Archive For மே 14, 2020

1946 – மதறாஸ் : ராமோஜியம் நாவலின் பகுதி

By |

பந்துலுவின் மேஜை மேல் குவிந்து கிடந்தன பழையதும் புதியதுமாக ஃபைல்கள். நான் தினசரி ஏதாவது பற்றி அவரோடு பேச வரும்போதும் அதெல்லாம் இருந்தாலும், இந்த நாற்காலியில் உட்கார்ந்ததும் அதிகமாகப் பெருகி எனக்காகக் காத்திருப்பதாக பிரமை. என்னைப் பெருங்காயமாகக் கரைத்து ஒன்றுமில்லாமல் செய்ய இத்தனை ஃபைல்கள். இன்னும் வருகின்றன. நான் முதல் ஃபைலைத் திறந்தேன். நரசய்யாவுக்கு விஜயவாடா கலெக்டர் ஆபீசுக்கு இட மாற்றம் அனுமதித்து நோட் போட்டிருந்தது. ஆராவமுதன் போட்ட நோட்டு. அவர் தலை கதவுக்கு அந்தப் பக்கம்…




Read more »

தியூப்ளே வீதி நாவல் குறித்து வாசகசாலை கார்த்திகேயன்

By |

தியூப்ளே வீதி நாவல் குறித்து வாசகசாலை கார்த்திகேயன்

தியூப்ளே வீதி “அழகான பெண்களே, என் இன்னுயிர்த் தோழிகளே, எல்லாக் கசடுகளோடும் நான் இன்னும் உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் உங்கள் அன்பும் உங்கள் மேல் என் தீராக் காதலும்தான் காரணம். உடலும் காமமும் எரிந்து தீரும். நான் இருப்பேன் நீங்களாக!” – நாவலில் இருந்து இரா.முருகன் ஸார் அவர்களின் படைப்புகளில் முதன்முதலில் நான் வாசித்தது “மூன்று விரல்” நாவல். அதற்குப் பிறகு நினைவில் இருப்பதில் முதலாவது என்றால் “நெம்பர் 40, ரெட்டைத் தெரு” புனைகதைதான்….




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – 1946 ஜனவரி ஆர்தர் ஆஷ்லே – மதறாஸ் கவர்னரின் காரியதரிசியை ராமோஜிராவ் சந்தித்தபோது

By |

பந்துலு சார் கவர்னரின் செக்ரெட்டரி துரைக்கு ஃபோன் பண்ணி, அந்த துரை சொன்னபடி நடந்ததாம் இது. வீரையா ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரும்போது வெளியே போய்க்கொண்டிருந்தாராம் பந்துலு. அவர் வீரையாவிடம், ”இந்தக் கடுதாசிகளை அவசியம் ராமோஜி சாரிடம் சேர்த்து விடு” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னான் அவன். முதல் கடிதம் என் பெயர் கவரில் எழுதியது. அடுத்தது மிஸ்டர் ஆர்தர் ஆஷ்லே என்று கவர்னரின் செக்ரெட்டரிக்கு விலாசம் எழுதியது. ”அன்புள்ள ராமோஜி, என் தகப்பனார் வால்ட்டேரில்…




Read more »

ஜனவரி 1946, மதறாஸ் – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

”பலகாரச் செலவில் பாதிக்கு பாதியாவது வாடகையிலே கழிச்சுக்க முடிஞ்சா இந்த மாசம் கையிலே காசு ரொம்ப கஷ்டப்படுத்தாமே புழங்கும்”. சாஜு கூடவே முறையிட்டார். எனக்கு இந்த முறையீட்டில் புரியாத பகுதி உண்டு. அப்புக்குட்டியின் பெண்டாட்டி இறந்து போய் பத்து வருஷமாகிறது. நான் வீடு விலைக்கு வாங்கி இங்கே குடி வந்ததற்கு ஒரு மாதம் முன்புதான் அந்தம்மா நோய் கண்டு மரித்தது. அவள் எப்படி ஸ்வீட் செய்யக் கற்றுக்கொள்ள வந்தது? ரத்னா இம்மாதிரி புதிர்களை விடுவிக்கக் கூடியவள். அவளிடம்…




Read more »

ராமோஜியம் – ஜனவரி 1, 1946 செவ்வாய் – சென்னை

By |

”ஸ்வாகத ஆஹே பாவு” இந்த சகோதரனுக்கு மராட்டியில் நல்வரவு சொல்லி வரவேற்றாள் குந்தி. பின்னாலேயே சாஜுயும் கை கூப்பியபடி வந்தார். ”துமி சகளே கஸே ஆஹத்?” அவர்கள் எல்லோருடைய நலமும் – கழுதைக்குட்டி உட்பட – பொதுவாக விசாரித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். காப்பி, டீ எதுவும் வேண்டாம் என்று முன் ஜாக்கிரதையாகச் சொல்லி வைத்தேன். இந்தத் தெருவிலேயே முதல் தரமான காப்பியும் டீயும் ரத்னா கலந்து தருவதுதான். புரசைவாக்கத்திலேயே என்று கூடச் சொல்வேன். சமையல்கட்டில் ஏதோ களேபரமாக…




Read more »

ஜனவரி 1, 1946 சென்னை – ’ராமோஜியம்’ புதினம் சில பகுதிகள்

By |

இன்றைக்கு முத்தியால் நாயக்கன் தெரு புத்தாண்டு கோலாகலத்தோடு கலகலப்பாகக் கண்விழித்த போது கழுதை வெள்ளையன் கனைத்துக்கொண்டு யார் கையிலும் பிடிபடாமல் சுற்றிச்சுற்றி ஓடியது. எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையப் பார்த்து, ரத்னா எவர்சில்வர் தட்டில் சப்பாத்திக் குழவியால் கொட்டி முழக்க வந்தவழியே திருப்பி ஓடியது அது. திண்ணைக்கு காப்பி டம்ளரோடு போனபோது ”இன்னும் ரெண்டே வாரத்திலே போகியும் பொங்கலும் வந்துடும். கொட்டு எல்லாம் போகிக்கு வச்சுக்க.. தட்டு பொங்கலுக்கு வச்சுக்கோ’ என்றேன் ரத்னாவிடம். காப்பியும் சுதேசமித்திரனுமாக சாய்வு…




Read more »