரியாவும் நானும் எது கவிதை? தொடக்கப் பள்ளிக் காலத்தில் வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு குழு இசைப் பாடல். ’கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி…
i இந்த வாரம் வெளியான என் அல்புனைவு கட்டுரைத் தொகுதி ‘எடின்பரோ குறிப்புகள்’ நூலில் இருந்து ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரும் ஓபராவும் இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரின் இசை முயற்சிகள் எல்லாமே பெரிய தோதில் இசையமைப்பும், பிரம்மாண்டமான கட்டமைப்பும் கூடியவை. ஏ.ஆர். ரெஹ்மானின் கூட்டுறவில் அவர் உருவாக்கி இரண்டு வருடம் முன்னால் சக்கைப்போடு போட்ட ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பாலிவுட் திரைப்படப் பாதிப்பில் உருவான ம்யூசிக்கல் ஆன மும்பைக்…
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை இலக்கியப் பங்களிப்பு சிறப்பானது. கொலட்கரின் ‘ஜெஜூரி’ (ஆங்கில) ’ கவிதை தொகுப்பில் இருந்து- ————————————————————– யஷ்வந்த்ராவ் ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும். பெயர் யஷ்வந்த் ராவ். அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர். அடுத்த முறை ஜெஜூரி போகும்போது அவசியம் பார்த்துவிட்டு வாருங்கள். ரெண்டாம் தரக் கடவுள்தான் அவர். இருப்பது கோவிலுக்கு, கோவில் மதிலுக்குக்…
மகளிர் தின வாழ்த்துகள். ‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். ————————————————————————- 5 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 20, திங்கள்கிழமை ஒரு ரெண்டு நிமிசம் தாமதமா வந்ததுக்கு இந்த கூச்சல் போடுறிங்களே எத்தனை நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஏழு எட்டுன்னு நேரத்தைப் பாக்காம வேலை பார்த்திருக்கேன். அதுக்கு என்ன தனியாவா அதிகக் கூலி போட்டுக் கொடுத்தீரு? இப்படி அவன் (கரும்புத் தோட்டத் தொழிலாளி) கேட்க (கங்காணியான)…
நீண்ட எண்பத்தெட்டு அத்தியாயங்களோடு பெருநாவல் மிளகு 2021 ஜூன் முதல் 2025 ஃபெப்ருவரி வரை சொல்வனம் இணைய இதழில் சீராக வெளியாகிப் பின்கதையோடு இந்த வாரம் நல்ல வண்ணம் நிறைவடைந்தது, இந்த நாவல் எழுதிக் கொண்டிருக்கும் போதே சொல்வனம் இணைய இதழில் பிரசுரமாக நண்பர் பாஸ்டன் பாலா முன்கை எடுத்தது சிறப்பாக இருந்தது. எண்பத்தெட்டு அத்தியாயங்களை இரண்டிரண்டு அத்தியாயம் ஒரு மின்கோப்பாக வடிவமைத்து – நாற்பத்திநான்கு கோப்புகள் – நான் ஒவ்வொன்றாக அனுப்பி வைப்பேன். அனுப்பிய பிறகு…