Archive For மே 22, 2025

Dementia induced incontinence in Tamil novel

By |

Dementia induced incontinence in Tamil novel

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் மூன்று- அர்சூர் நாவல் – மூன்று திரும்பவும் போயாச்சா? பேஷ் கற்பகம் காட்டுக் கூச்சலாகச் சத்தம் போட்டாள். அடிக்காதேடி. அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன். ஹாலில் பிரம்பு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு குனிந்து நின்றார் நீலகண்டன். பயத்தோடு அவளைப் பார்த்தார். அவசரமாக உள்ளே போனாள். அது உள் பக்கமா, வெளியே போகிற பாதையா? எதோ ஒன்று. அங்கே சுவரில் ஆணி அடித்து நீலகண்டனின் சட்டை தொங்கும். பக்கத்தில் நீளமாகக் கயிறு கட்டி பெயர்…




Read more »

அமெரிக்கா(னா)விலிருந்து அடிசெ எழுதிய அடுத்த புனைகதை

By |

அமெரிக்கா(னா)விலிருந்து அடிசெ எழுதிய அடுத்த புனைகதை

சிமாமண்டெ அடிசி விருது பெறாவிட்டாலும், சரவணன் Saravanan Manickavasagam சொல்கிற மாதிரி ஓர் இலக்கிய சூப்பர்ஸ்டார்.. அவரது மூன்றாம் நாவல் டெத் கவுண்ட் நூலை அடுத்துப் படிக்க வேண்டும். அடிசியின் இரண்டாவது மெகா நாவலான அமெரிக்கானா பற்றி என் அல்புனைவு வாதவூரான் பரிகள் நூலில் இருந்து – அமெரிக்கானா ———————— கருப்பர் இனம், ப்ரஸீலிய காஃபிக் கலர் இனம், மஞ்சள் சீனர் இனம் என வேறுவேறு இன புனைகதை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான புதினங்கள் ஏதும்…




Read more »

காற்றினிலே வந்து காதில் தங்கிய நாதம்

By |

காற்றினிலே வந்து காதில் தங்கிய  நாதம்

எழுதக் கொஞ்சம் நேரமும், அச்சிலும், தேர்ந்தெடுத்து நெட்டிலும் வாசிக்கச் சற்று நேரமும், முதுகு வலிக்குக் சிறிது நேரமுமாக நாட்க:ள் நகர்கின்றன. வாத்திமர் நாவல் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஜூன் இறுதியில் நிறைவு பெறும் புதுமையான இந்தப் புதினம். ஈதிப்படி இருக்க, சொல்வனம் இணைய இலக்கிய இதழில் நண்பர் சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய ‘ஐவர் – தமிழின் நம்பிக்கை’ என்ற கட்டுரை வாசிக்கக் கிடைத்தது. தேர்ந்த வாசகரும் விமர்சகருமான சரவணன் தேர்ந்தெடுத்த முதல் ஈடு நன்னம்பிக்கை நட்சத்திரங்கள் குறிப்பிடத் தகுந்தவர்களே….




Read more »