Archive For மே 10, 2020
1946 ஜனவரி 1, செவ்வாய்க்கிழமை புதுவருடம் பிறந்தது. பிறக்கும்போதே போர் இல்லாத இந்த வருஷத்தை எப்படி எதிர்கொள்வோம் என்று இனம் புரியாத பயமோ, சங்கடமோ எட்டிப் பார்த்தது உண்மை. ஹோ அண்ட் கோ டயரியை எனக்கும் பந்துலு சாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளோடு தெலக்ஸ் புவனா அனுப்பி வைத்திருந்தாள். அவளுக்கு இந்தப் புத்தாண்டு பம்பாயில் ஷூட்டிங்கோடு பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி. புது வருடம் ரேடியோ செய்தி அறிக்கையோடு தொடங்கியது. ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோ தான் சூரிய வம்சத்தில் பிறந்தவர்…
”வேலை அதிகம் இருக்கா? ஞாயிற்றுக்கிழமை கூட ஆபீஸ் போய்ட்டு வரீங்க போல இருக்கே?” விலாசினி கண்ணில் கருணை பொங்க விசாரித்தாள். அதில் அனுதாபமும் அன்பும் மேம்பூச்சாக இல்லாமல் உள்ளோடிக் கலந்திருந்ததைக் குழைவான அவளுடைய குரலில் அனுபவித்தேன். ”இல்லே இல்லே இன்னும் அவ்வளவு மோசமாப் போகல்லே.. பேமிலி ப்ரண்ட்.. காளிங்க ரத்தினம் சார் வாங்களேன்னு கூப்பிட்டிருந்தார்.. வாரா வாரம் நானும் ஒத்தி வச்சு, இன்னிக்கு ரத்னா மாதர் சங்கக் கூட்டம்னு போனதாலே கிளம்பிட்டேன்..” பெருமையோடு சொன்னேன். ”காளி சாரோடு…
காளி வீட்டில் இருந்து இறங்கும்போது தெலக்ஸ் புவனா நினைவு வந்தது. அவள் சேலத்துக்கு ஷூட்டிங் என்று போய் ரெண்டு நாளானதால் வீடு பூட்டி இருந்தது. இருக்கட்டும், அடுத்த வாரம் ஊர் சுற்றும்போது வரலாம். திரும்பி வர மின்சார ரயிலுக்காகக் காத்திருந்தபோது ஞாயிறு என்பதாலோ என்னமோ கூட்டமே இல்லை. அரை மணி நேரம் நின்ற பிறகு ரயில் வந்து அலுப்போடு நின்றது. எனக்கு முன்னால் நின்ற கம்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பயணி, விலாசினி. அவசரமாக ட்ரெயினில் ஏறினேன். கை…
”தேக்லோ, லோக்கல் பாஷை தெரியாது சரிவர. தொழில்லே பம்பாய் மாதிரி வாய்ப்பு அதிகம் இல்லாட்டாலும் இங்கேயும் போட்டா போட்டி, வாடகைக்கு இடம் கிடைச்சாலும் கழுதை வளர்க்கறான்னு தெரிஞ்சா காலி பண்ணச் சொல்றாங்க.. இந்த வீட்டுலே என்னமோ கழுதை வந்தா யோகம் வரும்னு ஆரூடம் இருக்காம்.. அதான் ஆறு மாசத்துக்கு மட்டும் கழுதை, குதிரை எல்லாம் வீட்டு வாசல்லே கட்டி வச்சுக்க வீட்டு ஓனர் அப்புக்குட்டி அனுமதி கொடுத்திருக்காராம்.. அவர் போகச் சொன்னா, வேறே வீடு பார்க்கற கஷ்டம்…
”குந்தி வீட்டுக்காரர் சினிமாவிலே ஆர்ட் டைரக்டராம்..” “என்னது, ஆர்ட் டைரக்டரா?” “ஆமா, அப்படித்தான் சொன்னா குந்தி”. பூணூலை கயிறு மாதிரி கனமாகப் போட்டுக்கொண்டு ஆசாரம் கொண்டாடிக்கொண்டு வருகிற சினிமாக்காரரைக் கற்பனை செய்யவே சிரமமாக இருந்தது. எதற்கு சினிமா சான்ஸ் அதிகமான பம்பாயை விட்டு இங்கே தென்னிந்தியாவின் மூலையில் மதறாஸுக்கு குடும்பத்தோடு வந்திருக்கிறார் அந்த தேஷஸ்த பிராமணர்? சாயந்திரம் ஆபீஸ் விட்டு வரும்போது அந்தப் பக்கம் இயல்பாகப் பார்க்க, எழுந்து வந்த சிரிப்பை அடக்கியபடி நகர்ந்தேன். உள்ளே இருந்து…
”ராமோஜி சார், காப்பி குடிச்சீங்களா?” சனிக்கிழமை காலை ஓசி காப்பிக்காகவும், அதோடு ஊர் வம்புக்காகவும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தோளில் குடையைத் தொங்கவிட்டுக்கொண்டு மெல்ல நடந்து வந்தார் எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு. நான் வீட்டுத் திண்ணையில் சுதேசமித்திரன் படித்தபடி இருந்ததைப் பார்த்து அவர் படியேறி வந்தது அரை மணி நேரம் முன்பு. வந்ததும் குடையை சுவரில் ஓய்வாகச் சாய்த்து வைத்தார் அவர். அப்புறம் ”உங்க வைஸ்ராய் என்ன சொல்றார்?” என்று அக்கறையாக விசாரித்தார். என்னமோ நானும், வைஸ்ராய்…