Archive For மே 18, 2020

சகலநேசனும் 1946 மதறாஸும் – எழுதி நிறைவு பெறும் ராமோஜியம் புதினத்தில் இருந்து

By |

”எப்படி ஆடறோம்?” பத்திரிகையை என் முகத்துக்கு நேர்பிடித்தாள். எனக்கு எல்லாம் பழகிவிட்டிருந்தது. சகல நேசனின் உடும்புத் தைலமும், அறுபத்து நாலு கரணமும் நிஜமாகவும் கிட்டத்தட்ட அதே நிலைக்குக் கொண்டு போய் விட்டதைப் போல் அம்மணமாக ஆடுவது கிளர்ச்சியூட்டவில்லை தான். எழுதட்டும். இனி இது பற்றி எழுத ஒன்றுமில்லை என்று நிறுத்தி விடுவார்கள். நாலு பேர் அடுத்த வீட்டு காம்பவுண்டில் இருந்து பார்த்தால் பிரபலமானேன் என்று அர்த்தம். தலையைக் கண்டதும் டிரைவரும், தோட்டக்காரனும், சமையல்காரியும் குசுகுசுவென்று பேசினால் மேல்தட்டு…




Read more »

என் வரவிருக்கும் நாவல் ராமோஜியம் – 1946 சென்னை – சகலநேசன்

By |

அவரையும் கூட்டிக்கொண்டு அடுத்த தெரு பாலாஜி பவனில் காப்பி குடித்து வரும்போது கேட்டேன் – “உமக்கு தோபிகானா தெரியுமா?” “தெரியுமாவாவது.. நான் அங்கே எம்முட்டு துணி தூக்கிப் போயிருக்கேன்..” ”நாயுடு, குழப்பறீர்” என்று புகார் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “அதில்லே சார், எங்க வீட்டுக்கு சலவைக்காரர் அங்கே தான் இருந்தார்.. நானும் சேத்துப்பட்டுக்காரன் சாமி… வளர்ந்ததெல்லாம் தோபிகானாவிலேதான்”. மறுபடி குழப்பற்றிங்க நாயுடு .. அங்கே துணி வெளுக்கத்தான் இடம் இருக்கு, நாயுடு போன்ற முரட்டுப் பிள்ளைகளை எப்படி,…




Read more »

புதினம் ‘ராமோஜியம்’ – ஒரு சிறு பகுதி – சகலநேசன் 1946 ஜனவரி

By |

உடம்பு கொஞ்சம் ஓய்வெடு என்று முரண்டு பிடித்தது. சூபரின்டெண்டெண்ட் பதவி இல்லாதிருந்தால் ஆபீசுக்கு ஒரு நாள் லீவு சொல்லியிருப்பேன். எல்லா அக்கப்போரும் சகித்து, நீள நீளமாகக் கையெழுத்து போட்டு, நிறைய ஃபைல் நோட்டிங்குக்கு ரிடர்ன் என்று சிவப்பு மையில் எழுதித் திருப்பி அனுப்பி, ஓர் ஆபீஸ் நாள் கடந்து போனது. சாயந்திரம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது சாஜுவை வீட்டு வாசலில் பார்த்தேன். முகம் மலர்ந்திருந்தார். காலையில் எம்விஎம் செட்டியார் ஆளனுப்பிக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறாராம். அடுத்த…




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – சகலநேசனில் தகவல் வந்த ஜனவரி 1946 மதறாஸ்

By |

ரத்னாவை மனதில் அவள் இடத்தில் ஒன்றுக்கு ஒன்பது பூட்டு போட்டுப் பூட்டி வைத்தேன். புவி என்றேன் கிளுகிளுப்பாக அவள் கூந்தலில் முகம் மறைத்துப் பின்கழுத்தில் முத்தமிட்டபடி. என்னடா என்றாள் அவள் என் தோளில் கடித்து. இதெல்லாம் தசாபதி என்கிற கருப்பு வெள்ளை சினிமாவில் நடக்கிறது. நான் அங்கே அனாவசியமாகப் புகுந்தது தெரிய வந்து என்னைத் துரத்திவிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தேன். ”மச்சி, தேவிடியாக் கச்சேரி பார்க்க சூபரின்டெண்டெண்ட் வந்திருக்கார்.. காப்பி எடுத்துவரச் சொல்லுங்க” தசாபதியின் அம்மா என்னைச்…




Read more »

ராமோஜியம் – நாவலில் இருந்து ஒரு பகுதி – சென்னை 1946

By |

புவனாவின் ’சுந்தரி’ பங்களா வாசலில் அவளுடைய ஆஸ்டின் கார் சமர்த்துக் குட்டிப்பாப்பா போல் நின்றுகொண்டிருந்தது. தோட்டக்காரனும், டிரைவரும், சமையல்காரியும் கண்ணில் படவில்லை. பக்கத்து காம்பவுண்டில் அந்த வீட்டு ஊழியர்கள் அவசர மகாநாடு கூட்டி எதையோ விவாதித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. என்னைப் பார்த்ததும் ஆயியே சாப் என்று கூர்க்கா சல்யூட் அடித்து உள்ளே அனுப்ப அவர்களின் பேச்சு நின்றது. கூட்டமாக அவர்கள் என்னைப் பார்த்தபடி அடுத்த வீட்டுக்குள் போனார்கள். அவர்கள் போகும்வரை வாசலில் நின்று விட்டு, அழைப்பு மணியை…




Read more »

சூபரிண்டெண்டெண்ட் ராமோஜி 1946 ஜனவரி – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

கேண்டீனுக்குப் போனபோது எனக்கு அதிகார போதை தலைக்கேறி இருந்ததாக உணர்ந்தேன். எதிர்ப்பட்ட எல்லோரும் மரியாதையாகச் சிரித்து ஒரு அடி விலகி நின்று கைகுவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நாலைந்து பேர் அப்படி மனசைக் குளிர்வித்தார்கள் தான். ஆனால் பல பேர், என்னைப் பார்த்ததும் ஒதுங்கி ரெண்டு மூணு பேராக நின்று உற்றுப் பார்த்து ஏதோ தகவல் சரி பார்க்கிறதாகத் தலையாட்டிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நல்லா வயிறு எரியட்டும்.. நான் டெம்பரரி சூபரின்டெண்டெண்ட்… அது நிரந்தரமாக என்ன சூசனைகளும்…




Read more »